அதிராம்பட்டினம், ஆக. 09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் போது காதைப்பிளக்கும் அளவில் பலத்த இடி இடித்தது. இதில் கிழக்கு கடற்கரைச்சாலை பிலால் நகர், பெட்ரோல் நிலையம் அடுத்துள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு இரவு 10 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிராம்பட்டினம் மின்சார வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் புதன்கிழமை காலை ஈடுபட்டனர். பழுது சரிசெய்யபட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் மின்வாரிய உதவி பொறியியாளர் பிரகாஷ் தலைமையில், போர்மேன் தங்கராசு மேற்பார்வையில் மின்சார வாரிய ஊழியர்கள் 6 பேர் பணியில் ஈடுபட்டனர். சுமார் 18 மணி நேரம் மின்தடையால் பிலால் நகர் குடியிருப்புவாசிகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.
இதுகுறித்து மின்சார வாரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நடவடிக்கை எடுக்க உதவிய 'சமூக ஆர்வலர்' கே.எம்.ஏ ஜமால் முஹம்மது கூறியது;
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை பிலால் நகர் பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் 100 KV திறன் கொண்டது. இதில், இப்பகுதி குடியிருப்புகள் மின் இணைப்புகளோடு, பெட்ரோல் நிலையம், வெல்டிங் பட்டறைகள் உள்ளிட்ட சில தொழிற்கூடங்கள் மின் இணைப்புகளை பெற்றுள்ளன. இதனால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
இதுதொடர்பாக இப்பகுதிவாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் பேரில், 250 KV திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து, அதில் தொழிற்கூடங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் தனித்தனியாக பீடர் லைன் அமைத்து தர கோரி சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.