இந்த பள்ளியில் தினமும் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பில் பொறுப்பாளர்கள் மூலம் தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும், இரவில் தராவீஹ் தொழுகையும், அதனை தொடர்ந்து ஹிஸ்பு நிகழ்வும் நடைபெறுகிறது. பள்ளியில் தினமும் காலை 11 மணியளவில் பெண்களுக்கான மார்க்க சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது.











அருமையான புகைப்படங்கள். அல்லாஹ் வரக்கூடிய ரமலான் நாட்களையும் சிறப்பாகி வைபானகவும் அமீன்.
ReplyDeleteஇந்த வருடமும் மேலத்தெரு ஜும்மாப்பள்ளி இப்தார் புகைபடத்தை கான வேண்டும் என்ற ஒரு ஏக்கம்.
அன்று பஞ்சாயத் கட்டுப்பாட்டுக்கு பெயர்போன தெரு - தரகர் தெரு என்கிற ஆசாத் நகர். பொருளாதாரம், படிப்பு, வாழ்க்கை தரம் இவற்றில் பின் தங்கிய இருந்தபோதிலும் காவல்நிலையம்- கோர்ட் என்று செல்லாமல் தெரு பஞ்சாயத்துக்கு மக்கள் கட்டுப்பட்டு இருந்தார்கள்.
ReplyDeleteகாலப்போக்கில் பஞ்சாயத்து மாறியதும் குறுகியகாலத்தில் தெருவிற்கு நல்லதிட்டங்கள் அமல்படுத்தி அசுரவளர்ச்சி கண்டதை யாவரும் அறிவர்.
தன்னை முழுவதும் தெரு வளர்ச்சிக்காக அர்பணித்த ஒருவர் மீது ஒருசிலரால் காட்டப்பட்ட கால்புனர்ச்சியால், சூத்திதிரத்தால் தெருமக்கள் பிளவுபடகாரனமாகிவிட்டது.
நடுநிலையாளர்கள் என்று சொல்லக்கூடியவர்கலும் ஒதுங்கிகொண்டதால் தெருநிர்வாகம் - பஞ்சாயத் கட்டுப்பாடு முன்புபோல் இல்லை.
சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் காவல்நிலையத்துக்கு போகவேண்டிய அவல நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நோன்பு பெருநாள் தொழுகை, ஹஜ்ஜு பெருநாள் தொழுகை, மையத்து நல்லடக்கம் இவைகளுக்கு போலீஸ் பாதகாப்பு இல்லாமல் நடைபெறமுடியாது - இப்படி ஒரு அவலநிலைமை ஏற்பட யாரு காரணம்??
நடுநிலையாளர்களே, அமைதிவிரும்புவோர்களே இந்நிலை நீடித்தால் வருங்கால நம் சந்ததினர்க்கும் இதே அவல நிலை தான் இதனை கருத்தில் வைத்துகொண்டு நல்லதொரு முடிவை நாம் எடுக்க வேண்டும்!
சகோதர்களே நாம் நினைத்தால் சமூகத்தில் மாற்றம் கொண்டுவரலாம் - இன்ஷா அல்லாஹ்