.

Pages

Showing posts with label ஹஜ் பெருநாள் நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label ஹஜ் பெருநாள் நிகழ்ச்சிகள். Show all posts

Monday, August 12, 2019

அதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.12
இசுலாமியர்களின் தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று திங்கட்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் தான் அணிந்து இருக்கும் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசு பணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு (editoradirainews@gmail.com) அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று அதிரை நியூஸ் வாசகர்கள் அனுப்பி வைத்த சுவீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  

ATJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் பெருநாள் திடல் தொழுகை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.12
தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அதிரை தவ்ஹீத் ஜமாத் சார்பில், பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை (என்.எம்.எஸ் ஜெஹபர் அலி மைதானத்தில்), மேலத்தெரு சானாவயல் ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் பேச்சாளர்கள் அப்துல் ரஹ்மான் மிஸ்க், அபூ சுஹைல் பாகவி ஆகியோர் கலந்துகொண்டு பெருநாள் குத்பா பேரூரை நிகழ்த்தினர். இத்தொழுகைகளில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

TNTJ சார்பில் அதிரையில் 2 இடங்களில் திடல் தொழுகை (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 12
தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பண்டிகை தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டினம் கிளை-1, 2 சார்பில், பெருநாள் திடல் தொழுகை, அதிரை ஈசிஆர் சாலை பிலால் நகர் நுழைவாயில் (கிராணி மைதனாம்), சி.எம்.பி லேன் (ஏ.எல்.எம் பள்ளிக்கூடம் அருகில்) ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், கலந்தர் மிஸ்க், ஆகியோர் கலந்துகொண்டு பெருநாள் குத்பா பேரூரை நிகழ்த்தினர். இத்தொழுகைகளில் பெண்கள் உட்பட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.