.

Pages

Showing posts with label திருமண நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label திருமண நிகழ்ச்சிகள். Show all posts

Sunday, November 11, 2018

அதிரையில் M.M.S இல்ல மணவிழா ~ அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.11
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மறைந்த M.M.S பஷீர் அகமது புதல்வர் பொறியாளர் தமீம் அன்சாரி மணமகனுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மேலத்தெரு M.M.S வாடி வளாகத்தில்  திருமணம் நடைபெற்றது.

விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராமலிங்கம், சண்முகம், ஞானசேகரன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார், பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தமாகா தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளருமாகிய என்.ஆர் ரெங்கராஜன், டிஎஸ்பி கணேஷமூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள், பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் M.M.S குடும்பத்தார் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.

Thursday, August 16, 2018

பிலால் நகரில் அதிரை அமீன் இல்லத் திருமணம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த அதிரை அமீன் இல்லத் திருமணம் நபிவழி முறையில் மஸ்ஜித் பிலால்  (ரலி) பள்ளிவாசலில் இன்று (ஆக.16) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த சிராஜுதீன் மகன் முஹாது  என்ற மணமகன் 24 கிராம் தங்க நகையையும், மேலத்தெருவைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் மகன் ஜமால் முகமது என்ற மணமகன் 1700 சதுர அடி மனைக்கட்டு நிலம் ஆகியவற்றை மஹராக மணமகள்களின் தந்தை அதிரை அமீனிடம் வழங்கி மணமுடித்தனர்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பின் பேரில், இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் மதுரை மவ்லவி அப்பாஸ் அலி மிஸ்க் கலந்துகொண்டு திருமண விழா உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, அதிரை தாருத் தவ்ஹீத் செயலர் எம்.ஜமீல் முகமது சாலிகு மணமக்கள் பற்றிய அறிமுகத்தை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மஹல்லா நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், உற்றார் ~ உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 

Sunday, February 11, 2018

அதிரையில் TNTJ கிளை நிர்வாகி இல்லத் திருமணம் !

அதிராம்பட்டினம், பிப்.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவில் இன்று (பிப்.11) ஞாயிற்றுக்கிழமை காலை நபிவழி முறையில் திருமணம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1 துணைத் தலைவர் அ.மு அப்துல் வஹாப் அவர்களின் மகன் முகமது ருத்வானுதீன் (26) மணமகன், மேலத்தெருவை சேர்ந்த பகுருதீன் அவர்களின் மகளை 24 கிராம் ஆபரணத் தங்க நகை மஹராக கொடுத்து மணமுடித்தார்.

நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் துணைத் தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளஸி கலந்துகொண்டு 'நபிவழித் திருமணம் ஏன்?' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மணமக்கள் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.  முடிவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மணமகனை வாழ்த்தினர்.
 
 
 
 

Thursday, January 18, 2018

அதிரை பாருக் இல்லத் திருமணம் ~ அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து!

அதிராம்பட்டினம், ஜன.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஏ.பாருக். சமூக ஆர்வலர். காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயலர். இவரது மகன் ஷேக்தாவூது. இவரது திருமணம், அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளிவாசலில், மவ்லவி எம். தாஜுதீன் தலைமையில், ஜமாஅத் நிர்வாகிகள், குடும்பத்தார் முன்னிலையில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பின் பேரில் அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள்,  உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.

Saturday, December 2, 2017

அதிரையில் மணமக்களை நேரில் வாழ்த்திய வைத்திலிங்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக முன்னாள் செயலர் வீரகணேசன். இவரது மகன் வீரகணேச. சேதுராமன். அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு  இணைச்செயலாளர். இவரது தம்பி மணமகன் வீரகணேச. வெற்றிசெல்வன், மணமகள் ஜி.கௌசல்யா ஆகியோர் திருமண கடந்த நவ.23 ந் தேதி அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.

இந்நிலையில், அதிமுக மாநில துணை ஒருங்கிணைப்பாளரும்,  மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி, இன்று சனிக்கிழமை அதிராம்பட்டினம் சேதுராமன் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ மற்றும் சேதுராமன் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
 

Thursday, November 30, 2017

பேராசிரியர் நியாஸ் அகமது திருமணம் ~ பிரமுகர்கள் வாழ்த்து (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். நியாஸ் அகமது.
காதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல்துறை (சுயநிதி) உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது திருமணம், அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில், பள்ளிவாசல் இமாம் தலைமையில், ஜமாஅத் நிர்வாகிகள், குடும்பத்தார் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பின் பேரில் காதிர் முகைதீன் கல்லூரிச் செயலர், முதல்வர், பேராசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், பஞ்சாயத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.
 
 
 
 
 

Thursday, November 9, 2017

அதிரை மைதீன் திருமணம் ~ அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அதிரை மைதீன். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர். இவர் மற்றும் இவரது சகோதரர்கள் எச்.ஹாஜா அலாவுதீன், முகமது இஸ்மாயில் ரிஸ்வாக் ஆகியோரது திருமணம், அதிராம்பட்டினம் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ஏ.கே. குமார், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், அதிமுக அதிரை பேரூர் செயலர் ஏ.பிச்சை, முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ. முகமது அப்துல் காதர், லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம். முகமது முகைதீன், அதிரை பைத்துல்மால் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, தரகர் தெரு முகைதீன் பள்ளி ஜமாஅத் தலைவர் ஆஃப்ரின் நெய்னா முகம்மது, கடற்கரைத்தெரு ஜமாத் மூத்த நிர்வாகி அக்பர் ஹாஜியார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என். காளிதாஸ், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அஹமது ஹாஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜாநஜ்முதீன் உட்பட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.