.

Pages

Tuesday, May 26, 2020

இலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் (வீடியோ, படங்கள்)

அதிராம்பட்டினம், மே 26
விவசாயிகள், குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான புதிய சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழக காங்கிரஸ் கட்சி அறிவுறுத்திருந்தது.

அதன் படி, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே. தமீம் அன்சாரி தலைமையில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன், துணைத்தலைவர் நாராயண சாமி, பொருளாளர் ஜி.திலகராஜ் கட்டபொம்பன் உள்ளிட்ட 4 பேர் அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் ஆகியவற்றின் முன்பாக, கையில் கருப்பு கொடி ஏந்தி, சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சுமார் 2 நிமிடத்திலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

Monday, May 25, 2020

குவைத்தில் ஹாஜி அதிரை அப்துல் ஹக்கீம் (56) காலமானார்!

அதிரை நியூஸ்: மே 25
அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ அகமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜுதீன், கிஜார் முகமது, ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், ஜெ.நெய்னா முகமது அவர்களின் மாமனாரும், ஏ.ஜெ அஸ்ரப் அலி (சென்னை ஆர்.ஆர் வாட்ச்) அவர்களின் சகோதரர் உறவு முறையும், அகமது ஜமான் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ஹக்கீம் (வயது 56) அவர்கள் இன்று குவைத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா குவைத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: மே.25
தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி மற்றும் கரம்பயம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (25.05.2020)  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு, தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1153 ஊரக குடியிருப்புகள் மற்றும் அதிரம்பட்டினம், பேராவூரணி, பெருமகளுர் ஆகிய பேரூராட்சிகளைச் சேர்ந்த குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அணைக்குடி, வீரமாங்குடி, செம்மங்குடி ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணறுகளிலிருந்து நீர் பெறப்பட்டு, வீரமாங்குடியில் அமைக்கப்பட்டுள்ள 21.20 இலட்சம் கொள்ளளவு கொண்ட பொது நீர் சேகரிப்பு தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து சூரக்கோட்டை மற்றும் புதூர் பகுதிகளில் உள்ள தரைமட்ட தொட்டிகள் வழியாக கரம்பயம் பகுதியில் உள்ள நீர் உந்து தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. கரம்பயம் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சுமார் 604.52 கிமீ நீளமுள்ள நீரேற்று குழாய்கள் மூலமாக 3 வழித்தடங்களில் கொண்டு செல்லப்பட்டு, 9 ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள 180 தரைமட்ட தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

180 தரைமட்ட தொட்டிகளில் சேகரிக்கப்படும் குடிநீர் சுமார் 1049 கிமீ நீளமுள்ள நீரூட்டும் குழாய் மூலம் 1153 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே பயனில் உள்ள 1291 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

செம்மங்குடி, அணைக்குடி, வீரமாங்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறுகள், வீரமாங்குடியில் அமைந்துள்ள பொது நீர் சேகரிப்பு தொட்டி, கரம்பயம் பகுதியில் அமைந்துள்ள நீர் உந்து தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் மின் இயந்திரங்களை முறையாக பராமரித்திடவும், அவ்வபோது ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்திடவும் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார். நீரேற்று நிலையங்கள், நீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் நீர் செல்லும் பாதைகளை கண்காணித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், நிர்வாகப் பொறியாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் சேகர், தங்கவேல், உதவி பொறியாளர் விவேகானந்தன், திட்ட இயக்குனர் முரளி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
அதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 25
இசுலாமியர்களின் ஈகைத் திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை தமிழகமெங்கும் இன்று திங்கட்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடை. இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும், தான் அணிந்து இருக்கும் உடையைப்பற்றியும், பெற்றோர் மற்றும் உறவினர்களிடமிருந்து பெறுகின்ற அன்பளிப்பு காசு பணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு (editoradirainews@gmail.com) அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.   

பெருநாளன்று அதிரை நியூஸ் வாசகர்கள் அனுப்பி வைத்த சுவீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...