அதிரை நியூஸ்: துபாய், மார்ச்-10
அமீரகம் துபாயில் DFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி குளோபல் வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிரை, முத்துப்பேட்டை உள்ளிட்ட 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர்.
இதில் அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி மற்றும் டூ ஆர் டை கிரிக்கெட் அணி கலந்துகொண்டு விளையாடினர். அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணியில் சலீம் தலைமையில் அப்துல் பத்தாஹ், யாசீன், அமீனுதீன், ஷமீமுதீன், அஸ்லம், தமீம், அஹமது, ஆஷிக், சமீர், பிலால் ஆகிய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.
தொடக்கத்தில் டாஸ் வென்ற அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 16 வது ஓவரில் 5 விக்கெட் இழந்து 78 ரன்கள் ( 144/5 ) வித்தியாசத்தில் டூ ஆர் டை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை 7 முறையாக தட்டிச்சென்றது. பின்னர் ரொக்கப்பரிசாக அமீரக நாணயம் 1500 திர்ஹம்ஸ் வழங்கப்பட்டன. அதிரை அணியை எதிர்த்து விளையாடிய டூ ஆர் டை அணி 15 வது ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 'மேன் ஆஃப் த சீரிஸ்' பட்டத்தை அதிராம்பட்டினம் அஸ்லம் தட்டிச்சென்றார். சாதனை நிகழ்த்திய இவருக்கு சக வீரர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர். அதிரை அணி, அமீரகத்தில் இதுவரையில் நடந்த கிரிக்கெட் தொடர் போட்டிகளின் இறுதி ஆட்டங்களில் 8 முறை கலந்துகொண்டு 7 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்திலிருந்து இர்பான் ( அதிரை தென்றல் )

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.