தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நேற்று (09.03.2017) நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு கிராம ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் குடிநீர் வழங்கப்படுவதை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மேல் நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். குளோரினேசன் செய்த தண்ணீர் வழங்க வேண்டும். குடிநீர் ஆதாரம் குறையும் போது மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளில் புதிய வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கும் போது மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி செய்யப்பட்டிருப்பதை தற்போது பழுதாகியிருக்கும் அதனை சரி செய்ய வேண்டும். இது தொடர்பாக வரி வசூல் செய்யும் ரசீது மீது மழை நீர் சேகரிப்பும், நிலத்தடி நீரை உயர்த்துவோம் என்ற வாசகம் அடங்கிய ரசீதில் முத்திரை குத்தி வழங்கலாம்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகள் வரத்து வாய்க்கால், கண்மாய், போன்ற பகுதியில் தூர் வார வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள முறையற்ற குடிநீர் இணைப்புகளை காவல் துறையினருடன் இணைந்து அகற்ற வேண்டும்.
மின்வாரிய அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை அறிந்து அதற்கேற்ப மின் மோட்டாரை இயக்கிட மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஊராட்சிகள் வாரியாக கால்நடை பராமரிப்புத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊ) முருகேசன், உதவி இயக்குநர் (தேர்தல்) நாகராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், ராமலிங்கம், நகராட்சி ஆணையர்கள் உமாமகேஸ்வரி, (கும்பகோணம்) அட்சயா (பட்டுக்கோட்டை), செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.