.

Pages

Thursday, May 7, 2015

+2 தேர்வில் துபாயில் முஹம்மது முதலிடம், ரஷீதா இரண்டாமிடம், ஆயிஷா மூன்றாமிடம் !

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் கிரசண்ட் ஆங்கில உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தமிழில் முதல் பாடமாக கொண்டு 20 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

இந்த தேர்வை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை நடத்துகிறது. இங்கிருந்து ஆசிரியர்கள் சென்று தேர்வை நடத்தி முடித்த பின்னர் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

தமிழகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை போன்று துபாயில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில் 19 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95 சதவீதமாகும்.

இதில் மாணவர் முகம்மது குப்தீன் ஜாபர்அலி 1116 மதிப்பெண் பெற்று முதலிடம் வகித்தார். ரஷிதா 1059 மார்க் எடுத்து 2–வது இடமும், ஆயிஷா 1045 மார்க் பெற்று மூன்றாவது இடமும் பெற்றனர்.

இந்த பள்ளியில் அரபிக் உள்ளிட்ட பிற மொழிப் பாடங்கள் இருந்தபோதிலும் தமிழ் மாணவர்கள் தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:மாலைமலர்

3 comments:

  1. வாழ்த்துக்கள்.! பாராட்டுக்கள்! மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. கடல்கடந்து சென்று கல்விகற்றாலும் கடுகளவும் சோடைபோகாமல் ஜொலித்து வென்று வெற்றிக் கொடி நட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனி அதிரையின் கல்விக்காலம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.