.

Pages

Showing posts with label கம்யூனிஸ்ட். Show all posts
Showing posts with label கம்யூனிஸ்ட். Show all posts

Friday, June 26, 2020

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் ஜூன்.27-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் படுகொலைக்கு காரணமான காவல்துறை, உடந்தையாக இருந்த மருத்துவர்கள், சிறைத் துறை அதிகாரிகள், நீதித்துறை நடுவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களை பணிநீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டும். காவல்நிலைய படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

படுகொலை செய்த காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு துணை போகக்கூடாது. பேராவூரணி காவல்துறையினர் விவசாயிகள் சங்கத் தலைவர் கொரட்டூர் நீலகண்டன் மீது பொய் வழக்குப் போடும் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பேராவூரணி அண்ணாசிலை அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.வாசு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சி நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம், இந்துமதி, ராமலிங்கம், ராஜா முகமது, கிளைச் செயலாளர் தயார் சுல்தான் மற்றும் 25 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

Saturday, March 16, 2019

பட்டுக்கோட்டையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, மார்ச்.16-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பொள்ளாச்சி பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்புணர்வு நிகழ்ச்சியை கண்டித்து, அறந்தை முக்கம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச்செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.சிவகுரு, எம்.செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரமணியன், கு. பெஞ்சமின், ஜீவானந்தம், மகேஸ்வரி, சரோஜா, சு.கிருஷ்ணமூர்த்தி, முருக. சரவணன், மற்றும் மெரினா ஆறுமுகம், திமுக நிர்வாகிகள் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், தலைமைக் கழக பேச்சாளர் மணிமுத்து, காங்கிரஸ் நகர தலைவர் ஆர்.டி.ரவிக்குமார், மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் ராமசாமி, விடுதலைச் சிறுத்தைகள் சக்கரவர்த்தி, இளந்தென்றல், மதிமுக நகரச் செயலாளர் எம். செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இரா. திருஞானம், மாவட்ட நிர்வாக குழு சி. பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் ஏ.எம்.மார்க்ஸ், நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றியச் செயலாளர் குட்டி என்ற சுந்தரபாண்டியன், தலைவர் மோரிஸ் அண்ணாதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலர் என். காளிதாஸ், ஏ.ஐ.ஒய்.எப் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஹாஜா முகைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 
 
 
 

Thursday, September 27, 2018

அதிரையில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.27
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், குடிநீர் கட்டணம், வீடு, கடை வரி உயர்வு, வறண்ட குளங்களுக்கு நீர் நிரப்புதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையம் அருகில் இன்று (செப். 27) வியாழக்கிழமை காலை நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் செயலாளர் என். காளிதாஸ்  தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் எஸ். பன்னிர்செல்வம், எம்.எல்.ஏ  ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் மு. அ பாரதி கண்டன உரை நிகழ்த்தனர்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் வீ.கல்யாணசுந்தரம், ப. காசிநாதன், மாநில குழு உறுப்பினர்கள் இரா. திருஞானம், சி.பக்கிரி சாமி, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஏ.எம் மார்க்ஸ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.ஆர் நாதன், ஏ.ஐ.ஒய்.எப் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஹாஜா முகைதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.எச் பஷீர் அகமது ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் குடிநீர், வீடு, கடைகளுக்கு பல மடங்கு வரி உயர்வை திரும்ப பெறக் கோரியும், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு தூர்வாரி குளங்களுக்கு தண்ணீர் நிரப்பித் தர வேண்டும் எனவும், அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்பு சாலை மற்றும் அதிராம்பட்டினம் பிரதான சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை சந்திப்பில் ரவுண்டான கட்டித் தர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட அக்கட்சியினர் 100 பேர் கலந்துகொண்டனர்.
 

Wednesday, March 7, 2018

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, மார்ச் 07
திரிபுரா மாநிலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முன்னோடி லெனின் சிலை அகற்றப்பட்டதையும், கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சி இடது சாரிகள் அணிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சிபிஎம் ஒன்றியச் செயலர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சி பழனிவேலு, ஆர்.மனோகரன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.பக்கிரி சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் ஏ.எம் மார்க்ஸ், திமுக பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் என்.செந்தில் குமார், இந்திய தேசிய காங்கிரஸ் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆர். மணிகண்டன், தமாகா பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே குமார், மதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் எம்.செந்தில்குமார், தே.மு.தி.க பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் பி.அருணாசலம், தி.க பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் அ.அண்ணாதுரை, அதிராம்பட்டினம் பேரூர் செயலர் என்.காளிதாஸ், ஹாஜா முகைதீன் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.
 
 
 
 

Monday, October 12, 2015

அதிரை கம்யூனிஸ்ட் இளைஞர் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு !

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக அரசியல் பயிற்சி முகாம் மற்றும் அதிரை நகர பொறுப்பாளர் தேர்வு கட்சி அலுவலத்தில் நேற்று நடந்தது.

அதில் இளைஞர் மன்ற அதிரை நகர செயலாளராக கோட்டுரார் கே. ஹாஜா மைதீன், தலைவராக காந்திநகர் பாக்கியராஜ் பொருளாளர் லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் ஆர்.கே செல்வகுமார், துணை செயலாளர் சக்திவேல் விவசாய மாவட்ட செயலாளர் சி பக்கிரிசாமி, அதிரை நகர செயலாளர் என். காளிதாஸ் ஆகியோர் அரசியல் விளக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் இளைஞர் மன்ற அதிரை நகர செயலாளர் கே. ஹாஜா மைதீன் நன்றி கூறினார்.

Tuesday, September 1, 2015

அதிரையில் இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரச்சார பயணம் !

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வரும் செப்டம்பர்-10 ந்தேதி அன்று வேலையின்மை, மதுவிலக்கு, கல்வி வியாபாரம், ஆணவக் கொலைகள், சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
       
போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆகஸ்ட்-29 ந்தேதி தொடங்கி செப்டம்பர் 1, 5 ஆகிய ஐந்து தினங்கள் தஞ்சை மாவட்டத்தின் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாப்பேட்டை, தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோரிக்கை விளக்க பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது.

அதிரையில் நடைபெற்ற கோரிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரத்திற்கு இளைஞர் பெருமன்றம் செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் என். காளிதாஸ், இளைஞர் பெருமன்றம் மாவட்ட பொருளாளர் எம். முஜிபூர் ரஹ்மான், இளைஞர் பெருமன்றம் நகர தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ப. தர்மராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதிரையில் கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் இளைஞர் பெருமன்றம் அமைப்பினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Sunday, August 10, 2014

பட்டுக்கோட்டையில் அரசியல் பயிற்சி முகாம் !

பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

செந்தில்குமரன் திருமணமண்டபத்தில் சனிக்கிழமை அன்று கிளைச்செயலாளர்கள், மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியங்கள் மற்றும் பாப்பாநாடு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல் அமர்விற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கோவிந்தசாமியும், இரண்டாம் அமர்விற்கு திருவோணம் ஒன்றியச்செயலாளர் கே.ராமசாமியும், மூன்றாவது அமர்விற்கு பேராவூரணி ஒன்றியச்செயலாளர் கே.சி.ஆவான் ஆகியோர் தலைமை வகித்தனர்.
               '
தஞ்சை மாவட்ட கட்சி வரலாறு' என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஆர்.சி.பழனிவேலு, ' கட்சி திட்டம்' என்ற தலைப்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், 'கட்சி அமைப்பு மற்றும் செயல்பாடு' என்ற தலைப்பில் மாவட்டச்செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் பயிற்சி வகுப்பெடுத்தனர்.
       
முகாமில் சிபிஎம் ஒன்றியச்செயலாளர்கள் பட்டுக்கோட்டை எம்.செல்வம், பேராவூரணி கே.சி.ஆவான், மதுக்கூர் ஆர்.காசிநாதன், திருவோணம் கே.ராமசாமி மற்றும் நிர்வாகிகள் சேதுபாவாசத்திரம் வழக்கறிஞர் வி.கருப்பையா, பாப்பாநாடு மோகன்தாஸ் உள்பட நூறு பேர் கலந்து கொண்டனர்.

செய்தி : எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.

Wednesday, June 25, 2014

பட்டுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் !

தஞ்சை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.பாசன கால்வாய் ,ஏரி,குளங்களை மராமத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
             
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.கோவிந்தசாமி தலைமை வகித்தார்.விவசாயிகள் சங்க மாவட்ட
துணைச்செயலாளர் வி.கே.சின்னத்துரை ,விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அட்வகேட் வி.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
         
விதொச மாவட்டத்தலைவர் ஆர்.வாசு,       பட்டுக்கோட்டை சிபிஎம் ஒன்றியச்செயலாளர் எம்.செல்வம் ,திருவோணம் சிபிஎம் ஒன்றியச்செயலாளர் கே.ராமசாமி ,வி.ச ஒன்றியத்தலைவர் கே.சோமசுந்தரம் ,கே.பாலசுப்ரமணியன் ,மதுக்கூர் வி.ச ஒன்றியச்செயலாளர் ஏ.என்.வேதாச்சலம் ,எம்.அய்யாவு ,பேராவூரணி எம்.எஸ்.கருப்பையா ,ஆனந்தராசு ,திருவோணம் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விளக்கவுரையாற்றினர்.
             
ஆர்ப்பாட்டத்தில் ," தஞ்சை மாவட்டத்தை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்.பாசன கால்வாய்கள் ,மதகுகளையும் சீர்செய்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.பாசன ஏரி,குளங்களை ஆழப்படுத்தி ,தூர்வாரி ,மண்ணை அப்புறப்படுத்தி ,நீரை தேக்கி வைக்க ஏற்பாடு செய்திடு ,கடைமடை பாசன பகுதியில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் போது சீனியாரிட்டி பார்க்காமல் சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் வழங்கிடு.பழைய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து ,இவ்வாண்டிற்கு புதிய கடன் வழங்க ஏற்பாடு செய்திடு.மாவட்டத்தில் உள்ள காட்டாறுகளின் குறுக்கே தேவையான இடங்களில் படுக்கை அணை ஏற்படுத்தி நிலத்தடி நீரினை பாதுகாத்திடு ,விவசாயத்திற்கு தரமான விதை,உரம் ,பூச்சிக்கொல்லி ஆகியவற்றை மானிய விலையில் வழங்கிடு .நூறு நாள் வேலைத்திட்டத்தில் அரசு நிர்ணயித்த கூலி ரூபாய் 167/- ஐ குறைவின்றி வழங்கிடு .நூறு நாள் வேலையை அனைத்து பகுதி மக்களுக்கும் ஷிப்ட் முறையில்லாமல் தினமும் வழங்கிடு' என்பதை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர் .
       
பட்டுக்கோட்டை ,மதுக்கூர் ,திருவோணம் ,பேராவூரணி,சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.



Monday, April 14, 2014

அதிரையில் எளிமையாக வாக்கு சேகரித்த தமிழ்செல்வி !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் எஸ். தமிழ்செல்வி நேற்று இரவு அதிரையில் எளிமையான பிரசாரத்தை மேற்கொண்டார். குறிப்பாக ஆட்டோ, இருசக்கர வாகானங்கள் அணிவகுப்பு இல்லாததும், வெடி வேடிக்கைகள் காதை பிளக்காததும், ட்ராபிக் ஜாமாகததும், வேட்பாளரின் முகத்தை மூடி மறைக்கும் அளவில் கொடிகள் இல்லாததும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது. எளிமையாக காட்சியளித்த வேட்பாளர் தனது பேச்சில் மக்கள் பிரச்சனையை முன்னுறுத்தி பேசியது ஹைலைட்டாக அமைந்தது.

இந்த வாக்கு சேகரிப்பில் மாவட்ட - ஒன்றிய - நகர நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.