இந்த நிலையில் 2015-2016-ஆம் ஆண்டிற்கான தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடந்தது.
இதில் பலவேறு பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில் வாலிபால் போட்டியில் அதிரை அடுத்துள்ள நாட்டுச்சாலை வாலிபால் கிளப் அணியின் ஆல் ரவுண்ட் பிளையராக ஆசிப் அஹ்மது விளையாடினார். இவரது அபார ஆட்டத்தால் இவரது அணி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியது.
இதையடுத்து வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் திரு. முனைவர் என்.சுப்பையன் கலந்துகொண்டு தலைமை உரை நிகழ்த்தினார். விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ரெங்கசாமி, மாநகர மேயர் சாவித்திரி கோபால், உள்ளாட்சி தலைவர்கள், அரசு அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ், ரொக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சுப்பு நன்றி கூறினார்.

தடையெல்லாம் தகத்தெரியும் மண்ணின் மைந்தருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete