.

Pages

Friday, July 11, 2014

பேராவூரணி நகர வர்த்தக கழக நிர்வாகிகள் பதவியேற்பு விழா !

பேராவூரணி ஜூலை-11;
பேராவூரணி நகர வர்த்தக கழக புதிய நிர்வாகிகள்
பதவியேற்பு விழா வர்த்தக சங்க கட்டிட அலுவலகத்தில் வியாழன் அன்று மாலை நடைபெற்றது.
             
நிகழ்ச்சிக்கு பேராவூரணி பேரூராட்சி மன்றத்தலைவரும், கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினருமான என்.அசோக்குமார் தலைமை வகித்தார்.கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் கந்தப்பன், எல்.ஏ.முகமது மைதீன்,எம்.ஏ.லத்தீப், க.அன்பழகன், டாக்டர் மு.சீனிவாசன், என்.நல்லசாமி, எஸ்.டி.டி.சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
             
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குழ.செல்லையா (அதிமுக), ஆர்.சிங்காரம் (காங்கிரஸ்), அதிமுக தொகுதிச்செயலாளர் மா.கோவிந்தராஜன், திமுக நகரச்செயலாளர் சுப.சேகர், மதிமுக விவசாய அணி மாநிலச்செயலாளர் மு.கி.லெனின், பாப்பாநாடு வர்த்தக கழக நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
           
விழாவில் வர்த்தக சங்க தலைவராக பி.எஸ்.அப்துல்லா, செயலாளராக ஆர்.வெங்கடேசன், பொருளாளராக ஏ.சி.சி.ராஜா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர் .வர்த்தக சங்க தலைவர் பி.எஸ்.அப்துல்லா ஏற்புரையாற்றினார்.லயன்ஸ் சங்கம்,ரோட்டரி சங்கம்,சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் மற்றும் நகர பிரமுகர்கள், வர்த்தகர்கள் விழாவில் பங்கேற்றனர்.
             
கட்டிடப்பொறியாளர் அம்மன் பில்டர்ஸ் திருப்பதி, வர்த்தக சங்க தேர்தல் பணிக்குழு பாரதி வை.நடராஜன், பிரசாத, கதிர்காமம், மணிகண்டன், கார்த்தி, வர்த்தக சங்க கணக்காளர் பக்கிரிசாமி ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

படம் :
பதவியேற்ற வர்த்தக கழக நிர்வாகிகள் நகர பிரமுகர்களுடன்.

செய்தி & போட்டோ :
எஸ்.ஜகுபர் அலி,
பேராவூரணி.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.