.

Pages

Showing posts with label அரசு தேர்வு முடிவுகள். Show all posts
Showing posts with label அரசு தேர்வு முடிவுகள். Show all posts

Friday, April 19, 2019

+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங்கள் ~ SMS மூலம் அறியலாம்!

அதிராம்பட்டினம், ஏப்.19
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று 19-04-2019 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகின. முடிவுகள் இணையதளத்தின் மூலம்  வெளியிடப்படுகிறது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையத்திலும், அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பள்ளிகளில் வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

Wednesday, May 23, 2018

SSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங்கள் ~ SMS மூலம் வழங்க ஏற்பாடு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதினர்.

இத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in  www.dge1.tn.nic.in  www.dge2 ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளன.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மாவட்ட மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று தனித்தேர்வர்களுக்கு அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது அளித்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மே 28 -இல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: 
இதைத்தொடர்ந்து, மே 28 -ஆம் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மே 28 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் அளித்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தாங்கள் எழுதிய எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விரும்பினால் விண்ணப்பிக்கலாம். மே 24 -ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் மே 26 -ஆம் தேதி (சனிக்கிழமை) வரை, தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையம் மூலமாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 28 -இல் துணைத் தேர்வு: 
கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு வருகை புரியாதவர்களுக்கும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

Wednesday, May 16, 2018

இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அரசு இணையதளங்கள் ~ SMS மூலம் வழங்க ஏற்பாடு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று 16-05-2018 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன. முடிவுகள் இணையதளத்தின் மூலம்  வெளியிடப்படுகின்றது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் முடிவுகளை அறியலாம்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையத்திலும், அவரவர் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பள்ளிகளில் வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

Friday, May 19, 2017

SSLC தேர்வில், அதிரையில் 93.59 சதவீதம் பேர் தேர்ச்சி !

அதிராம்பட்டினம், மே 19
தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியானது. அதிராம்பட்டினத்தில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெரும் பள்ளிகள், சுயநிதி தனியார் மெட்ரிக். பள்ளி என மொத்தம் 4 பள்ளிகளை சேர்ந்த 549 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 507 பேர் தேர்ச்சி பெற்றனர். அதிரை அளவில் மொத்தம் 93.59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 106 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 106 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவிகிதம் பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 154 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 149 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 96.75 சதவிகிதம் பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 99 பேர்கள் ( ஆண்கள் 65 பேர், பெண்கள் 34 பேர் ) தேர்வு எழுதினார்கள். இதில் 93 பேர் ( ஆண்கள் 61 பேர், பெண்கள் 32 பேர் ) தேர்ச்சி பெற்று, பள்ளி 93.94 சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 190 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 159 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 83.68 சதவீகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அதிரையில் SSLC தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு !

அதிராம்பட்டினம், மே-19
SSLC தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை தமிழகமெங்கும் வெளியாகிறது. அதை இணையதளத்தில் இலவசமாக பார்க்கும் வசதியை, அதிராம்பட்டினம், நடுத்தெருவில் உள்ள ( அதிரை பைத்துல்மால்  சேவை அமைப்பின் அருகில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ) ஹைபிஎம் ஸ்டோர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு,
நூருல் அமீன் 9894071892


Friday, May 12, 2017

அதிரையில் +2 தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு !

அதிராம்பட்டினம், மே-12
+2 தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை தமிழகமெங்கும் வெளியாகிறது. அதை இணையதளத்தில் இலவசமாக பார்க்கும் வசதியை, அதிராம்பட்டினம், நடுத்தெருவில் உள்ள ( அதிரை பைத்துல்மால்  சேவை அமைப்பின் அருகில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ) ஹைபிஎம் ஸ்டோர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு,
நூருல் அமீன் 9894071892

Thursday, May 11, 2017

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு: 9 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண் !

கோப்புப்படம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுக்கான மதிப்பெண்கள் 9 லட்சம் மாணவ, மாணவியருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை தேர்வுத்துறை இயக்குநரகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளைஅரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிடுகிறார்.

இணையதள முகவரிகள்: 
தேர்வு முடிவுகளை 

ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். தனித் தேர்வர்களுக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர் ), மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் இலவசமாகத் தேர்வு முடிவை அறிய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:
மே 15-ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 17 முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வெழுதிய பள்ளி அல்லது மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் நகல்-மறுகூட்டல்:
விடைத்தாள் நகல், மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வெள்ளிக்கிழமை (மே 12) முதல் மே 15 வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தத் திட்டம்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 12) வெளியிடப்படும். மாணவர்களின் சான்றிதழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை முறையாகப் பதிவு செய்யாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பாடத் திட்டங்கள் குறித்து வெள்ளிக்கிழமை (மே 12) ஆலோசனை செய்யப்படவுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வுகள்
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பத் தேதிகள் குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி

Wednesday, May 25, 2016

அரசு இணையதளங்களில் இன்று SSLC தேர்வு முடிவு வெளியீடு !

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன.

மே 17-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு இன்று மே 25-ம் தேதி காலை 9.31 மணி முதல் 10.00 மணிக்குள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை 

ஆகிய இணையதள முகவரியில் அறியலாம்.

அதுதவிர ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும், அனைத்து மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 17, 2016

அரசு இணையதளங்களில் இன்று +2 தேர்வு முடிவு வெளியீடு !

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2, தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகின்றன.

மே 17-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும், மே 25-ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்தது.

பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று மே 17-ம் தேதி காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு மே 25-ம் தேதி காலை 9.31 மணி முதல் 10.00 மணிக்குள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை 

ஆகிய இணையதள முகவரியில் அறியலாம்.

அதுதவிர ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும், அனைத்து மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ம் தேதியே முடிவடைந்துவிட்டது.

Friday, May 23, 2014

அரசு இணையதளங்களில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !



தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். அதேபோல், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வை பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர்.

வழக்கமான நேரத்துக்குப் பதிலாக, இந்த ஆண்டு 45 நிமிஷங்கள் முன்கூட்டியே (காலை 9.15 மணிக்கு) தேர்வுகள் தொடங்கின.

எஸ்.எம்.எஸ்.: 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு.

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in


www.dge2.tn.nic.in


www.dge3.tn.nic.in


என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகளைப் பெற பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 53576 என்ற எண்ணுக்கு SSLC என டைப் செய்து தங்களது பதிவு எண்ணை மாணவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல், 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD என டைப் செய்து மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி : தினமணி

Friday, May 9, 2014

அரசு இணையதளங்களில் இன்று +2 ரிசல்ட் வெளியீடு !

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து 8 லட்சம் மாணவ, மாணவியர் ஆவலுடன் உள்ளனர்.

மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 2,242 மையங்களில் நடந்த தேர்வுகளில், 8.26 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவர்களும், ஆவலுடன் உள்ளனர். மாநிலம் முழுவதும், அனைத்து வகை பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு பட்டியல், காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த பட்டியல் நேற்று அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன.

முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்:

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in


www.dge2.tn.nic.in


www.dge3.tn.nic.in


ஆகிய நான்கு இணையதளங்களில் சரியாக, காலை 10:00 மணிக்கு தேர்வு முடிவை வெளியிட, தேர்வுத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவை மாணவர்கள் எவ்வித தடங்கலும் இல்லாமல் அறிந்து கொள்வதற்கு வசதியாக, இன்று மாநிலத்தின் எந்த பகுதியிலும், மின் தடை செய்யக்கூடாது என மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள், இணையதளம் வழியாக தேர்வு முடிவை பார்ப்பதால் மின் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நன்றி : தினநாளிதழ் செய்தி