.

Pages

Showing posts with label AIM. Show all posts
Showing posts with label AIM. Show all posts

Sunday, October 12, 2014

பெயர் மாற்றம் மற்றும் புதிய வலைப்பூ குறித்து அறிவிப்பு !

அதிரை மண்ணின் சொந்தங்களுக்கு அதிரை இஸ்லாமிக் மிஷன் வலைப்பூவின் சார்பாக இனிய ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இதுவரை www.aimuaeadirai.blogspot.com என்ற பெயரில் செயல்பட்டு வந்த வலைப்பூ ஓர் சிறிய மாற்றத்துடன் இனி www.adiraiaimuae.blogspot.com என்ற பெயரில் தொடர்ந்து செயல்படும் என்பதையும்...

நம் அதிரை மற்றும் அதன் வெளிப்புற சுற்றுச்சூழல், சுத்தம், நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொள்வதற்காக www.adiraipasumai.blogspot.com என்ற பெயரில் புதியதோர் வலைப்பூ தொடங்கப்பட்டுள்ளதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்களுடைய பதிவுகளையும், கருத்துக்களையும் aimuaeadirai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் அனைவருடைய நல்லாதரவும், பங்களிப்பும் என்றென்றும் தொடர்ந்திட வேண்டும் என அனைத்து அதிரையர்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்,
அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை பசுமை வலைப்பூக்களின் ஆசிரியர் குழு

Tuesday, August 5, 2014

அதிரையில் இன்று அஸருக்குப்பின் தாருத் தவ்ஹீத் நடத்தும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி !



இன்ஷா அல்லாஹ், (05.08.2014 செவ்வாய்கிழமை) இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


சிறப்புரை: 
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள உளவியல் அறிஞரும் மவ்லவியுமான
 S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்

தலைப்பு: 
நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பு: 
சொற்பொழிவின் நிறைவாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடைபெறயிருக்கின்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நற்பயன் அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
கடைத்தெரு (கிழக்கு), அதிரை


தகவல் அப்துல் காதர்  [AIM]




Tuesday, December 17, 2013

அமீரகத்தில் நடந்த இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியில் அதிரையர் பங்கேற்பு !

12.12.2013 வியாழக்கிழமை பின்னேரம் இரவு 9.15 மணிமுதல் 10.45 மணிவரை துபை, தெய்ரா பகுதியில் அமைந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் மர்கஸில் 'தவ்பா' என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

13.12.2013 வெள்ளியன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை அமீரகம் வாழ் அதிரையர்களுக்காக சிறப்பு தர்பியா பயிலரங்கம் துபை, தெய்ரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள 'தவ்ஹீத் இல்லத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், அமீரகத்திற்கு குறுகிய கால வருகை புரிந்துள்ள JAQH மாநிலத் துணைத் தலைவரும் இஸ்லாமிய அழைப்பாளருமாகிய சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'அன்றாட வாழ்வில் ஆயிரமாயிரம் நன்மைகள்' என்ற பொருளில் ஈடிணையற்ற அருளாளன் அல்லாஹூத்தஆலா அடியார்களாகிய நம்மீது கருணை கொண்டு வாரி வழங்கும் நன்மைகளை பட்டியலிட்டு ஏடுகளிலும் உள்ளத்திலும் பதிவேற்றிக் கொள்ளச் செய்தார்கள்.

http://www.youtube.com/watch?v=JM6i-YeTsDU 


ஒழுச் செய்வதில் தொடங்கி பாங்கு சொல்லும் வரையிலான நமது ஒவ்வொரு சிறு அசைவுக்கும் கிடைக்கும் அளப்பெரிய நன்மைகளை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக விளக்கி ஆரம்ப வகுப்பை நிறைவு செய்தார்கள்.

இதன் தொடர்ச்சி, இன்ஷா அல்லாஹ் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் மீண்டும் அமீரகம் வரும் போது தொடரும். இத்தர்பியாவின் பயனை நீங்களும் பெற்றிட நம்முடைய வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணோளியை பாருங்கள், அடுத்தவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

13.12.2013 வெள்ளியன்று இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா ஐகாட் சிட்டி 1ல் அமைந்துள்ள ஓர் தனியார் கார்கோ கம்பெனி பின்புறம் அமைந்துள்ள பள்ளிவாசலில் இரவு 8 மணிமுதல் 9.30 மணிவரை 'உள்ளத்தை வெல்வோம்' என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


இறுதியாக, 14.12.2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா ஐகாட் சிட்டி 2ல் அமைந்துள்ள போர்ஸிலான் கம்பெனி பள்ளிவாசல் வளாகத்தில் பிற மத சகோதரர்களுக்கானஇஸ்லாமிய தஃவா நிகழ்ச்சி இரவு 8 மணிமுதல் 9.30 மணிவரை நடைபெற்றது. இஸ்லாமிய இறை நம்பிக்கையுடன் பிற மத நம்பிக்கைகள் ஒப்பீடு செய்யப்பட்டு இறுதியாக இஸ்லாத்தினை தழுவிட பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. 

சொற்பொழிவுக்குப் பின் பிற மத சகோதரர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்கள் கூறப்பட்டன.

செய்தி தொகுப்பு : அதிரை அமீன்
Source : http://www.aimuaeadirai.blogspot.ae/2013/12/jaqh.html
Video Special Thanks to : ADIRAI NIRUBAR MEDIA

Wednesday, December 11, 2013

AIM வழங்கும் அமீரக அதிரையர்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி !

AIM வழங்கும் அமீரக அதிரையர்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அமீரகம் வாழ் அனைத்து அதிரை சகோதரர்களுக்காக மிகவும் பயனள்ளதோர் தர்பியா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோது அனைத்து அதிரை சகோதரர்களும் தவறாது கலந்து நற்பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்
 தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
(இஸ்லாமிய அழைப்பாளர்)

நாள்    :    
13.12.2013    வெள்ளிக்கிழமை

நேரம்    :    
காலை 9 மணிமுதல் 11 மணிவரை

இடம்    :    
தவ்ஹீத் இல்லம்
அறை எண்: 109
அல் ஜர்வானி பில்டிங்
அல் புத்தைம் மஸ்ஜித் எதிர்புறம்
 டல்ஃப் [DULF] ஹோட்டல் பின்புறம்
 நைஃப் ரோடு
தெய்ரா, துபை.

மேலும் விபரங்களுக்கு
S. அப்துல் காதர்    055 2829759
A. முஹமது அமீன்    050 8519008

குறிப்பு : 
இத்தர்பியா நிகழ்ச்சியில் எத்தகைய வசூலும் செய்யப்படாது மேலும் யாரை குறித்தும் கண்ணியக்குறைவாகவும் பேசப்படாது என உறுதியளித்து, ஈருலக பயன் பெற திரண்டு வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை இஸ்லாமிக் மிஷன் வலைத்தளம்

Sunday, December 1, 2013

துபாயில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு ! திரண்டுவர அழைப்பு !!

எதிர்வரும் 06.12.2013 அன்று துபையில் மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி நிகழ்ச்சிகள் - காலையில் தர்பியா, மாலையில் மார்க்க சொற்பொழிவு நடைபெறஉள்ளது.


&

தர்பியா நிகழ்ச்சி

நாள்    :    
06.12.2013, வெள்ளிக்கிழமை
 
நேரம்    :    
காலை 8.30 மணிக்கு
 
இடம்    :    
அல் மனார் சென்டர் (தெய்ரா கிளை)
        பிரைமரி நர்சரி எதிரில்
துபை ஹாஸ்பிட்டல் பின்புறம்
அல் பரஹா
தெய்ரா, துபை

 
நல்லொழுக்கப் பயிற்சி வழங்குபவர்
 
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள
 
மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்


தகவல் : அதிரை அமீன்

Tuesday, November 26, 2013

உள்ளங்களை உலுக்கிய மனங்களின் சாட்சி [ புகைப்படங்கள் ]

கண்கவரும் பொருட்காட்சி, கண்காட்சி என எத்தனையோ கண்டுகளித்திருப்போம் ஆனால் இதற்கு மாற்றாக உள்ளங்களால் உணர்ந்து பார்ப்பதற்காக கடந்த நவம்பர் 2013, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துபை ஜமியத்துல் இஸ்லாஹ் அரங்கில் 'இஸ்லாத்தை ஏற்க 100க்கு மேற்பட்ட காரணங்கள்' என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துக்காட்சி, குறிப்பாக துபை மாநகரில் இஸ்லாத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் தழுவிய சகோதர, சகோதரிகளின் உள்ளத்து உணர்வுகள் காட்சியாய் ஏற்பாடு செய்யப்பட்டு காண்போரின் மனசாட்சியை உலுக்கும் நிறைவான நிகழ்வாய் அமைந்திருந்தது.

 

துபை மாநகரில் உயர்பதவிகள், தொழிலாளர்கள் என பல மட்டங்களிலும் பணிபுரிந்த, பணியாற்றுகின்ற நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் தங்களின் வாழ்வியலாக இஸ்லாம் எனும் பொக்கிஷம் கிடைத்த தருணங்களை, காரணங்களை, விவரித்த விடயங்களை இரத்தினச்சுருக்கமாக தொகுத்து, எளிய ஆங்கிலத்தில், கருத்துக்களையே காட்சிகளாக்கி அழகுற பேனர் வடிவில் வரிசைபடுத்தியிருந்தனர்.

 

இரு தினங்களும் நிறைந்த அரங்கமாக, ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும், தஃவா பணியாளர்களும், மொழி, நாடு, நிறம், பேதமின்றி சர்வதேச மக்களும் திரளாக கலந்து பயன்பெற்றுச் சென்றனர்.

 

அரங்கில் பம்பரமாக சுழன்ற இறை மார்க்கத் தொண்டர்களில் அனேகர் பெண்களே! அதிலும் இஸ்லாத்தை ஏற்ற புதிய சொந்தங்களே வழிகாட்டி, வந்தோருக்கு விளக்கி உவந்தனர். அரபி, ஆங்கிலம், தகலோக் என சர்வதேச மொழிகள் பலவற்றுடன் ஹிந்தி, மலையாளத்துடன் நம் தமிழிலும் விளக்கமளித்தனர்.


துபை அவ்காஃப் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்விலும் 3 பேர் இஸ்லாத்தை தங்களின் வாழிவியல் நெறியாக ஏற்றனர்.

 

பேரதிர்ச்சி தரும் உண்மை : 

பொதுவாக, இன்றைய முஸ்லீம்களின் நடவடிக்கைகளை பார்க்கும் ஒருவன் ஒருபோதும் இஸ்லாத்திற்கு வரமாட்டான் என்ற அவச்சொல் நிலவுவதை யாவரும் அறிவோம் என்றாலும் இங்கே பலரும் இஸ்லாத்தை தழுவுவதற்கு சில முஸ்லீம்களின் தூய இஸ்லாமிய செயற்பாடுகளேகாரணமாக அமைந்ததென சான்று பகர்ந்துள்ளனர் நமைமிகைத்த நம்மின் புதிய சகோதர, சகோதரிகள். அப்படியாயின் நம்முடைய வாழ்க்கை ???


செய்தி தொகுப்பு : அதிரை அமீன் 

நன்றி: http://aimuaeadirai.blogspot.in/2013/11/blog-post_1708.html