.

Pages

Showing posts with label இந்திய கம்யூனிஸ்ட். Show all posts
Showing posts with label இந்திய கம்யூனிஸ்ட். Show all posts

Saturday, October 24, 2020

'வளங்களைக் காப்போம்' கடலோர விழிப்புணர்வு பிரச்சாரம்!

அதிராம்பட்டினம், அக்.24
தேசிய மீனவர் பேரவை மற்றும் ஆதரவு அமைப்புகள் சார்பில், கடல் வளம், நிலவளம், பொதுவளம், சுற்றுச்சூழல், கடலோர மற்றும் விவசாய சமூக வாழ்வாதாரங்களை பாதுகாத்திட வலியுறுத்தி 'வளங்களைக் காப்போம்' எனும் தலைப்பில், கடலோர விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பிரசாரத்திற்கு, ஏஐடியூசி சங்க மாவட்டச் செயலர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். தேசிய மீனவர் பேரவை துணைத் தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார். 

இதில், விவசாய தொழிற்சங்க செயலாளர் சி.பக்கிரிசாமி, ஏ.கலியபெருமாள், பாலுசாமி, பூபேஷ் குப்தா, ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.எச் பசீர் அகமது, பன்னீர்செல்வம், மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


Sunday, October 18, 2020

ஏரிப்புறக்கரை இளைஞர்கள் 20 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்!

அதிராம்பட்டினம், அக்.18
அதிராம்பட்டினம் அடுத்து ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி இளைஞர்கள் 20 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

ஏரிப்புறக்கரை ரமேஷ்கண்ணா தலைமையில், அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி, வசந்த், பாக்கியராஜ், மணிகண்டன், ஜீவா, வினோதன், மனோஜ், மணிவாசகன், திருமாறன், ராஜேஷ், சரண்ராஜ், சேகர், அய்யப்பன், ராஜலிங்கம், பிரகாஷ்,குமார், விக்கி உள்பட 20 இளைஞர்கள், அக்கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச்செயலாளர் என்.காளிதாஸ் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாக இணைந்தனா்.

கட்சி கொள்கை பற்றி ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன் விளக்கிப் பேசினார். அக்கட்சியின், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி செயலாளராக ரமேஷ்கண்ணா, துணைச்செயலாளராக மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.எச் பசீர் அகமது, இ.முகமது பாருக், எம்.சுப்பிரமணியம், எம்.முகமது இக்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


Monday, October 12, 2020

பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூ. மறியல்: 42 பேர் கைது (படங்கள்)

பட்டுக்கோட்டை, அக்.12
வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர். 

மத்திய அரசு அரசின் அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டம், மின்சாரத் திருத்தச் சட்டம், வணிக ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்த சாகுபடி சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் வேளாண் மசோதா சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.திருஞானம், ஒன்றியச்செயலாளர் என்.காளிதாஸ், எம்.எம் சுதாகர், அ.கலியபெருமாள், எஸ்.தனசீலி, புபேஷ்குப்தா, அ.விஜயன், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.எச் பசீர் அகமது உட்பட 42 பேர் கோஷம் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து வேனில் அழைத்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். 


Wednesday, September 23, 2020

அதிராம்பட்டினத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.23
மத்திய மாநில அரசுகளில் தொழிலாளர்கள் விரோத சட்டத்திருத்ததை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதிராம்பட்டினம் கடைத்தெரு முக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

ஆர்பாட்டத்திற்கு, ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.எச் பசீர் அகமது, கே.பிச்சமுத்து, இ.முகமது பாருக், எஸ். மீரா சாகிப், எம். சுப்பிரமணியம், அப்துல் முனாப், எஸ்.ஜாஹிர் உசேன், ஜெ.அப்துல் கபூர், எஸ்.சிக்கந்தர் பாதுஷா, எம்.காதர் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க வேண்டாம், தொழிலாளர் சட்டங்களை நீக்குவது, வேலை நேரத்தை, 12 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை, 2020ஐ திரும்பபெற வேண்டும். ரத்து செய்யப்பட்ட, பி.எஸ்.என்.எல்., டெண்டரை உடனே வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய  ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


Saturday, September 19, 2020

அதிராம்பட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.19
சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் சார்பில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவராணம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, மின்சார திருத்தச்சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும், கொள்கைகளையும் கைவிட வேண்டும், கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும், பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் (பொ) என்.காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.எச் பசீர் அகமது, இ.முகமது பாருக், எம்.சுப்பிரமணியம்,  எஸ். மீரா சாகிப், எம்.முகமது இக்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tuesday, August 18, 2020

அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிய கோரி அதிராம்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.18
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகத்தையும், மூத்தத் தலைவா் இரா. நல்லகண்ணு குறித்தும் சமூக ஊடகங்களில் இழிவுபடுத்தி, அவதூறு பரப்பி வரும் சமூக விரோதக் கும்பலின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஆரப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.எச் பசீர் அகமது, எம்.சுப்பிரமணியம், எச்.அப்துல் முனாப், எஸ். மீரா சாகிப், எம்.முகமது இக்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 
 

Wednesday, August 12, 2020

மீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோரி அதிரையில் ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.12
மத்திய அரசின் தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதா - 2019 வை மறுபரிசீலனை செய்யவேண்டும், தடைசெய்யப்பட்ட இரட்டை மடி சுருக்கு மடி போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இயற்கை வளங்களை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, AITUC மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க மீனவர்கள் புதன்கிழமை அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

இதில், மீனவ சங்க மாவட்டச் செயலாளர் என்.காளிதாஸ், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், எஸ்.பஞ்சவர்ணம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எச்.அப்துல் முனாப், ஒய். பாருக், ஜி. மருதப்பன், சுலைமான், எஸ். மீரா சாகிப், மலர்கொட, சுப்பிரமணியம், எஸ். தர்மலிங்கம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Friday, July 24, 2020

மீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

மல்லிபட்டினம், ஜூலை 24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தடைசெய்யப்பட்ட இரட்டை மடி சுருக்கு மடி போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்து நாட்டுப்படகிற்கும் மானிய விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி AITUC மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், எஸ். முகமது மீராஷாகிப், அப்துல் முனாப் மற்றும் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சியினர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
 
 
 
 

Friday, July 3, 2020

அதிராம்பட்டினத்தில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், ஜூலை 03
அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்த அறிவுறுத்தப்பட்டதன் பேரில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்னியூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், ஏ.ஐ.ஓய்.எப் ஒன்றியச் செயலாளர் கே.ஹாஜா முகைதீன், ஏ.எச் பசீர் அகமது, கே. பிச்சமுத்து, எம்.சுப்பிரமணியம், எம்.முகமது இக்பால், எஸ். முகமது மீராஷாகிப், அப்துல் முனாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு ரூ.22,500 நிவாரணம் வழங்கவேண்டும், கட்டுமானம், ஆட்டோ, கைத்தறி, சுமை, மீனவர், அமைப்பு சாரா உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நிபந்தனையின்றி நிவாரணம் வழங்க வேண்டும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 40 கோடி மக்களுக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே, மின்சார சட்டதிருத்த மசோதாவை கைவிடு, நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், மறுவாழ்வும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.