.

Pages

Monday, January 29, 2018

அபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம்!

அதிரை நியூஸ்: ஜன.28
அபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம்

அபுதாபியில், அமீரகத்தின் அனைத்து எமிரேட்டுகளிலும் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் இனி எஸ்எம்எஸ் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்த Mawaqifல் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஞாயிறு 28.01.2018 முதல் இத்துடன் உள்ள விளக்கப்படத்தில் காணப்பட்டுள்ளவாறு உங்கள் மொபைலில் இருந்தே நேரடியாக பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம். அதேவேளை பழைய நடைமுறைப்படி Mawaqifல் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தும் நடைமுறையும் மறுஅறிவிப்பு வரும் வரை தொடரும்.

அதேபோல் அபுதாபி சிட்டி என்பதை குறிக்க முன்பு RED என Code டைப் செய்ய வேண்டியிருந்தது இனி AUH என்றே Code டைப் செய்ய வேண்டும். சாதாரண பார்க்கிங் மணிக்கு 2 திர்ஹமும், பிரிமியம் பார்க்கிங் கட்டணம் மணிக்கு 3 திர்ஹமும் செலுத்த வேண்டும்.

மொபைல் வழியாக எம்எஸ்எம் செய்து பார்க்கிங் கட்டணம் செலுத்துவது எப்படி?

The new format for mobile parking is: 
city code, plate category, space, plate number, space, S or P, space and duration in hours. Motorists can send the parking SMS to 3009.

City codes are the following:
Abu Dhabi: (AUH5 00000 S1),
Dubai: (DXBA 00000 S1),
Sharjah: (SHJ1 00000 S1),
Ajman: (AJMB 00000 S1),
Umm Al Quwain: (UAQC 00000 S1),
Ras Al Khaima: (RAKN 00000 S1) and
Fujairah: (FUJS 00000 S1).

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் விலை அறிவிப்பு!

அதிரை நியூஸ்: ஜன. 29
அமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல் விலை அறிவிப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பின் முதன்முதலாக 25.01.2018 தேதிய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பேரல் ஒன்று 71 டாலருக்கு விற்கப்படுவதால் அமீரக சில்லரை பெட்ரோல் விலையிலும் அதன் தாக்கம் கூடியுள்ளது.

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ளது கடந்த ஜனவரி மாத பெட்ரோல் விலை ஒப்பீட்டுக்காக.

5 வாட் வரி உட்பட புதிய விலை வருமாறு:
1. சூப்பர் 98 - 2.36 திர்ஹம் (2.24)
2. ஸ்பெஷல் 95 - 2.25 திர்ஹம் (2.12)
3. ஈ பிளஸ் 91 - 2.17 திர்ஹம் (2.05)
4. டீசல் - 2.49 திர்ஹம் (2.33)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Sunday, January 28, 2018

ஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்சிக்கு வைப்பு!

அதிரை நியூஸ்: ஜன.28
2000 ஆம் ஆண்டு 55 பொற்கொல்லர்களின் 450 மணிநேர உழைப்பில் 45 நாட்களில் தயாரிக்கப்பட்டது இந்த 21 காரட் 'நஜ்மா தைபா' என்கிற (Star of Taiba) தைபா நட்சத்திரம் என்ற பெயர் கொண்ட இந்த கின்னஸ் உலக சாதனை மோதிரம். இந்த மோதிரம் துபையை சேர்ந்த தைபா என்கிற நிறுவனத்திற்கு சொந்தமானது. இதன் தயாரிப்புச் செலவு அப்போது 547,000 டாலர்கள்.

தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,300 டாலருக்கு விற்பனையாகிக் கொண்டுள்ள நிலையில் இதன் விலை ராக்கெட் வேகத்தில் 3 மில்லியன் டாலராக (சுமார் 11 மில்லியன் திர்ஹமாக) உயர்ந்துள்ளது. இந்த மோதிரத்தில்  5.1 கிலோவுக்கு விலையுயர்ந்த கற்களும், ரத்தினங்களுடன் 615 ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டைல்களும் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த சாதனை மோதிரம் பொதுமக்களின் பார்வைக்காக ஷார்ஜா ஸஹாரா சென்டரின் தரைதளத்தில், ரோஸெல்லா ஜூவல்லரி ஷாப் எதிரே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜன.28
அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை இலவச பல் மருத்துவ முகாம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட தொலைதொடர்பு ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் இரா.ஆதித்தன் 10 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையின் இலவச பல் மருத்துவ முகாம் பட்டுக்கோட்டை பாக்கியம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு ஆதி.ராஜாராம் தலைமை வகித்தார். முகாமில் 500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல் மருத்துவர்கள் பா. பாரதி, எஸ். முருகராஜ், எஸ். எஸ்.சௌபர்ணிகா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். மேலும், பட்டுக்கோட்டை வள்ளலார் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் ப. இராமுத்தேவர் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

முன்னதாக இரா.ஆதித்தன் உருவப்படத்திற்கு அனைத்துக் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
 
 
 
 
 

அதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்  இன்று (ஜன.28) ஞாயிற்றுக்கிழமை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், மஹல்லா சங்கங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிரை பேருந்து நிலையத்தில் நடந்த முகாமில், அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை கலந்துகொண்டு  குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார். இம்முகாமில், சுகாதார ஆய்வாளர் எஸ். வெங்கடேஷன், துப்புரவு கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் அரசு ஆரம்ப சுதார நிலைய செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் முகமது நவாஸ்கான், பொருளாளர் அகமது மன்சூர் மற்றும் சாகுல் ஹமீது, அய்யாவு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 

துபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்பு!

அதிரை நியூஸ்: ஜன.28
நபிகள் நாயகம் நவின்றுள்ளார்கள்...
பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் ஒருவனுக்குத் திரும்பக் கிடைக்கப்பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அதனை விட பல மடங்கு, பாவ மன்னிப்பு தேடும் அடியானைப் பார்த்து இறைவன் மகிழ்ச்சி கொள்கின்றான்.

மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன் கேட்கும் மன்னிப்பினால் இறைவனுக்கு எந்தவித பலனும் ஏற்படப் போவதில்லை. ஆனாலும் தன் மேல் நம்பிக்கை வைத்து தனது அடியான் மீளும்போது அதனை நினைத்து இறைவன் பேருவகை கொள்கின்றான்.

மேற்படி ஹதீஸில் காணாமல் ஓட்டகம் திரும்பக் கிடைப்பவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி இங்கு உவமையாக கூறப்பட்டுள்ளதைப் போல் துபை விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது.

சவுதியிலிருந்து ஒரு ஆசிய நாட்டுப் பயணி துபை விமானம் நிலையம் வழியாக டிரான்ஸிட்டில் சென்றுள்ளார். அப்போது தான் வாழ்நாள் முழுவதும் உழைத்ததற்காக கிடைத்த கிராஜிவிட்டி பணம் (End of service benefits) 20,000 டாலர்கள் கொண்ட ஒரு பையை துபை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுச் சென்றுவிடுகின்றார். அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும், குடும்பத்தினரிடம் சந்தித்த அவமானங்கள் எல்லாம் உங்கள் கற்பனைக்கு.

இச்சம்பவம் நடைபெற்று 2 மாதங்கள் கழித்து துபை விமான நிலைய போலீஸார் ஒருவழியாக அவரை தேடித்தொடர்பு கொண்டு உங்களுடைய பணம் பத்திரமாக உள்ளது என ஒப்படைத்தால் எப்படி இருந்திருக்கும்! மீண்டும் மேற்படி நபிமொழியை உளப்பூர்வமாக வாசித்துப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ் நாமும் இனி உதவியையும் பாவ மன்னிப்பையும் அல்லாஹ்விடமே தொழுகையை கொண்டும், பொறுமையை கொண்டும் எதிர்பார்த்திருப்போமாக.

கடந்த வருடம் 1,175 புகார்கள் பெறப்பட்டு அனைத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாலும் துபை விமான நிலையங்களில் சீருடை அணிந்த ஒரு காவலரைக் கூட காண இயலாத ஆச்சரியத்தை கடந்த வருடம் துபை விமான நிலையங்களிலிருந்து பயணித்த சுமார் 91 மில்லியன் பயணிகளும் உணர்ந்திருப்பர். இது எப்படி சாத்தியமானது?

துபை விமான நிலையங்கள் முழுவதும் சுமார் 9,500 கேமிராக்கள் பொருத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் காணாமல் போனது மற்றும் திரும்பக் கிடைத்தலை கண்காணிக்கும் துறையே ஒரு மேம்பட்டத் திட்டத்தின் (We have an advanced programme for lost-and-found items)  மூலம் இயக்கப்படுகின்றதால் தான் மேற்படி 20,000 டாலர் சம்பவத்தைப் போலவே பல சம்பவங்களை சொல்லிக்காட்ட முடியும்.

குறிப்பாக, ஒரு ஐரோப்பிய பெண் ஒருவர் 50,000 யூரோக்கள், மொபைல் போன்கள், கிரடிட் கார்டுகள், நகைகள், அசல் சான்றிதழ்கள் கொண்ட ஒரு பையை தொலைத்துவிட்டுச் சென்ற போதும், இன்னொரு ஐரோப்பியர் சுமார் 43,000 திர்ஹம் மதிப்புடைய ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை மறந்துவிட்டுச் சென்றபோதும், பல பெற்றோர்கள் குழந்தைகளையே மறந்துவிட்டுச் சென்ற போதும் அடையாளம் காணப்பட்டு அவரவரிடம் ஒப்படைக்க ஏதுவானது என துபை விமான நிலைய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை ஜன.28-
பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்.

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன், மாணவர் சங்க நிர்வாகிகள் அரவிந்தசாமி, சசிகுமார் மற்றும் உள்ள தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகில் சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியம் மற்றும் நகரக்கிளை சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுந்தர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை  தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இந்திய தொழிற்சங்க மைய ஒருங்கிணைப்பாளர் என். கந்தசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க தலைவர் கே.செல்வம்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் எஸ் பாலகிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய பொருளாளர் வீ.சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நசீர், விவேக், முருக.சரவணன் ஆகியோர் கண்டன  உரையாற்றினர். தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால் நிறைவுறையாற்றினார். முடிவில் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், ' பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மக்களின் தலையில் நிதிச்சுமையை ஏற்றக்கூடாது' என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
 

துபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் - புதிய ஆய்வு தகவல்!

அதிரை நியூஸ்: ஜன.28
துபை ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் - புதிய ஆய்வு தகவல்.

துபையும் ஷார்ஜாவும் சுற்றியுள்ள இத்திஹாத் ரோடு, டமாஸ்கஸ் சாலை, பெய்ரூட் சாலை, முஹமது பின் ஜாயித் ரோடு, எமிரேட்ஸ் ரோடு ஆகிய 5 முக்கிய நெடுஞ்சாலைகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் மூலம் இருபுறமும் நாளொன்றுக்கு சுமார் 9 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.

மேற்காணும் 5 நெடுஞ்சாலைகள் வழியாக இருபுறமும் மணிக்கு சராசரியாக 33,200 வாகனங்கள் வரை செல்லலாம் ஆனால் பரபரப்பான நேரங்களில் சுமார் 40,000 முதல் 52,000 வாகனங்கள் வரை செல்வதால் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கொள்கின்றன. இதனால் ஒவ்வொரு வாகனமும் சராசரியாக 2.40 மணிநேரங்கள் சாலைகளில் காத்திருக்கின்ற நிலை ஏற்படுகின்றது.

இந்தத் தாமதம் மற்றும் எரிபொருள் இழப்புக்களை பொருளாதார ரீதியாக கணக்கிட்டால் ஆண்டொன்றுக்கு சுமார் 4.3 பில்லியன் திர்ஹம் இழப்பாகின்றன. இந்த இழப்புத் தொகையை பயன்படுத்தி ஆண்டுக்கு சுமார் 12 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ லைன்களையே புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டு செல்லலாம்.

சுமார் 3 பில்லியன் செலவில் துபையின் அல் கியாதா மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து ஷார்ஜாவின் சிட்டி சென்டர் வரை சுமார் 7.5 கி.மீ தூரத்திற்கு (இடையில் வேறு மெட்ரோ நிலையங்களை அமைக்காமாலேயே) நேரடியாக மெட்ரோ ரயிலை இயக்கினால் மணிக்கு இருபுறமும் சுமார் 22,000 பயணிகள் பயணம் செய்வர், இதன் மூலம் தற்போதைய போக்குவரத்தின் நெரிசலில் 3ல் 1 பங்கை குறைத்துவிட முடியும்.

மேலும் நெரிசலுக்கு காரணமான சுமார் 52,000 வாகனங்களிலிருந்து சுமார் 16,000 வாகன ஓட்டிகள் மெட்ரோவுக்கு மாறுவர் என இரு எமிரேட்டுகளின் போக்குவரத்து துறையின் ஒத்துழைப்புடன் ஆய்வு நடத்திய தனியார் நிறுவனம் ஒன்று அறிக்கையளித்துள்ளது. இது இரு எமிரேட்டுகளின் போக்குவரத்தை குறைக்கும் நிரந்தரத் தீர்வல்ல என்றும், இந்த அறிக்கையை அமீரகத்தின் மத்திய அமைச்சரவை (Federal Government) பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதுடன் வேறு மாற்றுவழிகளையும் முயற்சிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு சில வருடங்களுக்கு முன், துபை ஷார்ஜாவை புதிய தரை வழிச்சாலைகள் மூலம் இணைக்க வாய்ப்பு இல்லாததால் கடலுக்கு அடியில் சுரங்கவழிச் சாலை அமைக்க ஆலோசணை வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்