![]() |
| File Image |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
2017-18 ஆம் ஆண்டு நபார்டு நிதி உதவி திட்டம் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழஞ்செட்டித் தெரு முதல் சால்ட் லைன் வரையிலான பகுதிகளில் சுமார் 1200 மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைப்பது மற்றும் அதே திட்டத்தின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா தெரு முதல் யாதவர் தெரு வரையிலான பகுதிகளில் சுமார் 1200 மீட்டர் நீளத்தில் தார் சாலை அமைப்பது ஆகிய 2 பணிகளுக்காக வரும் ஜன.19 ந் தேதி வெள்ளிக்கிழமை டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Please visit adirai AJ NAGAR area. There is no road facility...
ReplyDelete