அதிராம்பட்டின ரோட்டரி சங்கம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், சங்க மாவட்டத் தலைவர் ஏ.பஹாத் முகமது, அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் ஜம்ஜம் அகமது அஷ்ரப், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சாகுல் ஹமீது, முன்னாள் தலைவர் டி.முகமது நவாஸ்கான், முன்னாள் செயலர் இசட். அகமது மன்சூர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.




















































