.

Pages

Sunday, June 2, 2019

ஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ், ஜூன் 02
புனிதமிகு ரமலான் நோன்பையொட்டி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அதிரையர்களின் ஒன்று கூடல் மற்றும் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிட்னி ஓபனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சமூக ஆர்வலர் மீராஷா தலைமை வகித்தார். ஹாலித், அஜ்வா நெய்னா, இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் வாசனையில் நோன்புக்கஞ்சி, சமூசா, மசாலா வடை, கடல் பாசி, இஞ்சி டீ, பழ வகைகள் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்கள் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, சமூக ஆர்வலர் அஜ்வா நெய்னா செய்திருந்தார். முடிவில், நோன்பாளிகள் அனைவருக்கும் மீராஷா நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 

 

அதிரையில் சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கல்!

அதிராம்பட்டினம், ஜூன் 02
அதிரை பைத்துல்மால் அமைப்பின் சேவை திட்டத்தின் கீழ், சிறுவர்களுக்கு சட்டை, கைலி வழங்கும் நிகழ்ச்சி அவ்வமைப்பின் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மஹல்லா நிர்வாகிகள் இ. வாப்பு மரைக்காயர், எம். அப்துல் ஜலீல், ரியாத் தலைவர் ஹாஜி எஸ்.சரபுதீன், இணைச் செயலாளர் எம்.அப்துல் மாலிக், இணைத் தலைவர் ஹாஜி ஏ.சாதிக் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 30 சிறுவர்களுக்கு,  சட்டை, கைலி வழங்கப்பட்டன.

Saturday, June 1, 2019

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் விறுவிறுப்பாக விற்பனையான பயணச்சீட்டு (படங்கள்)

முதல் பயணச்சீட்டை சேக்கனா நிஜாம் அவர்களுக்கு அதிராம்பட்டினம் ஸ்டேஷன் மாஸ்டர் வழங்குகிறார்.

அதிராம்பட்டினம், ஜூன் 01
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான முதல் பயணிகள் ரயிலுக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்பில் இன்று சனிக்கிழமை  உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிராம்பட்டினத்திலிருந்து ரயிலில் முதல் பயணம் மேற்கொள்ள பயணிகள் ஆர்வத்துடன் பயணச்சீட்டுகளை பெற்றுச்சென்றனர். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அலைமோதியது. பயணிகள் அனைவரும் பொறுமையாக வரிசையில் நின்று பயணச்சீட்டை பெற்றனர். குறைந்த நேரத்தில் பயணச்சீட்டு விறுவிறுப்பாக விற்பனையாகியது.
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிக்கு வழங்கிய முதல் பயணச்சீட்டு
 
 

ரயில் போக்குவரத்து சேவை தொடங்க பாடுபட்டோர் நலனுக்கு சிறப்பு 'துஆ' (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 01
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான முதல் பயணிகள் ரயிலுக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்பில், இன்று சனிக்கிழமை உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ. முஹம்மது நெய்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு,  ரயில் போக்குவரத்து சேவையை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட ரயில் ஆர்வலர்கள், இப்பணிக்காக பாடுபட்ட ரயில்வே உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் உட்பட ரயில் பயணிகள் அனைவரின் வாழ்வு சிறக்கவும், பயணிகளின் ரயில் பயணம் பாதுகாப்பாக அமையவும், சிறப்பு துஆ ஓதி பிரார்த்தனை செய்தார். 

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை நிறுவனத் தலைவர் மு.க.செ அகமது அலி ஜாஃபர், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் சிஹாப்தீன், செயலர் ஹாஜி ஏ அப்துல் ரெஜாக் மற்றும் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

அதிராம்பட்டினம் நிலையத்தில் முதல் பயணிகள் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு (வீடியோ)

அதிராம்பட்டினம், ஜூன் 01
திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையேயான முதல் பயணிகள் ரயிலுக்கு அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்பில், இன்று சனிக்கிழமை உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மார்ச் 29ந் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே பயணிகள் சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே துறைக்கு அனுமதி கிடைத்ததையடுத்து, திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) இன்று (ஜூன் 1) சனிக்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று,  அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு பகல் மணிக்கு வந்து சேர்ந்தது.

ரயில் பயணிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு:
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த ரயிலுக்கு, பயணிகள், பொதுமக்கள் கையசைத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். சக பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

சிறப்பு துஆ (பிரார்த்தனை):
அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ. முஹம்மது நெய்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயணிகளின் ரயில் பயணம் பாதுகாப்பாக அமையவும், ரயில் போக்குவரத்து சேவையை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட ரயில் ஆர்வலர்கள், இப்பணிக்காக பாடுபட்ட ரயில்வே உயர் அதிகாரிகள், பொறியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் உட்பட ரயில் பயணிகள் அனைவரின் வாழ்வு சிறக்கவும், சிறப்பு துஆ ஓதி பிரார்த்தனை செய்தார்.  இதில், அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை நிறுவனத் தலைவர் மு.க.செ அகமது அலி ஜாஃபர், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் சிஹாப்தீன், செயலர் ஹாஜி ஏ அப்துல் ரெஜாக் மற்றும் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் உட்பட சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

விறு விறுப்பாக விற்பனையான பயணச்சீட்டு:
முன்னதாக, அதிராம்பட்டினத்திலிருந்து ரயிலில் முதல் பயணம் மேற்கொள்ள பயணிகள் ஆர்வத்துடன் பயணச்சீட்டுகளை பெற்றுச்சென்றனர். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அலைமோதியது. பொறுமையாக வரிசையில் நின்று பயணச்சீட்டை பெற்றனர்.

ரயில் வருகையை படம்பிடித்த செல்பி பிரியர்கள்:
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் வருகைக்காக காத்திருந்த செல்பி பிரியர்கள் ரயில் அருகே சென்று தங்களது கேமிரா மூலம் படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து பகல் 11.32 மணிக்கு புறப்பட்டு, பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரியகோட்டை, பெரியகோட்டை, புதுவயல், கண்டனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பின்னர் பிற்பகல் 14.15 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தை அடையும், எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து (வண்டி எண்: 06848) பிற்பகல் 14.30 மணிக்குப் புறப்படும் ரயில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு மாலை 17.18 மணிக்கு வந்து சேரும், பின்னர் அங்கிருந்து மாலை 17.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 20.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும், இந்த பயணிகள் ரயில் சேவை இன்று (ஜூன் 1) தொடங்கி, வரும் ஆகஸ்ட் 30 ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் சேவை தொடக்கம் குறித்து அதிராம்பட்டினம் ரயில் ஆர்வலர்கள் (இணைப்பில் வீடியோ)


 
 
 

அதிரையில் நலிவடைந்த பேச இயலாத ~ காது கேளாதோருக்கு கைலி வழங்கல்!

அதிராம்பட்டினம், ஜூன் 01
ரமலான் நோன்பு பெருநாளை முன்னிட்டு, அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத ~ காது கேளாதோர் நல சங்கத்தில் அங்கம் வகிக்கும் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு கைலிகள் வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நலச்சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய் ஹாஜா சரீப், துணைத்தலைவர் ஏ.சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஆர்.மன்சூர், முன்னாள் நிர்வாகிகள் ஜெஹபர் சாதிக், நூருல் அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.