.

Pages

Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Tuesday, July 26, 2016

கல்வி உதவித்தொகை ( 1ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ) விண்ணப்பிப்பவர்களின் கவனத்திற்கு !

தமிழ்நாட்ழல் உள்ள அரசு. அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவர். இஸ்லாமியர். சீக்கியர். புத்தமதத்தினர். பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை (Pre Matric Scholarship) திட்டத்தின்கீழ் 2016-17ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் டாக்டர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற மாணவ-மாணவியரின் பெற்றொர்-பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ 1 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ-மாணவியர் முந்தைய கல்வி ஆண்ழன் இறுதித் தேர்வில் (1ம் வகுப்பபு நீங்கலாக) குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டொர் நலத்துறை. ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மோலம் கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது. ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் புதியது ( Fresh ) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் தவிர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து  அப்லோட் (Upload) செய்திட வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையத்தில்  31-8-2016க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மாணவ-மாணவியர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஆன்லைன் மூலம் 31-8-2016க்குள் பார்வேர்டு (Forward) செய்ய வேண்டும். மேலும் தகுதியயுள்ள மாணவ-மாணவியரின் பெயர் பட்டியலை உரிய ஒப்பம் இட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அளிக்க வேண்டும்.

சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மெற்பழ கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

Sunday, June 12, 2016

பாடப்புத்தகங்கள் வீடு தேடி வரும் வசதி !

இணையதளத்தில் பதிவு செய்தால் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களை வீடு தேடி அனுப்பிவைக்கும் வசதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

2016–17 ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள், மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கின்றன. மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016–17ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12–ம் வகுப்புவரையிலான பாடநூல்களை www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள இ–சேவை மையங்களில் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டால் பதிவுசெய்த பாடநூல்கள் 48 மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் அனுப்பிவைக்கப்படும்.

'இ- சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்' என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

நன்றி: விகடன்

Friday, June 10, 2016

அங்கீகாரம் பெற்ற அதிரை பகுதி மெட்ரிக் பள்ளிகள் எவை ?

தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

அங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியலை மாவட்ட வாரியமாக இந்த இணைய தளத்தில் பார்க்கலாம். உங்கள் வசதிக்காக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதள முகவரி இதோ:www.tnmatricschools.com/

தஞ்சாவூர் மாவட்ட பட்டியலில் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, ஏ.எல் மெட்ரிக். பள்ளி ஆகியன இடம்பெற்றுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: http://tnmatricschools.com/District/Thanjavur.pdf

மேலும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி மெட்ரிக் பள்ளிகளில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல்விவரங்களுக்கு:http://tnmatricschools.com/images/RTE%20Web%20FINAL%2001.07.2015.pdf

Friday, May 6, 2016

மே 17-ல் பிளஸ் 2; மே 25-ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு !

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மே 17-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும், மே 25-ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு மே 25-ம் தேதி காலை 9.31 மணி முதல் 10.00 மணிக்குள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் அறியலாம்.

அதுதவிர ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும், அனைத்து மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ம் தேதியே முடிவடைந்துவிட்டது.

அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

Saturday, March 12, 2016

என்ன படிக்கலாம் ? அதிரை அன்சாரி கூறும் ஆலோசனை !

அதிரையை சேர்ந்தவர் அஹமது அன்சாரி. சமூக ஆர்வலரான இவர் கற்றல் குறித்து முக்கிய குறிப்புகளை தனது ஆலோசனையாக வழங்கி உள்ளார்.

என்ன படிக்கலாம் என்பதை முன் கூட்டியே யோசனை செய்வது நல்லது, காரணம் படித்தப்பின் நம்மில் பெரும்பாலனோர் அதே துறை பணியில் சேருவதில்லை. ஆகவே, கீழ் வரும் துறைகளை விளக்குவதன் மூலம், அதற்கு தக்கவாறு நம்மை தயார் செய்துக் கொள்வது நல்லது அதாவது எந்த பாடம் எடுத்து அந்தத்துறைக்கு நம்மை தகுதி படுத்திக்கொள்ளலாம்!

யதார்த்தம் (Realistic): 
கணினி மற்றும் உபகரணங்களுடன் பணி செய்பவர்கள் (Ex: Carpenter, Factory worker, Mechanic, Reporter)

புலனாய்வு (Investigative): 
கற்பித்தல், சூல்நிலையை ஆராய்தல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது (Ex: Detective, Model, Psychologist, researcher)

கலையாற்றல் (Artistic): 
கற்பனைத் திறம் கொண்ட தன் திறமையை வெளிப்படுத்துபவர்கள் (Ex: Programmer, Photographer, Song writer)

சமூக சம்பந்தமானவை (Social): 
கற்பிப்பவர் மற்றும் மற்றவருக்கு உதவி செய்பவர் (Ex: Doctor, Nurse, Teacher, Writer)

சமாளிக்க தெரிந்தவை (Enterprising): 
தலைமையேற்பவர்கள் (Ex: Manager, Politician, Salesperson)

உள்ளார்ந்தவை (Conventional): 
தொடர் விபரங்களை கண்கானிப்பவரும் வைத்திருப்பவரும். (Ex: Accountant, Bookkeeper, Inventor, Secretary)

Friday, August 21, 2015

11 ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியருக்கு மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகை !

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் என்.சுப்பையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினை தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் தேசீய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர், கிருத்துவர், சீக்கியர், புத்தமதத்தினர் மற்றும் பார்சி மதங்களைச் சார்ந்த 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை இரண்டு தவணைகளில் 11-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும் – மற்றும் 12-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

கல்வி உதவித் தொகை, கல்விக் கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 1707 சிறுபான்மையின மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதிகள்:
இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவியர்கள் 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நடப்பாண்டில் 2015-2016-ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11-ஆம் வகுப்பு பயில்பவராக இருத்தல் வேண்டும். சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ஒரு இலட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். (வருமானச் சான்றிதழ், ஓய்வூதியம் ஆணை ரூ.20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் (Affidavit) அவசியம் விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும்). மாணவியர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் (Affidavit) மற்றும் இதர விவரங்களை www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

கல்வி நிலைய தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், தங்கள் கல்வி நிலையத்தில் 11-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்பப்படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2ல் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக The Secretary, Maulana Azad Education Foundation (Ministry of Minority Affairs, Government of India). Chelms Ford Road, New Delhi-110 055 என்கிற முகவரிக்கு 30.9.2015 மாலை 5.00 மணிக்குள் சேரும் வகையில் தவறாமல் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

2015-2016-ஆம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்கள், www.maef.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 

Thursday, August 20, 2015

8 ஆம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' ரத்தாகிறது !

8 ஆம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்ய உள்ளது.

மத்திய அரசு புதிதாக அமைத்துள்ள சி.ஏ.பி.இ. என்னும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை செயலாளர்கள், கல்வியாளர்கள், சி.ஏ.பி.இ. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, "8ஆம் வகுப்பு வரையில் மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கையை ரத்து செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர்.

8 ஆம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கை, கல்வி கற்றலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதில் மாநில அரசுகளிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்து கேட்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கல்வி அமைச்சர்கள் தங்களுடைய முழுமையான ஆதரவினை தெரிவித்தனர். பள்ளியில் இருந்து இடையிலேயே நின்று விடுகிற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளின் நிலைமையை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சர்கள் அடங்கிய துணைக்குழு ஒன்று உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையை பொறுத்தமட்டில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் கழிவறைகள் கட்டுவதில் அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தேசிய கல்விக்கொள்கையைப் பொறுத்தமட்டில், நவம்பர் மாதம், முதல் வரைவு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். டிசம்பரில் அது தயாராகி விடும். 10ஆம் வகுப்பு தேர்வை (சி.பி.எஸ்.இ.) மீண்டும் அரசு தேர்வாக நடத்த பரிசீலிக்கப்படுகிறது" என்று கூறினார்.

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பால் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகும் என தெரிகிறது.

நன்றி:விகடன்

Tuesday, August 11, 2015

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்குதல் !

தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான கிறித்துவர். இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவ-மாணவியர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2015-16ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு புதிய இணையதள முகவரியான www.scholarships.gov.in என்பதில் ஆன்லைன் முலம் விண்ணப்பிப்பதற்கான காலவரையறை புதியதற்கு 30-09-2015 மற்றும் புதுப்பித்தலுக்கு 15-11-2015 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டிற்கு 2279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை மைய அரசால் 2015-16 ஆம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

கல்வி உதவித்தொகை பெற தேவையான தகுதிகள் பின்வருமாறு: 
1, மாணவ-மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்,

2, பெற்றோர் - பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ₹ 2,50 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
www.scholarships.gov.in என்ற புதிய இணையதள முகவரியில் Online மு்லம் விண்ணப்பித்து இணைப்புகளை அப்லோடு (upload) செய்து மாணவ-மாணவியர்கள் பதிவு செய்யப்பட்ட அவ்விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு. அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், மதத்திற்கான சான்று, வருமானத்திற்கான சான்று ஆகியவற்றின் நகலுடன். கல்விக்கட்டணம் செலுத்திய இரசீது. இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் (Core Bank Service Account Number, IFS Code ) ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 30-09-2015க்குள் புதியதற்கும் 15,11,2015க்குள் புதுப்பித்தலுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை மாணவ-மாணவியர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படவுள்ளதால் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது சரியான வங்கிக் கணக்கு விவரங்களையும் தவறாது சமர்ப்பிக்க வேண்டும், மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் ( Listed Institutions ) பயிலும் மாணவ-மாணவியர் செலுத்தும் முழுக்கல்வி கட்டணங்களும் ( திரும்ப பெறும் கட்டணங்களை தவிர்த்து) மீள வழங்கப்படும், ஏனைய கல்வி நிறுவனங்களில் விடுதியில் தங்கி பயில்பவருக்கு ₹ 30,000/- மற்றும் விடுதியில் தங்காமல் பயில்பவர்களுக்கு ₹ 25,000/- வரை அதிகபட்சமாக கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,

கல்வி நிலையங்கள் மேற்படி ஆன்லைன் முலம் மாணவ-மாணவியர்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மு்லம் 20-10-2015க்குள் புதியதற்கும் 25-11-2015க்குள் புதுப்பித்தலுக்கும் அனுப்புதல் வேண்டும், சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் ஆன்லைன் முலம் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, 

Monday, August 10, 2015

திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி...

ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது!

'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி.

இதைப் படித்த எல்லோருமே... அந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள்... அவர்கள் யாராக இருக்கும் என்கிற கேள்வியை எழுப்பியபடியே! நாமும் மனதில் பாராட்டிக் கொண்டே தேடுதலில் இறங்கினோம்... கிடைத்தார் அந்த நல்ல உள்ளங்களில் ஒருவரான சரவணன்!

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் ஒரே மகள் சுவாதி. படித்து வேளாண் விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது எதிர்கால ஆசை. கணவன் இல்லாத நிலையிலும் கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்தார் தங்கப்பொண்ணு. ப்ளஸ்-டூவில் 1,076 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவரின் விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. ஏற்கெனவே தேர்வுபெற்ற மாணவர்கள் சிலர், வேளாண்மைக் கல்வியை விட்டு வேறு படிப்புகளுக்குச் சென்று விட்டதால், ஸ்வாதிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருமாறு மின்னஞ்சல் (இமெயில்) அழைப்புக் கடிதம் ஒன்றை ஸ்வாதிக்கு அனுப்பியது வேளாண்மை பல்கலைக்கழகம். அண்ணா கலையரங்கம் என்று இடம் பெற்றிருந்த வாசகத்தை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்துகொண்ட மாணவி ஸ்வாதி, அம்மாவுடன் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதேநேரம் வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லவேண்டியது கோவை அண்ணா கலையரங்கிற்கு; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அல்ல என தெரியவந்தபோது அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றது மாணவியின் குடும்பம்.

அப்போதுதான் அவர்களுக்கு கைகொடுத்து பேருதவி செய்திருக்கிறார் எம்.சரவணன். டெக் மஹேந்திரா தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் அவரை பாராட்டிவிட்டு, பேசினோம்.

"என்னோட சொந்த ஊரு சேலம் மாவட்டம், சங்ககிரி பக்கத்தில் உள்ள வைகுந்தம். பரம்பரை விவசாய குடும்பம். இதே அண்ணா பல்கலைக்கழகத்தில் படிச்சு முடிச்சு, சென்னையில பல வருஷமா வேலை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அதிகாலை 6 மணிக்கே எழுந்து நடைபயிற்சி போகும் வழக்கம் உண்டு. நான் படிச்ச அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் நடைபயிற்சி. அங்கு  நடைபயிற்சி போறவங்க எல்லாம் சேர்ந்து குழு அமைச்சிருக்கோம். அதன் மூலமா ஹெல்த் உள்ளிட்ட பல விஷயங்களை பரிமாறிக்குவோம்.

ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபயிற்சி செல்லும் வழியில் சூட்கேஸ் வெச்சிட்டு ஒரு பொண்ணும், கூடவே ஒரு அம்மாவும் குழப்பத்துடனும் தவிப்புமாக நின்னிட்டிருந்ததை பார்த்தோம். மூணாவது சுற்று நடைபயிற்சி வரும்வரை வெள்ளந்தியா அவங்க ரெண்டு பேரும் நின்னுட்டிருந்ததைப் பார்த்தேன். கிராமத்து ஆளுங்க மாதிரி தெரியவே... என்ன ஏதோனு கிட்டபோய் விசாரிச்சோம்.

வேளாண்மை கல்லூரி கலந்தாய்வுக்கு வந்ததாக சொன்னாங்க. அது கோயம்புத்தூர்லதானே நடக்கும். ஒருவேளை சென்னையில் ஏதாவது உறுப்புக் கல்லூரி இருக்கோனு சந்தேகத்தில் வேளாண்மைப் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் எங்க குடும்ப நண்பருமான முருகேசபூபதியை தொடர்பு கொண்டு கேட்டேன்.

‘கோவையில்தான் நடக்கிறது' னு சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். பிறகு, அந்தப் பெண்ணுக்கு வந்த மின்னஞ்சல் அழைப்புக் கடிதத்தை திறந்து பார்த்தப்பதான்... விஷயம் புரிஞ்சுது.

‘தவறா புரிஞ்சுகிட்டு, பெரிய தப்பை பண்ணீட்டீங்களேம்மா... ஒரு வருஷ படிப்பே போயிடுமே. இன்னும் கொஞ்ச நேரத்துல கோயம்புத்தூர்ல கலந்தாய்வு நடக்கப்போகுது... நீங்க இங்க நின்னுட்டிருக்கீங்களே' னு கண்டிச்சாலும், அந்த விஷயத்தை அப்படியே விட எங்களுக்கு மனசு வரலை. எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் கோவைக்கு அனுப்பனும்னு நண்பர்கள் கலந்து பேசினோம்.

பல்கலைக்கழக தொலைபேசிக்கு போன் போட்டப்ப, யாரும் எடுக்கல. அது அலுவலக நேரத்தில் மட்டுமே செயல்படும் தொலைபேசி. அடுத்த முயற்சியாக முன்னாள் துணைவேந்தர்கிட்ட பேசி, அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோட எண்ணை வாங்கி பேசினோம். அவர், சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்துகிட்ட நிலைமையை சொல்லிப் பேசியதில் நாள் தள்ளிவைக்க முடியாது என்றும், நேரத்தை வேண்டுமானால் 8.30 என்று இருந்த கலந்தாய்வை இந்த மாணவிக்கு மட்டும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கலாம்னு பதில் கிடைச்சுது.

உடனே நடைபயிற்சி நண்பர்கள் நாங்கள்லாம் கலந்துபேசி கார் மூலம் விமான நிலையம் அனுப்பி, விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்து, முதல் தடவையா விமானம் ஏறுறதால அதுக்கான ஆலோசனைகளையும் கூறி அனுப்பினோம். சரியாக 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில், எங்க ஏற்பாட்டின்படி தயாரா இருந்த பல்கலைக்கழக வாகனத்தில் ஏறிப்போய், பி.டெக் உணவு தொழில்நுட்பவியல் படிப்பில் இடம் வாங்கிடுச்சு அந்தப் பொண்ணு ஸ்வாதி" என்று நடந்ததை தனக்கே அப்படி ஒரு உதவி கிடைத்த மகிழ்வோடு பேசினார் சரவணன்.

உதவி கேட்கக்கூட தயங்கி நின்ற சூழலில் வலியச்சென்று அவர்களுக்கு பேருதவி செய்த சரவணன் மற்றும் அவருடைய நடைபயிற்சி நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது இப்போது.

இதுகுறித்து வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் வேலாயுதம், "பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சலைக்கூட முழுமையாக படிக்க முடியாததால் ஒரு வருட படிப்போ பறிபோக இருந்த நிலையில், அதைக் கைவசப்படுத்திக் கொடுத்த... சரவணன் உள்ளிட்டோருக்கு மக்கள் அனைவருமே நன்றி சொல்லலாம். கிராமத்து மாணவி ஒருவரின் அறியாமையை புரிந்து, கலந்தாய்வை காலநீட்டிப்பு செய்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நன்றிகள்.

அதேசமயம், பல்கலைக்கழகம் இதுபோன்ற அழைப்புக் கடிதங்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் சேர்த்தே அனுப்பினால், இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்" என்று வேண்டுகோளும் வைத்தார்.

அதுவும் சரிதானே!

-ஜி.பழனிச்சாமி
நன்றி:விகடன்

Tuesday, August 4, 2015

கல்வி உதவித்தொகை பெற வருமான சுயசான்று போதுமானது: மாவட்ட ஆட்சியர் தகவல் !

சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை பெற வருமான சான்றிதழ் பெறுவதற்கான நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என். சுப்பையன் வெளியிட்ட செய்தி: 
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை மற்றும் தொழில்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

உதவித் தொகை பெற வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வருமானச் சான்றை பொறுத்தமட்டில் பெற்றோர், பாதுகாவலரின் அரசின் வருவாய்த் துறை மூலம் அளிக்கப்படும் வருமானச் சான்றிதழை மட்டுமே பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.  இந்த நிபந்தனையை தற்போது மத்திய அரசு தளர்வு செய்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் வழங்கியதை போல பெற்றோர், பாதுகாவலர் வருமானம் குறித்து சுயசான்று அளித்தால் போதும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Monday, August 3, 2015

கல்வி உதவித்தொகை பெற ஆக.15 வரை விண்ணப்பிக்கலாம்: காலக்கெடு நீட்டிப்பு !

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வேண்டி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் பள்ளிகளில் ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அது தற்போது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஜூலை 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அது தற்போது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 9 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் www.scholerships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 8, 2015

அதிரையில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விவரங்கள் !

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடந்த [ 2013-2014 ] கல்வியாண்டு முதல் நடப்பு [ 2015-2016 ] கல்வியாண்டு வரை புதிய கட்டணங்களை நிர்ணயித்து, அரசு இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

L.K.G முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து வகுப்பிற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் வசதி, செலவினம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஆராய்ந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விவரங்கள் கீழ் கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

PRIVATE   SCHOOLS   FEE   DETERMINATION   COMMITTEE   CHENNAI-600   006   
FEES   FIXED   FOR   THE   YEAR   2015-2016   -   DISTRICT:   THANJAVUR

Oxford  Nursery  & Primary  School
LKG : 6050 
UKG : 6050  
I : 6716
II : 6716
III : 6716
IV : 6716
V : 6716

E.P  MODEL  N  &  P  SCHOOL
LKG : 4659 
UKG : 4659 
I : 6050
II : 6050
III : 6050
IV : 6050
V : 6050

Western  Nursery  & Primary  School
LKG : 4235 
UKG : 4235 
I : 4917
II : 4917
III : 4917
IV : 4917
V : 4917

Tharbiyathul  Islamia Nursery  &  Primary School
LKG : 5082 
UKG : 5082 
I : 6716
II : 6716
III : 6716
IV : 6716
V : 6716

Laural  Higher  Secondary School
LKG : NIL  
UKG :  NIL
I : 8470
II : 8470
III : 8470
IV : 8470
V : 8470
VI : 9801
VII : 9801
VIII : 9801
IX : 11132
X : 11132
XI : 12463
XII : 12463

Khadir  Mohideen  Girls Higher  Secondary  School
VI : 2299
VII : 2299
VIII : 2299
IX : 2965
X : 2965
XI : 3449
XII : 3449

குறிப்பு :
1. அதிரையில் இயங்கும் மற்ற தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் அரசின் அட்டவணையில் இடம்பெறவில்லை. விடுபட்ட பள்ளிகளின் கட்டண விவரங்கள் சேகரித்து தளத்தில் வெளியிடப்படும்.

2. மேலதிக தகவல் மற்றும் மற்ற ஊர்களில் கல்வி பயில்வோர் http://sp.tn.gov.in/miscellaneous/pdf/23.pdf என்ற அரசின்  இணையதளம் மூலம் கட்டண விவரங்களை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

3. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளதை வீட கூடுதலாக  வசூலிக்க நேரிட்டால் இவற்றை அரசின் கவனத்திற்கு ஆதாரத்தோடு எடுத்துச்செல்ல பெற்றோருக்கும், சமூக ஆர்வலருக்கும் முழு உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்ததைவீட கூடுதல் வசூலிக்கப்பட்டது நிரூபணமானால் பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்துவிடும் அதிகாரமும் அரசிற்கு உள்ளது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
Image Credit : The Hindu

Tuesday, July 7, 2015

உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு !

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெரும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முனைவர் என். சுப்பையன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஐ.ஏ.எஸ். எழுதுவது எப்படி?

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகளைக் கேட்டு வாசகர்களிடமிருந்து பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதற்கான பதிலைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் துணை இயக்குநர் எம். கண்ணனிடம் கேட்டுப் பெற்றோம்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் விருப்பப் பாடமாக இயற்பியலை எடுக்கலாமா என ஒரு வாசகர் கேட்டுள்ளார். ஐ.ஐ.டி. போன்ற உயர்தர பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள் அதிக அளவில் இயற்பியலை விருப்பப் பாடமாகக் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்த காரணத் தால் இயற்பியல் பாடத் திட்டம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) சற்று கடினமாக்கப்பட்டது. அதனால் அந்தப் பாடம் சற்று கடினமாகவே இருக்கும்.

அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம், வரலாறு, புவியியல், சமூகவியல், உளவியல் போன்ற அனைத்து விருப்பப் பாடங்களும் தேர்வுக்கான தயாரிப்புக்குச் சற்று எளிமையாக இருக்கும்.

பல்கலைக்கழகங்கள் வழங்கும் முதுநிலை பட்டப்படிப்புகளில் மேற்கண்ட பாடப் பிரிவுகளில் தமிழ்வழி புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் தேர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஐ.ஏ.எஸ் தேர்வு ஒன்றே குறிக்கோளாக இருக்கும் நிலையில் நீங்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றை இளங்கலை பாடப்பிரிவாகத் தேர்ந்தெடுக்கலாம்.

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு ஆங்கில அறிவு அதிகம் தேவையா என்கிறார் ஒரு வாசகர். Language Paper-ல் முதனிலைத் தேர்வில் (PRELIMINARY EXAM) கேள்விகளைப் படித்து விடையளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு இருந்தால் போதுமானது. பிரதானத் தேர்வில் (MAIN EXAM) கேள்விகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதைப் புரிந்துகொண்டு தமிழ் வழியில் விடையளிக்கலாம்.

இதற்குப் பிரதானத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தமிழ்வழித் தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களையும் தொடர்புகொண்டு தக்க ஆலோசனை பெறலாம்.

ஐ.ஏ.எஸ். பாடத்திட்டம், தேர்வு முறை தொடர்பான தகவல்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தகவல்கள் உள்ளன. தமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற www.civilservicecoaching.com என்ற இணையதளத்தை பார்வையிடவும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டங்கள் (Study Circle) மூலமாகவும் இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

நன்றி: தமிழ்ஹிந்த்

Wednesday, July 1, 2015

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை !

தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், தமிழக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உள்பட்டு இந்த உதவி தொகையை பெற முடியும்.

இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் சிறுபான்மையின மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் களுக்குமேல் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

1-முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி 15-7-15-ந் தேதிக்குள் தாங்கள் படிக்கும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.

9,10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இணையதளம் வழியாக 31-7-15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதேபோல 10-ம் வகுப்பிற்கு மேல் இதர படிப்புகளை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் 18 ஆயிரத்து 989 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள் 15-9-15-ந் தேதிக்குள்ளும், புதுப்பித்தல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் 10-10-2015-ந் தேதிக்குள்ளும் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை   www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

பரிந்துரை: முஹம்மது அலி 

Tuesday, September 2, 2014

சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை !

11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு அந்தந்த கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிப் படிப்பை தொடர வசதியில்லாத சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் மௌலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத் திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவ 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் 10-ஆம் வகுப்பில் 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 11-ஆம் வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்துக்கும் உள்பட்டு இருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து அந்தந்த கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம், உறுதிமொழி ஆவணம் மற்றும் விபரக் குறிப்பை http://maef.nic.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சரிபார்த்து, செப்.30-ஆம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, June 23, 2014

கல்லூரி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு !

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்றவற்றில் பயிலும் மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற, அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெற்று, நிறைவு செய்து, உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், http://www.bcmbcmw.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் கல்வி உதவித்தொகை திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Thursday, June 12, 2014

அழகிய கடன் IAS அகடாமியின் முதல் மாணவர் முஹம்மது அஸ்ரப் IAS தேர்வில் வெற்றி !

தமிழக முஸ்லீம்கள் வரலாற்றில் ஒரு மைல் கல். அழகிய கடன் IAS அகடாமியின் முதல் மாணவர் காரைக்குடியை சேர்ந்த முஹம்மது அஸ்ரப் IAS தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் முஹம்மது அஸ்ரப் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,  
ILMI - அதிராம்பட்டினம்

Monday, May 19, 2014

ஜப்பானில் படிக்க உதவித்தொகை ! விண்ணப்பிக்க அழைப்பு !!

ஜப்பான் நாட்டில் படிக்க அந்நாடு வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகம் தெரித்துள்ளது.

இது குறித்து துணைத் தூதர் கயோகோ ஃபுருக்காவா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஜப்பான் நாட்டின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பில் சர்வதேச மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மூன்றாண்டு தொழில்நுட்பம், வணிகம், ஃபேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கும், 4 ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கும், பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு 1993 ஏப்ரல் 2-ஆம் தேதிக்கும் 1998 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கும் இடையில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்காலம். கல்வித்தகுதியாக பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த உதவித் தொகையை பெற சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் நடைபெறும் தேர்வெழுத வேண்டும்.

இதற்கு ஜப்பான் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இறுதித் தேர்வு பின்னர் நடத்தப்பட்டு, 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்.

இதற்கான விண்ணப்பம் தேனாம்பேட்டை செனாடோப் சாலையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தில் பெறலாம். மேலும் www.studyjapan.go.jp என்ற இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமணி

Friday, August 2, 2013

11 ஆம் வகுப்பு சிறுபான்மை மாணவியருக்கு மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு !

11 ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மை மாணவியருக்கு மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகையை பெற உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாணவியரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொள்கிறார்.