.

Pages

Showing posts with label உள்ளாட்சி தேர்தல் 2016. Show all posts
Showing posts with label உள்ளாட்சி தேர்தல் 2016. Show all posts

Friday, October 7, 2016

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 24-ம் தேதி நிறைவு !

வரும் 24-ம் தேதி தனி அதிகாரிகள் நியமிக்கப்படும் வரை மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் வழக்கம் போல செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த தேர்தலை ரத்து செய்து சென்னை உய்ரநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. புதிய தேர்தல் குறித்து மீண்டும் அறிவிப்பாணை வெளியிட்டு வரும் டிசம்பர்க்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரநிதிகள் தேர்வு செய்யப்படும் வரை தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 24-ம் தேதி வரை மாநகராட்சி மேயர் தலைமையிலும் நகராட்சி தலைவர்களின் தலைமையிலும், பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையிலும் வழக்கம்போல் பணிகள் நடைபெறும் இதற்கு எவ்வித தடைகளும் இல்லை.  

Tuesday, October 4, 2016

உள்ளாட்சி தேர்தல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் டிசம்பர் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தரக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்துள்ளது.

நன்றி:தினகரன்

அதிரை பேரூராட்சி 16 வது வார்டு அதிமுக வேட்பாளர் அறிமுகம் !

அதிராம்பட்டினம், அக்-04
அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 125 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை அளித்துள்ளனர்.

அதிமுக சார்பில் 16 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: தில்ஷாத்
கணவர் பெயர்: பகுருதீன்
வயது: 29
படிப்பு: உயர்நிலை
தொழில்: குடும்ப பரமாரிப்பு,
அரசியல் அனுபவம்: 18 ஆண்டுகள்
கட்சி பதவி: 16 வது  வார்டு செயலாளர், சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலர்
போட்டியிடும் கட்சி: அதிமுக
போட்டி வேட்பாளர்கள்: நிலோபர் முஹம்மது யூசுப் ( திமுக ),

வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. LED மின் விளக்கு வசதி
5. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
6. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
7. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கூடம் அமைத்தல்
8. அரசின் நலதிட்ட உதவிகள் பெற வழிவகை செய்தல்
9. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாடு நிதி மூலம் திட்டப் பணிகள் நிறைவேற்றுதல்.

அதிரை பேரூராட்சி 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் அறிமுகம் !

அதிராம்பட்டினம், அக்-04
அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 125 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை அளித்துள்ளனர்.

அதிமுக சார்பில் 15 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: ஜென்னத் நிஷா
கணவர் பெயர்: முஹம்மது முகைதீன்
வயது: 38
படிப்பு: உயர்நிலை
தொழில்: குடும்ப பரமாரிப்பு, மீன் வியாபாரி ( கணவர் )
சேவை அனுபவம்: கீழத்தெரு ஜமாத் நிர்வாகி, கடைத்தெரு மீனவர் சங்கம் முன்னாள்  தலைவர்.
அரசியல் அனுபவம்: 25 ஆண்டுகள்
கட்சி பதவி: 15 வது  வார்டு செயலாளர், சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர்
போட்டியிடும் கட்சி: அதிமுக
போட்டி வேட்பாளர்கள்: கன்சுல் மஹ்ரிபா ( திமுக ), உம்மு குல்தூம் ( எஸ்டிபிஐ )

வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. LED மின் விளக்கு வசதி
5. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
6. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
7. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கூடம் அமைத்தல்
8. அரசின் நலதிட்ட உதவிகள் பெற வழிவகை செய்தல்
9. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாடு நிதி மூலம் திட்டப் பணிகள் நிறைவேற்றுதல்.

அதிரை பேரூராட்சி 9 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் அறிமுகம் !

அதிராம்பட்டினம், அக்-04
அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 125 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை அளித்துள்ளனர்.

சுயேட்சையாக 9 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன்
தகப்பனார் பெயர்: முஹம்மது இராவுத்தர்
வயது: 38
படிப்பு: M.B.A., M.Phil.,
தொழில்: ஆன் லைன் சேவை
சேவை அனுபவம்: 13 மாதங்கள் 8 வது வார்டு அதிமுக கவுன்சிலர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்,பாலகர் பள்ளி, சாலை வசதி உட்பட சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நிறைவேற்றம், ஜமாத் நிர்வாகி, கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அதிரை பேரூர் தலைவர்.
அரசியல் அனுபவம்: 6 ஆண்டுகள்
போட்டி வேட்பாளர்கள்: பசூல்கான் ( திமுக ), அஹமது ஹாஜா ( அதிமுக )

வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. அரசின் கல்வி உதவித்தொகை பெற்றுக்கொடுத்தல்
5. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
6. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
7. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கூடம் அமைத்தல்
8. அரசின் நலதிட்ட உதவிகள் பெற வழிவகை செய்தல்
9. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாடு நிதி மூலம் திட்டப் பணிகள் நிறைவேற்றுதல்.
10. LED மின் விளக்கு வசதி

Monday, October 3, 2016

அதிமுகவினர் 21 வார்டுகளில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-03
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிப்பது இன்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் 86 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிரை பேரூர் செயலர் பிச்சை, தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், துணைச் செயலர் முஹம்மது தமீம், சிவக்குமார், உதயகுமார், ஹாஜா பகுருதீன், நஜ்முதீன், அஹமது ஹாஜா, அப்துல் ரஹ்மான் உள்ளிட 21 பேர் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் ஜெய்சங்கர், அன்பரசன் ஜெயசீலன் ஆகியோரிடம் வேட்பு மனுக்களை அளித்தனர்.
 
 
 

அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் 125 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் ( முழு விவரம் )

அதிராம்பட்டினம், அக்-03
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.

கடந்த 29 ந்தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறுவது தொடங்கியது முதல் நாள் வியாழக்கிழமை அன்று 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் அளித்தனர். அதன்பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திமுகவினர் 14 வார்டுகளுக்கும், மனிதநேய மக்கள் கட்சியினர் 4 வார்டுகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 31 பேர் வேட்பு மனுக்கள் அளித்தனர். வேட்பு மனுக்கள் அளிப்பது கடைசி நாளான இன்று திங்கட்கிழமை அதிமுகவினர் 21 வார்டுகளுக்கும், எஸ்டிபிஐ கட்சியினர் 5 வார்டுகளுக்கும், மஜக 1 வார்டுக்கும், பிஜேபி கட்சியினர் 3 வார்டுகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 86 பேர் வேட்பு மனுக்கள் அளித்தனர்.

இதுவரையில் மொத்தம் 125 பேர் வேட்பு மனுக்கள் அளித்துள்ளனர். வேட்புமனுக்கள் நாளை 4ம் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. 6 ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். 

அதிரை பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் M.M.S அப்துல் வஹாப் மருமகள் வேட்பு மனு தாக்கல் ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-03
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிப்பது இன்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிரை பேரூராட்சி 17 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக அதிரை பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் M.M.S அப்துல் வஹாப் அவர்களின் மருமகள், M.M.S அன்வர் அவர்கள் மனைவி ரபீஸ் பானு ( வயது 38), M.M.S தாஜுதீன், M.M.S முஹம்மது யூசுப், M.M.S அப்துல் கரீம், M.M.S சேக் நசுருதீன், M.M.S நிஜார் அகமது, M.M.S ரபி அஹமது, M.M.S பஷீர் அஹமது, P.M.K தாஜுதீன், ஹபீப் முஹம்மது, அப்துல் ரெஜாக், V.T அஜ்மல்கான் உள்ளிட்ட தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயசீலன் அவர்களிடம் இன்று பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 
 
 
 
 
 

முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப் ஆதரவாளர்கள் 15,16,17 வார்டுகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-03
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிப்பது இன்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிரை பேரூராட்சி 15 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக சாகுல் ஹமீது மனைவி ஷாஜஹான் ( வயது 53 ), 16 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக அப்துல் ரெஜாக் மனைவி ஹைருன்னிஸா ( வயது 54 ), 17 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக சேட்டு என்கிற அலி அக்பர் மனைவி நஜீலா ( வயது 31 ) ஆகியோர் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயசீலன் அவர்களிடம் இன்று பிற்பகல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப் ஆதரவாளார்கள் ஆவார்.
 
 
 
 
 

அதிரை பேரூராட்சி 13,19 வார்டுகளுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் சுஹைப்தீன், தாரிக் வேட்பு மனுக்கள் தாக்கல் ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-03
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிப்பது இன்று கடைசி நாள் ஆகும். இதையொட்டி அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிரை பேரூராட்சி 13 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக LMS சைஃபுதீன் மனைவி ராலியா ( வயது 28 ), 19 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக AFFA கால்பந்தாட்ட வீரர் தாரிக் உறவினர் மக்கீன் மரைக்காயர் மனைவி ரஹிலா அம்மாள் ( வயது 45 ) ஆகியோர் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் அன்பரசன் ஜெயசீலன் ஆகியோரிடம் இன்று காலை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதில் செக்கடி பள்ளி நிர்வாகச் செயலர் அபூபக்கர், சமூக ஆர்வலர்கள் அமீன், அஸ்ரப், சேக்தம்பி, அபூபக்கர், முஹம்மது சலீம், முஹம்மது, ஹாரிஸ், முஜீப் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அதிரையில் எஸ்டிபிஐ கட்சியினர் பேரணியாக சென்று வேட்பு மனுக்கள் தாக்கல் ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-03
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிப்பது இன்று கடைசி நாள் ஆகும்.

உள்ளாட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியினர் தனித்து போட்டியிடுகின்றனர். இக்கட்சிக்கு எரிவாயு சிலிண்டர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிரை பேரூராட்சி 10, 13, 14, 15, 19 ஆகிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் முஹம்மது அஜார் அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் கட்சி அலுவலகத்திலிருந்து பேரூராட்சி அலுவலகம் வரை பேரணியாக புறப்பட்டு சென்று அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் ஜெய்சங்கர், அன்பரசன் ஜெயசீலன் ஆகியோரிடம் வேட்பு மனுக்களை அளித்தனர்.

இதில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த தில்சாத் பேகம் ( வயது 32  ) க/பெ. முத்து மரைக்காயர் 10 வது வார்டுக்கும், சக்கீனா ( வயது 53 ), க/பெ. அதிரை அஹமத் 13 வது வார்டுக்கும், வழக்கறிஞர் முஹம்மது தம்பி ( வயது 26  ) த/பெ. முஹம்மது ஜெக்கரியா 14 வது வார்டுக்கும், உம்மு குல்தூம் ( வயது 27 ) க/பெ. ரியாஸ் அகமது 15 வது வார்டுக்கும், சித்தி ஜுலைஹா ( வயது 28 ), க/பெ. முஹம்மது இலியாஸ் 19 வது வார்டுக்கும் மனுக்களை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் முஹம்மது அஜார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அன்வர், அப்துல் ரஹ்மான், சாகுல் ஹமீது, நடராஜ் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

Sunday, October 2, 2016

வாக்காளர்களுக்கு பூத் சீலிப் வரும் அக்-5 ந் தேதிக்குள் வழங்கி முடிக்க அறிவுறுத்தல் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் 02.10.2016 இன்று நடைபெற்றது.

இந்த பயிற்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, அவர்கள் தெரிவித்ததாவது,   உள்ளாட்சித் தேர்தல் 2016 தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரைகளின்படி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம். பெறப்பட்ட வேட்பு மனுக்கள் இன சுழற்சி ஒதுக்கீட்டின்படி உள்ள நிலையில் வேட்பு மனுக்களை சரி பார்த்து பெற வேண்டும்.  நாளை 3.10.2016  வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும்.

மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் பெயர், அகர வரிசையில் எடுக்கப்பட வேண்டும். ஆணையத்தால் வழங்கப்பட்ட சுயேச்சை சின்னங்களை மட்டுமே ஒதுக்க வேண்டும்.

PMK, VCK. MDMK, TMMK, LJP, SDPI ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சிற்றுராட்சி தலைவர், சிற்றுராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர்களுக்கு சின்னம், பெயர்களை குலுக்கல் முறையில் மட்டுமே தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேட்பு மனுக்களுக்குரிய தொகை பெறப்பட்டுள்ளதை  உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பதற்றமான மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் காவலர், வீடியோ, வெப் காமிரா உடன் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் எண் இடப்பட்டது சரிபார்க்கப்பட வேண்டும்.
 
வாக்காளர்களுக்கு பூத் சீலிப் 5.10.2016 க்குள் வழங்கி முடிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்சிக் கூட்டம், ஒலிபெருக்கி, ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தேர்தல் விதிமுறைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோர் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்கள்.

இப்பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.மந்திராசலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன்,  வருவாய் கோட்டாட்சியர் ஜெய்பீம், மாவட்ட நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன்,  வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிரை பேரூராட்சி 11 வது வார்டு அதிமுக வேட்பாளர் அறிமுகம் !

அதிராம்பட்டினம், அக்-02
அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை மும்முரமாக அளித்து வருகின்றனர்.

அதிமுக சார்பில் 11 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: ஆரீபா
கணவர் பெயர்: M.F சாகுல் ஹமீது
வயது: 37
படிப்பு: உயர் நிலை
தொழில்: குடும்ப பராமரிப்பு
போட்டியிடும் கட்சி: அதிமுக
சேவை அனுபவம்: அதிரை லயன்ஸ் சங்க பொருளாளர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர் ( கணவர் )
அரசியல் அனுபவம்: புதியவர்
போட்டி வேட்பாளர்கள்: உம்மல் மர்ஜான் ( திமுக ), ஹபீப் நாச்சியா ( மஜக )

வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. சுகாதார கழிப்பறை வளாகம் அமைத்தல்
5. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
6. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
7. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கூடம் அமைத்தல்
8. அரசின் நலதிட்ட உதவிகள் பெற வழிவகை செய்தல்
9. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாடு நிதி மூலம் திட்டப் பணிகள் நிறைவேற்றுதல்.