இந்நிலையில் நமதூர் சமூக ஆர்வலரும், யூனைட்டட் பவுண்டேசன் அமைப்பின் செயலாளருமாகிய அப்துல் ரெஜாக் அவர்கள் இதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறார். இவருக்கு உறுதுணையாக நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீது, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி ஜலீலா ஜுவல்லரி முஹம்மது மொய்தீன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை நிறைவேற தஞ்சை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரசுராமன் அவர்கள் பெரிதும் உதவிருக்கிறார்.
இதுதொடர்பாக சம்பந்தபட்ட திருச்சி ரயில்வே மண்டல வணிக மேலாளர் மற்றும் மண்டல தபால் துறை அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பணிக்காக தனி ஊழியர்கள் மற்றும் அதிரை தபால் நிலையத்தில் இடம் ஆகியன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் தொலை தொடர்பு கேபிள் இணைப்பு வழங்கப்பட்டவுடன் ரயில் முன்பதிவு மைய பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல முயற்சி வெற்றியடைய துஆ செய்வோம்.
ReplyDeleteமுயற்சித்த சமூக அர்வலர்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்க பிரார்த்திப்போம்.