அதிராம்பட்டினம், கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ள செய்னாங்குளம் அதிரை பேரூராட்சி சார்பில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் குளத்தில் நீர் நிரம்பியது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்தை வீட தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால் குளத்தின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வற்றும் நிலையில் உள்ளது.
இந்தநிலையில் தினமும் அதிகாலை நேரங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வெள்ளை கொக்குகள் குளத்திற்கு வந்து செல்கின்றன. குளத்தில் உள்ள சிறிய மீன் குஞ்சுகளை இரையாக உண்ணுகின்றன. குளத்தை அலங்கரிக்கும் வெள்ளை கொக்குகளின் அணிவகுப்பு காட்சியை இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் ரசித்து பார்க்கின்றனர்.