இன்றைய முதல் ஆட்டத்தில் நாகூர் அணியினரும், காரைக்குடி பள்ளத்தூர் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் நாகூர் அணியை சேர்ந்த பக்கர் முதல் கோலை அடித்து தனது அணி வெற்றிபெற உதவினார். ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து நாகூர் அணியினர் வெற்றிபெற்றனர்.
முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரபல தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமாகிய எம்எஸ் ஷிஹாபுதீன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், AFFA தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ், பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி ஆகியோர் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயராக வாசு தேவனும், அவருக்கு உதவியாக ஷபா ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.
இன்றைய முதல் ஆட்டத்தைக்காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் முதல் ஆட்டமாக பட்டுக்கோட்டை அணியினரோடு ஆலத்தூர் அணியினரும், இரண்டாவது ஆட்டமாக பிச்சினிக்காடு அணியினரோடு, மேலநத்தம் அணியினர் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாளைய ஆட்டம் சரியாக மாலை 4.45 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் சாதனை நிகழ்த்தும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.













ஆதிரை நியூஸ் இந்த செய்தியை போடுமுன்னர் AFFAவிடம் "எம்எஸ் ஷிஹாபுதீன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், AFFA தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, துணைதலைவர் முஹம்மது தமீம், செயலாளர் சமியுல்லாஹ், பொருளாளர் அபுல் ஹசன் சாதுலி, துணைச்செயலாளர் அஹமது அனஸ், ஒருங்கிணைப்பாளர்கள் சேக் தம்பி, இத்ரீஸ், அஸ்ரப், பாருக், தாரிக், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் அன்வர் அலி, லியாகத் அலி" இவர்களை கூப்பிட்டு துவங்கியவர்கள் சென்ற ஆண்டு துவக்கவிழாவில் பங்கேற்ற சேர்மன் அவர்களை அழைக்கவில்லையா? அல்லது அழைத்து அலுவல் காரணமாக அவர் வரவில்லையா? என்ற விபரங்களையும் சேகரித்து செய்தி போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ReplyDelete