.

Pages

Thursday, July 10, 2014

தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளியின் இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் திரளாக கலந்துகொண்ட அதிரையர்கள் !

அதிரையின் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்று தரகர் தெரு. இப்பகுதியில் அமைந்துள்ள முகைதீன் ஜும்மா பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் தினமும் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பில் பொறுப்பாளர்கள் மூலம் தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும், இரவில் தராவீஹ் தொழுகையும், அதனை தொடர்ந்து ஹிஸ்பு நிகழ்வும் நடைபெறுகிறது. பள்ளியில் தினமும் காலை 11 மணியளவில் பெண்களுக்கான மார்க்க சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது.









2 comments:

  1. அருமையான புகைப்படங்கள். அல்லாஹ் வரக்கூடிய ரமலான் நாட்களையும் சிறப்பாகி வைபானகவும் அமீன்.

    இந்த வருடமும் மேலத்தெரு ஜும்மாப்பள்ளி இப்தார் புகைபடத்தை கான வேண்டும் என்ற ஒரு ஏக்கம்.

    ReplyDelete
  2. அன்று பஞ்சாயத் கட்டுப்பாட்டுக்கு பெயர்போன தெரு - தரகர் தெரு என்கிற ஆசாத் நகர். பொருளாதாரம், படிப்பு, வாழ்க்கை தரம் இவற்றில் பின் தங்கிய இருந்தபோதிலும் காவல்நிலையம்- கோர்ட் என்று செல்லாமல் தெரு பஞ்சாயத்துக்கு மக்கள் கட்டுப்பட்டு இருந்தார்கள்.

    காலப்போக்கில் பஞ்சாயத்து மாறியதும் குறுகியகாலத்தில் தெருவிற்கு நல்லதிட்டங்கள் அமல்படுத்தி அசுரவளர்ச்சி கண்டதை யாவரும் அறிவர்.

    தன்னை முழுவதும் தெரு வளர்ச்சிக்காக அர்பணித்த ஒருவர் மீது ஒருசிலரால் காட்டப்பட்ட கால்புனர்ச்சியால், சூத்திதிரத்தால் தெருமக்கள் பிளவுபடகாரனமாகிவிட்டது.

    நடுநிலையாளர்கள் என்று சொல்லக்கூடியவர்கலும் ஒதுங்கிகொண்டதால் தெருநிர்வாகம் - பஞ்சாயத் கட்டுப்பாடு முன்புபோல் இல்லை.

    சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் காவல்நிலையத்துக்கு போகவேண்டிய அவல நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    நோன்பு பெருநாள் தொழுகை, ஹஜ்ஜு பெருநாள் தொழுகை, மையத்து நல்லடக்கம் இவைகளுக்கு போலீஸ் பாதகாப்பு இல்லாமல் நடைபெறமுடியாது - இப்படி ஒரு அவலநிலைமை ஏற்பட யாரு காரணம்??

    நடுநிலையாளர்களே, அமைதிவிரும்புவோர்களே இந்நிலை நீடித்தால் வருங்கால நம் சந்ததினர்க்கும் இதே அவல நிலை தான் இதனை கருத்தில் வைத்துகொண்டு நல்லதொரு முடிவை நாம் எடுக்க வேண்டும்!

    சகோதர்களே நாம் நினைத்தால் சமூகத்தில் மாற்றம் கொண்டுவரலாம் - இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.