அதிராம்பட்டினம் மே-05
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக-தமாகா-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என். செந்தில் குமாரை ஆதரித்து தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் தலைமையில் கூட்டணி கட்சியினர் அதிரை பேரூராட்சி 1 வது வார்டு பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர்.
அப்போது இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி - மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்தனர். தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, அதிரை பேரூர் துணை தலைவர் கண்ணன், தமாகா அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் டி.ராஜா, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.