.

Pages

Thursday, September 1, 2016

நாங்கல்லாம் யாரு தெரியும்ல ! கில்லாடி ஒட்டுனர்களின் 2 கார் ஐடியா!

அதிரை நியூஸ்:
துபாய், செப். 01
துபாய் ஷார்ஜா இடையே நிலவும் வாகன நெரிசல் குறித்து அனுபவத்திலும், சமீபகாலமாக நமது சுட்டிக்காட்டல்கள் வழியாகவும் அறிந்து வந்திருப்பீர்கள் ஆனால் நமக்கும் இந்த செய்தி புதுசுங்க.

துபைக்கும் ஷார்ஜாவிற்குமான எல்லை பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், நேரத்திற்கு அலுவலகத்திற்கும் பின்பு வீட்டிற்கும் செல்லவும் விரும்பும் தினசரி இந்த சாலையை பயன்படுத்தும் ஓட்டுனர்கள் சிலர் ஷார்ஜா மம்ஸார் எல்லையை அடைந்தவுடன் அருகிலிருக்கும் மைதானத்தில் வாகனத்தை விட்டு விட்டு எல்லையை நடந்து கடந்து துபை பகுதியில் இன்னொரு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இன்னொரு காரை எடுத்துக் கொண்டு சுமார் 15 முதல் 20 நிமிடங்களில் அலுவலகம் வந்து சேருகின்றனர். அதேபோல் மீண்டும் திரும்பும் போது பழையபடி கார்களை நிறுத்திவிட்டு எல்லை தாண்டி காலையில் நிறுத்திவிட்டு வந்த கார்களில் வீட்டிற்கு பறக்கின்றனர். இல்லையேல், காலையில் சுமார் 2 மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் என டிராபிக்கில் மாட்டி வதைபட வேண்டியிருக்கும்.

2 கார்களை இதற்காக பயன்படுத்துவது என்பது அதிக செலவைத் தரும் திட்டந்தான் என்றாலும் இதற்காக செவிடப்பட்ட ஒவ்வொரு பில்ஸூம் அதைவிட மதிப்பு மிகுந்தவை என சொல்கிறார் இந்த டிராபிக் தந்திரத்தை உபயோகிக்கும் பயணாளி ஒருவர்.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் நீர் விளையாட்டுப் பூங்கா விரைவில் திறப்பு !

அதிரை நியூஸ்:
துபாய், செப். 01
துபாய் நீர் விளையாட்டு பூங்கா (Dubai Aqua Park) எனும் கேளிக்கைகளுக்கான பூங்கா இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் திறக்கப்படவுள்ளது. துபாய் அரசின் அங்கீகாரம் பெற்ற லோகோ வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேளிக்கை பூங்காவில் ஒரே நேரத்தில் 500 பேர் வரை விளையாடலாம்.

JBR என்று அழைக்கப்படும் ஜூமைரா பீச் ரெஸிடென்ஸி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர் விளையாட்டு பூங்கா தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். சுமார் 77 மீட்டர் நீளத்திலும் 33 அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் ஒவ்வொரு மூலையிலும் சுமார் 8 நீர் பாதுகாப்பு வீரர்கள் (Life quards) கண்காணித்துக் கொண்டிருப்பர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் டிரைவர் இல்லா வாகன சோதனை ஓட்டம் இன்று முதல் துவக்கம் ! 700 மீட்டர் தூர இலவச சவாரி !!

அதிரை நியூஸ்:
துபாய், செப்.01
துபாயில் இன்று முதல் டிரைவர் இல்லா மின் வாகன சோதனை ஓட்டம் ஆரம்பமாகிறது. ஒரு மாத காலத்திற்கு சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு அனைத்து பயணிகளும் இலவச சவாரி செய்திடலாம்.

பைனான்ஷியல் சென்டர் இன்டர்செக்ஷன் அருகிலுள்ள முஹமது பின் ராஷித் பொலிவார்டிலிருந்து விதா ஹோட்டல் டவுன்டவ்ன் துபை (Mohammad Bin Rashid Boulevard/Financial Centre Street intersection to Vida Hotel Downtown Dubai) வரை முதற்கட்டமாக சோதனை அடிப்படையிலான இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.

மணிக்கு 40 Km/h வேகத்தில் இயங்கும் EV10 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மின் வாகனம் இரண்டாம் கட்டமாக, புருஜ் கலீபா, துபை மால், துபை ஒபேரா, சூக் அல் பஹர் ஆகிய நகர்புற (Downtown) இடங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டக் கனவான 2030 ஆம் ஆண்டிற்குள் துபையில் இயங்கும் வாகனங்களில் 25 சதவிகித போக்குவரத்து மின் வாகனங்களாக மாற்றப்படும் திட்டத்தின் முதற்படியே இது.

இந்த மின் வாகனத்தின் சிறப்பு அம்சங்கள்:
1. முன் பின் என இருபுறமும் இயங்கக்கூடியது.

2. மாற்றுத் திறனாளிகளும் வீல் சேருடன் எளிதாக ஏறி, இறங்கும் வசதியுடையது.

3. ஒருமுறை சார்ஜ் செய்யப்படும் பேட்டரியை கொண்டு AC யுடன் 4 மணி நேரமும், AC இல்லாமல் 10 மணி நேரமும் தொடர்ந்து இயங்கக்கூடியது.

4. நுண்ணறிவு தொழிற்நுட்பம் மற்றும் சென்சார் உதவி கொண்டு விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், முன்பே திட்டமிடப்பட்ட பாதையில் செல்லும் வகையிலும். தேவையேற்படின் பாதையை தானே மாற்றிக் கொள்ளும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

5. எந்தவொரு வரைபடத்தையும் அதன் சாலை மார்க்கங்களையும் 90 நிமிடங்களில் தன்னுள் பதிவு செய்து கொண்டு தனித்து இயங்கக்கூடியது.

6. வாகனத்தின் கூரை (Rooftop) பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மற்றும் கேமராக்களை கொண்டு 270 டிகிரி சுழன்று கண்காணித்து இயங்கக்கூடியது.

7. கூரையில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி வழிசெலுத்தும் கருவி (rooftop navigation system) 360 டிகிரி சுற்றளவில் செயல்படக்கூடியது மேலும் சுமார் 40 மீட்டர் தூரத்தில் செல்லும் எந்த வாகனத்தையும் இதர சாலை தடைகளையும் கண்டுபிடித்து அதற்கேற்ப இயங்குமுறைகளை அமைத்துக் கொள்ளும் என பல்வேறு சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அதிராம்பட்டினத்தில் 15.4 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், செப். 01
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மற்றும் இரவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இரவு வரை விட்டுவிட்டு பெய்தது. இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 15.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்களர் பட்டியல் வெளியீடு ! ( படங்கள் )

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, இன்று (01-09-2016) தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி நீங்கலாக மீதமுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அவர்கள் வெளியிட்டார்கள்.

தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: 
தஞ்சாவூர் மாவட்டத்தில் 29-04-2016 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை
ஆண் = 9,31,769 பெண் = 9,62,043 மூன்றாம் பாலினத்தவர் = 55
ஆகக் கூடுதல் வாக்காளர்களின் எண்ணிக்கை = 18,93,867 ஆகும்,

01-06-2016 முதல் 20-08-2016 முடிய ஆன்லைன் மூலம் பெறப்பட்ட 611 விண்ணப்பங்களுள் தகுதி அடிப்படையில். 486 வாக்காளர்களும். நேரடியாக விண்ணப்பம் அளித்த 422 நபர்களில் தகுதி அடிப்படையில். 341 வாக்காளர்களும் ஆக கூடுதல் 827 புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை = 397.பெண் வாக்காளர்கள் = 430 
நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை  ஆண் = 17 பெண் = 2 ஆகும், இன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி. வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண் = 9,31,888 பெண் = 9,62,732 மூன்றாம் பாலினத்தவர் = 55, ஆகக் கூடுதல் = 18,94,675 ஆகும்.

மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தஞ்சாவூர் மாவட்ட மக்கள் தொகையில் 75.42 சதவீதமாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதுhர் சட்ட மன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 117931. பெண் வாக்காளர்கள் 116228. மற்றும் இதர வாக்காளர்கள் 3 நபர்களும். கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 121925. பெண் வாக்காளர்கள் 124691. பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 119059.  பெண் வாக்காளர்கள் 121177. மற்றும் இதர வாக்காளர்கள் 10 நபர்களும். திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 121971. பெண் வாக்காளர்கள் 125985. தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 129913. பெண் வாக்காளர்கள 138102. மற்றும் இதர வாக்காளர்கள் 18 நபர்களும். ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 110479. பெண் வாக்காளர்கள் 114559. பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 109199. பெண் வாக்காளர்கள் 118000. மற்றும் இதர வாக்காளர்கள் 23 நபர்களும். பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 101411. பெண் வாக்காளர்கள் 103990. மற்றும் இதர வாக்காளர்கள் 1 ஆகக் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 931888. மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 962732. மற்றும் இதர மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 55 ஆகக் கூடுதல் 1894675 வாக்காளர்கள் உள்ளனர்,

மேலும். இன்று 01-09-2016  முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2175 வாக்குச் சாவடி மையங்களிலும் மற்றும் வட்ட அலுவலகங்கள். கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வாக்களித்து வரும் வாக்குசாவடி மையத்திற்கு (Booth) சென்று தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து உறுதி செய்துகொள்ளுமாறு; கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும். புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற படிவம் 6 ஐ அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே 30-09-2016 வரை அளிக்கலாம். பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பெயர் மற்றும் முகவரியில் மாற்றம் ஏதும் செய்யப்படவேண்டின். படிவம் 8 ஐ பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம், அதே தொகுதியில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டின்.  படிவம் 8A ல் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

படிவங்களை வழங்குவதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் கூடுதலாக 1113 வரையறுக்கப்பட்ட அலுவலர்கள் ( Designated location officer ) னுநளபையேவநன டுடிஉயவiடிn டீககiஉநசள )பணியமர்த்தப்பட்டுள்ளனர். வருகிற 11-09-2016 மற்றும் 2509-2016 ஆகிய இரு நாட்களும் சிறப்பு வாக்காளர்கள் சேர்க்கை முகாம் நடைபெறும், அம்முகாம் நாட்களில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தொடர்புடைய வாக்காளர்களிடமிருந்து கேட்புரிமம் மற்றும் ஆட்சேபணைகளை  ( Claims and objections ) உரிய படிவங்களில் பெற்றுக்கொள்ள ஆஜரில் இருப்பார்கள், இவ்வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்.

மேற்படி தங்கள் பெயரை சேர்க்க. நீக்க. உரிய மாற்றம் செய்ய வாக்காளர்கள் நேரடியாக உரிய படிவம் மு்லம் விண்ணப்பிக்க இயலாவிடில். online மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்,    விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.elections.tn.gov.in

இன்று வெளியிடப்படும் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதி தவிர மற்ற 7 சட்ட மன்றத் தொகுதிகளுக்குரியவை ஆகும், தஞ்சாவூர் சட்ட மன்றத்தொகுதிக்கு மட்டும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை. 2017 தொடர்பான பணிகள் பின்னர் தனியே மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு,ஆ,அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பாக அதன் மாவட்ட தலைவர் திரு,ரெ,இளங்கோ.    பகுஜன் சமாஜ; கட்சி சார்பாக அதன் மாவட்ட தலைவர் திரு,மு,அரங்கராசன. காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் முன்னாள் மாவட்ட தலைவர் திரு,கே,சி,செங்குட்டுவன். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பாக அதன் மாவட்;ட செயலாளர் திரு,ஆர்,மனோகரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அதன் மாவட்ட பொருளாளர் திரு,ந,பாலசுப்ரமணியன். தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் மாநில பொறுப்பாளர் திரு,ஆர்,எஸ்,காpகால சோழன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பாக அதன் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் திரு,துரை,திருஞானம். திராவிட முன்னேற்றக்கழகம் சார்பாக அதன் பொதுக்குழு உறுப்பினர் ச,முரசொலி. தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக அதன் நகர கழக செயலாளர் திரு,எஸ்,எஸ,அடைக்கலம் ஆகியோர்கள்  கலந்து கொண்டனர்.


அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் பகலில் எரியும் சோடியம் மின் விளக்குகள் !

அதிராம்பட்டினம், செப். 01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையோரத்தில் காணப்படும் சோடியம் மின் விளக்குகள் பகலில் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை கல்லூரி முக்கத்திலிருந்து பேருந்து நிலையம் வரையிலான சாலையில் 10 க்கும் மேற்பட்ட மின்கம்பத்தில் சோடியம் மின் விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அனைத்து மின் விளக்குகளும் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதிரையில் தோண்டிய குழியை மூடாததால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதி !

அதிராம்பட்டினம், செப். 01
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை, சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, அதிராம்பட்டினம் பேரூராட்சி சிஎம்பி லேன் பகுதி விகேஎம் ஸ்டோர் அருகே குழி தோண்டி குழாய்கள் புதைக்கும் பணி நடந்தது. 15 நாட்கள் ஆனநிலையில் இதுவரை தோண்டிய  குழியை மூடவில்லை. சிறுவர் சிறுமிகள் அதிகளவில் புழங்கி வரும் இப்பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இவ்வழியே பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள், டூவீலர் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரிதும் பாதிக்கின்றனர்.

கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளத்தைச் சுற்றி மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குழியில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் தோண்டிய குழியை உடனே மூட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

ஹஜ் யாத்ரீகர்களுக்கு மதினா விமான நிலையத்தில் தேவையான உதவிகள் !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 31
புனித மதினா நகரின் கவர்னர் இளவரசர் பைசல் பின் சல்மான் அவர்கள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடனான ஆலோசணைக்குப் பின் இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் உதவுவதையே முக்கிய இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, மதினா வழியாக ஹஜ் செய்யவரும் யாத்ரீகர்கள் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் ஹஜ் கடமையை நிறைவேற்றிடும் வகையில் தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மதினா விமான நிலையத்திலுள்ள 90 கவுன்டர்களிலும் 24 மணிநேரமும் அலுவலர்கள் பணியாற்றுவர் என்றும், ஹஜ் யாத்ரீகர்களின் ஆவணங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர் என்றும் போலியான ஆவணங்கள் மூலம் உள்நுழைபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் சில மோசடிக் கும்பல் உங்களுக்கு பதிலாக நாங்கள் ஹஜ் செய்கிறோம், அதற்கான கட்டணம் 4500 ரியால்கள் என்று விளம்பரம் செய்து ஏமாற்றி வருகின்றனர். இந்த பிராடு பேர்வழிகளிடம் சிக்கி பொருளாதாரத்தை இழப்பதுடன் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத இந்த செயலால் ஹஜ்ஜின் நன்மையையும் இழக்க நேரிடுவதோடு பாவத்தையும் சம்பாதிக்க நேரிடும் என இஸ்லாமிய அறிஞர்களும் அரசும் எச்சரித்துள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்