கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த 28-ம் தேதி மாட்டிறைச்சி வைத்திருந்தாக 55 வயது முகமது இக்லாக் என்ற முதியவர் 200 பேர் கொண்ட கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். அது முதல் தாத்ரி சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், தாத்ரி கிராமத்துக்கு சென்று உயிரிழந்த முதியவரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் அளித்து வந்தனர்.
இந்த சம்பவத்தை காரணம் காட்டி, கிராமத்துக்கு தலைவர்கள் வருவதால் அங்கு அடிக்கடி பதற்றம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இக்லாக்கின் குடும்பத்தினர் டெல்லிக்கு குடி பெயர்ந்துள்ளனர். இக்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ் இந்திய விமானப்படையில் சென்னையில் பணியாற்றி வருகிறார். இக்லாக்கின் குடும்பத்தினருக்கு டெல்லி விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பில் வீடு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கும்பலால் தாக்கப்பட்ட இக்லாக்கின் இளையமகன் டானிஷின் உடல் நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நன்றி:விகடன்

மாடு கடவுள் என்றால் அதன் தோலும் கடவுள் தானே தோல் ஏற்றுமதியையும் தடைசெய்யுங்கள். உலகிலேயே இந்தியா தான் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாமிடம் அதையும் தடைசெய்யுங்களேன். ஏற்றுமதி செய்பவர்களில் முதல் 5 கம்பெனிகள் இந்துக்களுக்கு சொந்தமானது. எங்களுக்கு புரியவில்லை முஸ்லீம் கொன்றால் கடவுள் நீங்கள் கொன்றால் மாடா!
ReplyDeleteகேரளத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் கூடத்தான் மாட்டுக்கறி உண்ணுகிறார்கள். கும்பல் அங்கு போய் தங்கள் கைவரிசையை காட்டுங்களேன்!
யாரு என்ன சாப்பிடமுன்னு வரும் குளிகால கூட்டத்தொடரில் சொல்லுங்க ...கருமம்