.

Pages

Showing posts with label கீழத்தெரு சங்கம். Show all posts
Showing posts with label கீழத்தெரு சங்கம். Show all posts

Thursday, April 9, 2020

கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.09
பால் தட்டுப்பாட்டை போக்கும் விதத்தில், அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் சார்பில், பொதுமக்களுக்கு நேரடியாக இன்று வியாழக்கிழமை காலை பால் விநியோகிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பகுதிகளில் சைக்கிள் வண்டிகள் மூலம் விநியோகித்து வந்த பால் நேற்று ஏப்.7 ந்தேதி முதல் நிறுத்தப்பட்டதால், பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் சார்பில், பால் விற்பனை நிலையம் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நேரடியாக 200 லிட்டர் பால் இன்று (ஏப்.09) விநியோகிக்கப்பட்டது. ஏற்பாட்டினை, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கம் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 
 
 
 

Thursday, October 24, 2019

அதிரையில் கொட்டும் மழையில் 2000 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 24
அதிராம்பட்டினம், கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா  இளைஞர்கள் சங்கம் சாா்பில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் இன்று (24-10-2019) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

முகாமிற்கு, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கத் தலைவர் ஏ.தாஜுதீன் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் ஹாஜி என்.எம்.எஸ் மன்சூர் முகாமை தொடங்கி வைத்தார். அதிரையில் பெய்து வரும் தூறல் மழையையும் பொருட்படுத்தாது, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கினர். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், வர்த்தகர்கள், மீன் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 2000 க்கும் மேற்பட்டோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி சென்றனர். இதில், சிலர் வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் சென்றனர்.

முகாமில், இளைஞர் சங்க நிர்வாகிகள் முகமது புஹாரி, யா முகமது, ஃபாமிம், ரிழா, சர்பத்கான், பைசல், ஜிப்ரில், அசார், முகமது அஸ்லம், நிஜாம், தமீம் அன்சாரி, எஸ்.சேக்தாவூது, எம்.சேக்தாவூது, ஓய்.சேக்தாவூது, மான் ஏ.சேக், முகமது பாவாஜி, அஜ்மல்கான், இஸ்மாயில், நூருல் அமீன், சேட் அமானுல்லா உள்ளிட்ட மஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

Monday, October 21, 2019

கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா இளைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.21
அதிராம்பட்டினம், கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா  இளைஞர்கள் சங்கம் அமைப்பின், புதிய நிர்வாகிகள் தேர்வு சங்க நிர்வாகிகள் முன்னிலையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்கத் தலைவர் ஏ.தாஜுதீன் தலைமை வகித்தார். செயலாளர் எம்.சேக்தாவூது, பொருளாளர் ஹாஜி என்.எம்.எஸ் மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா இளைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக முகமது புஹாரி, செயலாளராக யா முகமது, பொருளாளர் ஃபாமிம், ரிழா, துணைத் தலைவராக சர்பத்கான், துணைச் செயலாளர்களாக பைசல், ஜிப்ரில், அசார், முகமது அஸ்லம், நிஜாம் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 10 பேர் கொண்ட மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டது. இதில், தமீம் அன்சாரி, எஸ்.சேக்தாவூது, எம்.சேக்தாவூது, ஓய்.சேக்தாவூது, மான் ஏ.சேக், முகமது பாவாஜி, அஜ்மல்கான், இஸ்மாயில், நூருல் அமீன், சேட் அமானுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட  இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மேலாண்மைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், மஹல்லா நிர்வாகிகள், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

Sunday, February 17, 2019

கீழத்தெரு ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.17
அதிராம்பட்டினம், கீழத்தெரு கீழத்தெரு அல் மதரஸத்துல் நூருல் முகம்மதியா சங்க ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தலைவராக ஏ.தாஜூதின், துணைத் தலைவர்களாக எஸ்.எஸ்.இ முகமது காசிம், கே.ஜமால் முகமது, செயலாளராக எம்.எம். சேக்தாவுது, இணைச் செயலாளராக எஸ்.எஸ் சுலைமான், துணைச் செயலாளர்களாக அதிரை பாருக், அப்துல் கலாம், பொருளாளராக என்.எம்.எஸ் மன்சூர், ஒருங்கிணைப்பாளர்களாக மான் ஏ.நெய்னா முகமது, அ.மு அப்துல் வஹாப், எச்.சாகுல் ஹமீது, எம்.நெய்னா முகமது, செயற்குழு உறுப்பினர்களாக கே. முகமது கனி, நிஜார், கே.தமீம் அன்சாரி, ஏ.முகமது உமர், எம்.அகமது பஷீர், எஸ்.ஜாஹிர் உசேன், கே.முகைதீன், மான் ஏ.சேக், எம்.செய்யது கனி, சேக்தாவுது, சேக் அப்துல் காதர், எம். அஜ்மல்கான், எம்.நிஜாம், என்.முகமது புஹாரி, பி.அமானுல்லா சேட்,￰ சேக் அப்துல் காதிர், எம்.நூருல் அமீன், அகமது ஜிஃப்ரில், ஏ.அகமது ரிழா, கே.ஜூம்மா, ஜெ.அஸ்கர், அன்வர்தீன், எம்.யாசின் அராபத், எம்.தாஜூதின், எஸ்.ஜெகபர் சாதிக் (ரைட்), ஏ.ராசிக் அகமது ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
 


Saturday, February 16, 2019

அமீரக கீழத்தெரு மஹல்லா புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்.16
அமீரக அதிரை கீழத்தெரு மஹல்லா புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் துபை நைஃப் ரோடு மங்களூர் எம்பையர் ரெஸ்டாரண்ட் வளாகத்தில் நடை பெற்றது வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில், அமீரக அதிரை கீழத்தெரு மஹல்லா புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில், தலைவராக எம்.அஷ்ரப் அலி, துணைத்தலைவராக எஸ்.ஷேக்தாவூது, செயலாளராக என்.எம் முகமது ராவுத்தர், துணைச் செயலாளராக கே.ஷேக்தாவூது, பொருளாளராக எஸ். மர்ஜூக் அகமது, துணைப்பொருளாளராக எஸ். சிராஜூதீன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 12 பேரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில் அமீரக வாழ் கீழத்தெரு மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tuesday, August 14, 2018

காந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி வலை வழங்கப்பட்டது (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்திநகரைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் (35). தனது மனைவி மாலதி (30) மற்றும் பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அதன் அருகே, மற்றொரு குடிசை வீட்டில் மாரியப்பன் தாய் வள்ளி (56) வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாலதி வீட்டில் திடீரென தீ பிடித்து எரிந்து சாம்பலானது. இதில், வீட்டில் வைத்து இருந்த பணம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள், ஆடைகள் உள்ளிட்டவை தீயில் கருகியது. தீ விபத்து குறித்து அறிந்த பல்வேறு தரப்பினர் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லா அமீரக அமைப்பின் தலைவர் எல்.எம்.ஐ அப்பாஸ் சார்பில், நிவாரணமாக ரூ.10 ஆயிரம் மதிப்பில், மீன் பிடிக்க பயன்படும் வலை இன்று (ஆக. 14) செவ்வாய்க்கிழமை காலை வழங்கப்பட்டது. என்.காளிதாஸ், ஹாஜா முகைதீன், ஜீசான் அலி, முகமது பாருக், முகமது முகைதீன், ஜாகிர் உசேன், பஞ்சவர்ணம் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வழங்கினர்.





கீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்றம் தொடக்கம் ~ புதிய ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஆக.14
அதிராம்பட்டினம் கீழத்தெரு மஹல்லா அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்றம் தொடக்கம். புதிய ஒருங்கிணைப்பாளர்கள் 13 பேர் கொண்ட பெயர் பட்டியல் அறிவிப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், கீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்றம் தொடக்க விழா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு வெள்ளிக்கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கீழத்தெரு மஹல்லா அல் நூருல் முகம்மதியா சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஒப்புதலின் பேரில், கீழத்தெரு அல் நூருல் முகம்மதியா இளைஞர் நற்பணி மன்றம் புதிதாக தொடங்கப்பட்டன. மன்றத்தின் புதிய ஒருங்கிணைப்பாளர்களாக மான் ஏ.சேக், எம்.அஜ்மல் கான், பி.அமானுல்லா சேட், எம்.செய்யது கனி, எம். நிஜாமுதீன் (மீன் மார்க்கெட்), எம்.அகமது அன்வர், எம். அகமது ரிழா, ஜே. முகமது சாலிகு, கே.ஜும்மா, என்.இலியாஸ் முகமது, ஜே.அஸ்கர், ஆர்.இஜாஸ் அகமது, என்.ப்ரோஸ் ஆகிய 13 நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.