.

Pages

Sunday, May 10, 2015

அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது அறிவிப்பு !

அதிரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நமதூர் அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் 1 ம் ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.

கல்வியில் பின்தங்கிய நமது பகுதியை மேம்படுத்தும் நோக்கில் நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மற்றும் பெற இருக்கும் மாணவ மாணவிகள், கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோருக்கு 'அதிரை நியூஸ் கல்வி விருதுகள்-2015' என்ற பெயரில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெறும் மாபெரும் விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

அதிரை நியூஸ் கல்வி விருது கமிட்டியினரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட பரிசுத்தொகையோடு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட இருக்கின்றனர்.

பன்னிரெண்டாம் வகுப்பு:
முதல் பரிசு ₹ 10,000/-
இரண்டாம் பரிசு ₹ 7,000/-
மூன்றாம் பரிசு ₹ 5,000/-
நான்காம் பரிசு ₹ 3,000/-

பத்தாம் வகுப்பு:
முதல் பரிசு ₹ 7,000/-
இரண்டாம் பரிசு ₹ 5,000/-
மூன்றாம் பரிசு ₹ 3,000/-
நான்காம் பரிசு  ₹ 2,000/-

மேலும் நமது பகுதியில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த சிறந்த சாதனையாளர்கள் இனங்காணப்பட்டு, இவர்களின் சிறந்த சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட இருக்கின்றோம்.

சிறப்பு விருதுகள்:
நல்லாசிரியர்
கல்விச்சேவை
சிறந்த கல்வி நிறுவனம்
சிறந்த பேச்சாளர்
சிறந்த எழுத்தாளர்
சிறந்த கவிஞர்
சிறந்த விளையாட்டு வீரர்
சுகாதார சேவை
மருத்துவ சேவை
அவசரகால மருத்துவ சேவை
இரத்ததான சேவை
சிறந்த சமூக சேவை [ நிறுவனம் ]
சிறந்த சமூக சேவை [ தனிநபர் ]
சிறந்த பத்திரிகையாளர்
சிறந்த காவலர்

தகுதியான சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அதிரை நியூஸ் சார்பில் கல்வியாளர்கள் - சமூக ஆர்வலர்கள் ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள 'விருது கமிட்டியினர்' வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் இவர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இறுதி வடிவம் பெற்றவுடன் இதுகுறித்த தகவல் முறையாக அறிவிப்பு செய்யப்படும்.

விருது பெற இருக்கும் சாதனையாளர்கள், விருது நடைபெறும் நாள் - இடம், விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்கள் - ஸ்பான்சர்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் விரைவில் அறிவிப்பு செய்யப்படும்.

மேலும் இது தொடர்பாக வாசகர்களிடமிருந்து சிறந்த ஆலோசனைகள் - கருத்துகள் வரவேற்கப்படுகிறது. மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு கீழ்க்கண்ட அலைப்பேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் அதிரை நியூஸ் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.

0091 9442038961 / 0091 9043140142 / 00971 50 8519729
editoradirainews@gmail.com

அதிரை நியூஸ் குழு

15 comments:

  1. very good job I have very appreciated

    ReplyDelete
  2. very good job I have very appreciated

    ReplyDelete
  3. வாழ்த்துகள்; பாராட்டுகள்

    ReplyDelete
  4. வாழ்த்துகள்; பாராட்டுகள்

    ReplyDelete
  5. வாழ்த்துகள்; பாராட்டுகள்

    ReplyDelete
  6. Good encouragement to the righteous persons.....

    ReplyDelete
  7. சபாஷ் !
    சிறந்த ஊடகம் என்று நிருபித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  8. செய்திகளில் மட்டும் நின்றுவிடாது சுற்றுப்புறச் சமூக மேம்பாட்டிற்கு ஊக்கங்கள் ஊட்ட எடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஊடகம் என்பது செய்திகளை பதிவதுடன் நின்று விடாமல் இத்தகைய சமுதாயச்சிந்தனையும் வேண்டும் இளம் தளிர்களையும் மாணாக்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். பொதுநல சிந்தனை வேண்டும். அந்தவகையில் எஎடுக்கப்பட்ட முயற்சி தான் இது.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ..
    அதிரை நியூஸ் குழுமம் ...வளர்ச்சியின் பாதையில் சரியான திசை நோக்கி செல்கிறது
    வாழ்க வளர்க

    ReplyDelete
  11. இந்த நல்லெண்ணத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  12. பரிசுகளை கொடுத்து உற்சாக படுத்துவதும், கொவ்ரபடுத்துவதும் நல்ல செயல் தான் அதே நேரத்தில் நடு நிலை தவறவிடக் கூடாது. பதவியில் உள்ளவர் என்று பார்க்காமல் அவரால் செய்த மாற்றங்கள், அவரின் செயல் பாடு பற்றி மக்கள் மக்கள் மத்தியில் என்னவென்பதை ஆராய வேண்டும். உதாரணமாக ஒருவர் பக்க பக்கபக்கமாக எழுதுவதால் சிறந்த எழுத்தாளர் என்று பாராமல் சமுதாயத்திற்க்காக அவர் தக்க நேரத்தில் தன் கண்டனக் குரல் கொடுக்கிறார / போராடுகிறார என்று ஆராய வேண்டும். இப்படி பார்த்து கொடுத்தால் விருதுக்கு வலிமை சேர்க்கும், இல்லையென்றால் கேட்டு வாங்கியது போல் ஆகிவிடும்.

    ReplyDelete
  13. அதிரை நியூஸின் அடுத்த மைல் கல், வாழ்த்துக்கள்

    நடுநிலை தவறாமையும், தீர ஆராய்ந்து செயல்படவும்

    ReplyDelete
  14. வரவேற்கத்தக்க நல்ல முயற்சி!

    வாழ்த்துகள், அதிரை நியூஸ்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.