.

Pages

Saturday, January 26, 2013

காதீர் முகைதீன் கல்லூரியில் யூஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி !

தஞ்சாவூர் மாவட்டம் அதிரை காதீர் முகைதீன் கல்லூரியில் UGC- NET CSIR, SET தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தொடக்கி நடைபெற உள்ளது. கல்லூரிப் பேராசிரியர் பணியில் சேர தற்போது CSIR- NET அல்லது தமிழக அரசு நடத்தும் SET தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆகவே இந்த தேர்வுகளில் நிறைய மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பல்கலைக்கழக மானியக்குழு நிதிவுதவியுடனும் இந்த சிறப்பு வகுப்புகள் காதீர் முகைதீன் கல்லூரியில் நடைபெற உள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். எனவே இச்சசிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் தங்கள் பெயரினை எங்கள் அலுவலகத்தில் எதிர்வரும் [ 05-02-2013 ] க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் அன்புடன் தெரிவித்தார்.

அதிரையிலிருந்து சேக்கனா M. நிஜாம்

காதீர் முகைதீன் கல்லூரியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கருத்தரங்கம் !


TNSCST  யுடன் இணைந்து காதீர் முகைதீன் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் கருத்தரங்கம் வருகின்ற [ 28-01-2013 ] அன்று காலை 10 மணியளவில் கணினிப்பிரிவு ஆய்வரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தகுதியுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயனடைமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர் காதீர் முகைதீன் கல்வி நிறுவனத்தார்கள்.

இந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரையைச் சார்ந்த சகோதரர்கள் !


இந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு " இந்தியன் நேஷனல் ஆர்மி " ( INA ). 


நமதூரைச் சேர்ந்த சகோதரர்கள் "பெரிய மின்னார்" மர்ஹூம் ஜனாப் மு. முகம்மது ஷரிப் மற்றும் மர்ஹூம் ஜனாப் செய்யது முகம்மது ஆகியோர்கள் இந்த அமைப்பில் பணி புரிந்து நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்வை தியாகம் செய்தவர்கள் ஆவார்கள். மேலும் இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள். ஒருவர் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை பெற்றவர் மற்றொருவர் மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமதூரைச் சேர்ந்த தியாகிகள் சகோ. மர்ஹூம் S.S. இப்றாஹீம் மற்றும் சகோ. அப்துல் ஹமீத் ஆகியோர்களும் நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்வை தியாகம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நமதூரைச் சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் மறைந்து, மறைக்கப்பட்டு உள்ளார்கள். அன்னார்கள் அனைவரும் வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

இந்தியா குடியரசுப் பெற்று 64 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்த நாளில் நமதூரைச் சேர்ந்த இத்தியாகிகளை நினைவில் கொள்வோம்.

மறைக்கப்படுவது, மறந்துவிடுவது அல்லது மறுக்கப்படுவது வரலாற்றில் தவிர்க்கப்பட வேண்டியவை.

Friday, January 25, 2013

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரூ !

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரூ !



மரண அறிவிப்பு [ மேலத்தெரு ] !


மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக் அலாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும், சேக் ஜலாலுதீன், ஜாகிர் ஹுசைன், முஹம்மது மரைக்கான் ஆகியோரின் தாயாரும், இப்ராஹிம், தாஜுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய செய்னம்புகனி அவர்கள் இன்று காலை 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

[ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி...]

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ரு தொழுகைக்குப் பின் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

உள்ளூர் உழைப்பாளிகள் !!!


ஆயுள் முழுவதும் உழைக்கும் உழைப்பாளிக்கு நன்றி செலுத்தும் வகையில் உழைப்பாளிகள் மதிக்கப் பட வேண்டும். அவர்களின் உழைப்பை நாம் பெருமையுடன் நினைவுகூற வேண்டும் !

அதிரை – இவ்வூரில் சிறந்த உழைப்பிற்கு எடுத்துக்காட்டா விளங்கக்கூடியவர்கள் பலர் இருந்தாலும் அவர்களில் நம் நினைவில் என்றென்றும் குடியிருப்பவர், நன்கு அறிமுகமானவர், நல்ல பண்பாளர், கடின உழைப்பாளி போன்றவர்களில் சிலரை எடுத்துக்கொண்டு அவர்களைப்பற்றிய சிறுகுறிப்புடன் தொகுத்து வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இவர்கள் நமக்கு நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினருக்கு கடின உழைப்பிற்கும், சிறந்த பண்பிற்கும் நல்லதொரு முன்னுதாரணமாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கையில்...

“ஆ”ரம்பம் செய்வோம்...
S.M. சுலைமான் :
குலசேகரப்பட்டினத்திலிருந்து சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நமதூருக்கு வந்து ஓறு சிறிய பெட்டிக்கடை வைத்து அதன் மூலம் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றவர். இன்னும் அதே பெட்டிக்கடை...! மார்க்க அறிஞராகவும்பேச்சாளராகவும் இருந்துகொண்டு சேவைகள் செய்துவருவது சுலைமாக்கா அவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும். இவர் மேலத்தெருவில் வசித்து வருகிறார்.
முஹம்மது அப்துல்லா :
நடுத்தெருவைச் சேர்ந்த இவர் எண்ணற்ற நண்பர்களைப் பெற்றுள்ளவர். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர்...இவரின் பேச்சு நகைச்சுவை உணர்வுடன் காணப்படுவது கூடுதல் சிறப்பாகும்..... நமதூர் கடைத்தெருவில் சிறிய கடையொன்றை வைத்து அதன் மூலம் சிறுதொழிலாக அரிசி வியாபாரத்தை செய்து வருகின்றார்.

M.P. சிக்கந்தர் :
1968 முதல் இன்று வரை நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் போன்றவற்றை விற்பனை செய்யும் முதல் நபர் என்ற சிறப்பைப் பெறும் இவர் நமதூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். நமதூரில் இவரைத் தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இவரது நட்பு வட்டம். ஞாபக சக்தியில் சிறந்தவராக உள்ள இவர் வசிப்பது தரகர் தெருவில்.

P. அப்துல் ரெஜாக் :
“கொடுவா பிஸ்க்” என்றாலே முதலில் நம் நினைவில் வருபவர் இவர்தான். மீனை அழகாக துண்டுகள் இட்டு கூறு கட்டுவது இவரின் தனிச்சிறப்பு. தன் சிறுவயது முதலே “மீன் வியாபாரம்” செய்யும் இவர் கடின உழைப்பாளியும்கூட இன்றும் சுறு சுறுப்பாய் வேலை செய்வது என்பது இவரின் இயல்பு. கடைத்தெருவில் கடை வைத்திருக்கும் இவர் கீழத்தெருவைச் சார்ந்தவர்.

K.S.A. சாகுல் ஹமீத் :
உயரமான மனிதர்... துரு துரு பார்வை....சமூக சேவைகள்....இவரின் கூடுதலான சிறப்புகளாகும். கடற்கரைத்தெருவில் வசிக்கும் இவர் இப்பகுதியின் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவரின் தொழிலாக உணவகம் உள்ளது.

S.M. முஹம்மது பாருக் :
முதியவரான இவர் ஹாஜா நகர் பகுதியைச் சார்ந்தவர். இவரின் தொழில் முடிதிருத்தம் செய்வது. கடற்கரைத்தெருவின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இச்சலூன் கடை மிகவும் எளிமையாகக் காட்சி அளிக்கின்றது. இவருக்கு சிறு தொழில் செய்வதற்கு சமூதாய அமைப்புகள் உதவி செய்ய முன்வர வேண்டும்.

சாகுல் ஹமீத் :
“தட்டு வண்டி” சாகுல் என்றாலே பட்டென்று அனைவரும் அறிவர். இவரின் கடின உழைப்பு, பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். சின்ன தைக்கால் தெருவைச் சார்ந்த இவர் பகுதி நேர தொழிலாக தெருத் தெருவாக “புட்டு” விற்று வருகின்றார்.

S. முஹம்மது ஹசன் :
“பட்டர் பிஸ்கட்” என்றால் முதலில் நினைவில் கொண்டு உச்சரிப்பது இவரின் பெயரைத்தான். நெசவுத்தெருவில் வசிக்கும் இவர் சொந்த தொழிலாக கடைகளுக்கு “பட்டர்” பிஸ்கட் விநியோகம் செய்துகொண்டு இருந்தவர் தற்போது நெருக்கமானவர்களுக்கு தென்னைந் தோப்புகளை பராமரிக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றார்.

M. அயூப்கான் :
பிலால் நகரில் வசிக்கும் இவர் ஏழ்மையான கடின உழைப்பாளி. நீண்ட காலமாக வடை, சம்சா, போண்டா போன்ற பலகாரங்களை தள்ளு வண்டி மூலம் விற்பனை செய்து வருகின்றார். இவற்றின் விலை மற்ற கடைகளைவீட குறைவு என்பது தனிச்சிறப்பு. கடைத்தெரு சந்திப்பு அருகே இவரின் அன்றாட வியாபாரம் செய்யும் இடமாக உள்ளது.
இறைவன் நாடினால் ! 'உள்ளூர் உழைப்பாளிகள்' இன்னும் தொடர்வார்கள்... 

சேக்கனா M. நிஜாம்
நன்றி : சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

Thursday, January 24, 2013

அதிரை நூலகம் – ஓர் பார்வை !!!




நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை புத்தகமே. இவற்றைக்கொண்டு நம் அறிவித்திறன்களை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் உலக விசயங்கள் பலவற்றை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன. நமது அறிவுத்திறன் வளர்வதற்கு முதுகெலும்பாகத் திகழும் நூலகம் நம்மிடேயே நட்புறவு, சகோதரத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் ஏற்படுத்துகின்றன. 

வாசகர்களின் எண்ணிக்கை :
அதிரையில்  கடந்த 15-06-1955 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நூலத்தில் கவிதை, நாவல், நாடகம், பொது அறிவு, இயற்கையியல், கணிதவியல், இயற்பியல், பொறியியல், வேதியியல், தொழில்நுட்பவியல், உயிரியல், புவியியல், தாவரவியல், வேளாண்மை, விலங்கியல், மருத்துவயியல், பயன்படு கலைகள், கவின் கலைகள், இலக்கியம், மொழியியல், சமயம், தத்துவயியல், உளவியல், கல்வி, நிலவியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், சட்டவியல் போன்ற தலைப்புகள் அடங்கிய 31517 புத்தகங்கள் இருந்தும் 8 புரவலர்களையும், 3227  உறுப்பினர்களையும் மட்டுமே பெற்றிருப்பது வேதனை தருவதாக இருகின்றது.
இவைகள் நமது மக்களிடயே வாசிக்கும் பழக்கம் குறைந்துள்ளதையே காட்டுகின்றன. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஊரில் தினமும் சுமார் 90 - 100  வாசகர்கள் மாத்திரம் நூலகத்திற்கு வந்து செல்வது அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது. ஒரு வேலை நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் மத்திய பகுதியில் இல்லாமல் ஊரின் கடைகோடியில் இருப்பது ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ !?`

நூலகத்தின் கட்டிடம் :
நமதூர் கரையூர் தெரு பஞ்சாயத்தார் சார்பாக வழங்கப்பட்ட 10 சென்ட் நிலத்தில் கடந்து [ 30-09-1980 ] அன்று கட்டிடப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று கடந்த  [ 16-01-1993 ] அன்று முதல் இந்நூலகம் செயல்பட துவங்கியது.

கட்டிடம் இன்றைய நிலையில் பராமரிப்புகளின்றி சுவற்றில் காணப்படும் வெடிப்புகளாலும், உப்புக்கற்றால் கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு கீழே இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. நீண்ட காலமாக நூலக கட்டிடத்திற்கு பெயின்ட் அடிக்காமல் விட்டதனால் மங்கிப் போய் காட்சியளிக்கின்றன.

நூலகத்தின் வசதிகள் :
நூலாக வாசகர்களுக்கு அமர்ந்து படிப்பதற்கு நாற்காலிகள், மேஜைகள், போதிய வெளிச்சத்துடன் கூடிய மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளற்று மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றன.

அறிவிப்பு பலகை :
நூலகம் குறித்த வாசகர்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கோரும் ‘அறிவிப்புப் பலகை’யை அனைவரின் பார்வையில் படுமாறு நூலகத்தில் இடம்பெறுவது அவசியம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. நூலகக் கட்டிடத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதன் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தலாம்.

2. வாசிக்கும் திறனை அதிகரிக்கச் செய்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
3. வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நூலகம் அமைந்துள்ள இடம் ஊரின் கடைகோடியில் அமைந்து இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஊரின் மத்தியில் கிளை நூலகம் ஒன்றை ஏற்படுத்த அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லலாம்.

4. நூலகத்தில் புத்தகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லலாம்.

5. புரவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அவர்களிடமிருந்து பெறப்படும் நிதியைக்கொண்டு நூலகத்திற்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், மின் விளக்குகள், மின் விசிறிகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

6. நமதூரைச் சேர்ந்த நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்களிடமிருந்து நிதி உதவிப் பெற்று நூலகத்திற்கு தேவையான பெயின்ட் அடித்தல், குடிநீர் வசதி மற்றும் இன்னபிற அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை, வாசகர்களைக் கொண்டிருக்கும் நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்காக Go.ms.no.1408/EDN (k) Dated 25.07.1980 - ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவற்றை முதல் நிலை நூலகமாகவும், ஆண்டுக்கு 8 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 12 ஆயிரம் வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவை 2-ம் நிலை நூலகங்களாகவும் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணற்ற தகவல்கள் இன்று வலைதளங்களின் உதவியால் விரைந்து கிடைக்கின்றன. உலகின் எந்த நூலகத்தில் உள்ள நூல்களையும் "மவுஸி'ன் மூலம் "கிளிக்' செய்தால் இருக்கும் இடத்தில் இருந்தே படிக்க முடிகிறது. இன்டர்நெட் மூலமாக மின் புத்தக நிலையங்களில் புத்தகங்களை நமக்கு நாமே வாங்கும் சூழல் இருந்தாலும் கனிந்த சேவை, காயம் ஏற்படுத்தாத சொற்கள், நிறைந்த அரவணைப்பு போன்றவைகளால் வாசகர் தளத்தை பெரும்பான்மையாக நூலகம் நோக்கி அழைக்க முடியும் என்பதை மனதில் இருத்தி பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலக்கட்டங்களில் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் ‎பழக்கத்தை அதிகரிக்கச்செய்து, நூலகங்களின் பயன்கள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ‎ஏற்படுத்துவது அவசியமானதொன்றாகிறது.

இதற்காக நாம் நூலகம் தரும் பயன் அறிந்து அங்கு நூல் பல கற்று அறிவை வளர்த்துக் கொள்வோம் - வாசிப்பை நேசிப்போம். நமது நூலகத்தை நாமே தரத்திலும் சேவையிலும் உயரச்செய்வோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பார்வைகள் தொடரும்...

அதிரை காதீர் முகைதீன் கல்லூரியின் ஆடிட்டோரியம் புனரமைப்பு !


அதிரை காதீர் முகைதீன் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக அதன் ஆடிட்டோரியம் அனைத்து வசதிகளுடன் நவீன படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே ஊழியர்கள் புனரமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி வரலாற்றில் பாரம்பரியமிக்க இந்த ஆடிட்டோரியம் எண்ணற்ற கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.