.

Pages

Thursday, July 30, 2020

மரண அறிவிப்பு ~ ஜலீலா அம்மாள் (வயது 65)

அதிரை நியூஸ்: ஜூலை 30
அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு. காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ்.முகமது ஹனீபா அவர்களின் மருமகளும், 'ஜலீலா ஜுவல்லரி' நிறுவனர் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.கே முகமது பாருக் அவர்களின் சகோதரியும், ராஜிக் அகமது, ரெஜீஸ்கான், மர்ஹூம் ரபியூதீன் ஆகியோரின் தாயாருமாகிய ஜலீலா அம்மாள் (வயது 65) அவர்கள் அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-07-2020) தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரையில் 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (53) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூலை 28
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாபிஸ் மு.செ.மு மஹ்மூத் அவர்களின் மகனும், மு.செ.மு முகமது ஹசன் அவர்களின் சகோதரரும், 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (வயது 53) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (30-07-2020) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, July 29, 2020

கரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஜூலை 29
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள அனுமதி பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வல்லம் மற்றும் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள தயக்கமுள்ளவர்கள், தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்து தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.

விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஒப்புதல் பெற்றபின், அவ்வீட்டினை தொடர்புடைய வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து தனிமைப்படுத்திக் கொள்ள தனி கழிவறையுடன் கூடிய தனியறை உள்ளதை உறுதிசெய்து மாவட்ட குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். 

அதனடிப்படையில் அருகில் வசிப்பவர்களுக்கு ஆட்சேபனை இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அனுமதி பெறுபவர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினத்தில் 16.20 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், ஜூலை 29
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை அதிகாலை மின்னல், இடியுடன் கூடிய மழை செய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (29-07-2020) புதன்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி, அதிராம்பட்டினம் 16.20 மி.மீ, மதுக்கூர் 47 மி.மீ, பட்டுக்கோட்டை 14 மி.மீ,  பேராவூரணி 12.40, ஒரத்தநாடு 6.40, தஞ்சாவூர் 15, வல்லம் 10, திருவையாறு 9, பூதலூர் 11.40, திருக்காட்டுப்பள்ளி 8.80, நெய்வாசல் தென்பாதி 14.80, வெட்டிக்காடு 11.80, கும்பகோணம் 36, பாபநாசம் 18.40, அய்யம்பேட்டை 16, திருவிடைமருதூா் 36, மஞ்சளாறு 52.40, லோவர் அணைகட் 84.80,  ஈச்சன்விடுதி 2.40 மி.மீ மழை பதிவாகியது.

அதிரையில் மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலைவர் பசீர் அகமது (70) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூலை 29
அதிராம்பட்டினம், பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும், முகமது ராவூத்தர் அவர்களின் சகோதரரும், செல்லத்தம்பி என்கிற ஜாஹிர் உசேன், வாஹித் சஃப்ரின், அப்துல்லா ஆகியோரின் மாமாவும், செய்யது புஹாரி அவர்களின் மாமனாரும், மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலைவருமாகிய பசீர் அகமது (வயது 70) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, July 28, 2020

மரண அறிவிப்பு ~ ஜெமீலா அம்மாள் (வயது 65)

அதிரை நியூஸ்: ஜூலை 28
அதிராம்பட்டினம், காலியார்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இ.மு.செ சுலைமான் அவர்களின் மகளும், மேலத்தெரு மர்ஹூம் கா.நெ காதர் சாஹிப் அவர்களின் மருமகளும், மண்ணெண்ணெய் கடை முகமது சாலிஹ் அவர்களின் மனைவியும், இ.மு.செ நெய்னா முகமது, இ.மு.செ அலியுல் ஹவ்வாஸ் ஆகியோரின் சகோதரியும், சி.கா.மு அயூப்கான், கா.நெ நெய்னா முகமது, கா.நெ இலியாஸ் ஆகியோரின் மாமியாரும், அஜ்மல்கான், யாசின் அராபத் ஆகியோரின் தாயாருமாகிய ஜெமீலா அம்மாள் (வயது 65) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (29-07-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

தஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020 வரை முழு நேரம் இயங்கிட சிறப்பு அனுமதி!

அதிரை நியூஸ்: ஜூலை 28
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திட தஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020 வரை முழு நேரம் இயங்கிட மாவட்ட ஆட்சியர் சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (28-07-2020) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது;

மரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது இஸ்மாயில் (வயது 76)

அதிரை நியூஸ்: ஜூலை 28
அதிராம்பட்டினம், காலியார் தெரு மர்ஹூம் ஹாபிஸ் அபுயூசுப் அவர்களின் மருமகனும், கட்டுமாவடி மர்ஹூம் தாவூத் சாஹீப் அவர்களின் மகனும், ஏ.ஷர்புதீன் அவர்களின் மச்சானும், அகமது அமீன், முகமது செய்யது, ஜமால் முகமது, அகமது கபீர் ஆகியோரின் தகப்பனாரும், முகமது நஜீப் அவர்களின் மாமனாரும், தாஹிர் ஜமான், அப்துல் பாசித் ஆகியோரின் அப்பாவுமாகிய ஹாஜி முகமது இஸ்மாயில் (வயது 76) அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் காலியார்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-07-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.