.

Pages

Wednesday, November 2, 2016

துபாயில் விபத்தில்லா டாக்ஸி ஓட்டுனர்கள் கெளரவிப்பு !

அதிரை நியூஸ்: துபாய், நவ-02
விதி வலியது என்பார்கள், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்ததுடன் சர்வதேச உறவுகள் குறித்த பாடத்தில் முதுகலை பட்டம் (Masters in International Relations) பெற்றவருமான 39 வயதுடைய முன்தஸிர் ஹூசைன் என்பவர் துபையில் 2008 ஆம் ஆண்டு முதல் துபை போக்குவரத்து துறைக்கு (RTA) சொந்தமான துபை டேக்ஸி கார்ப்பரேசனில் (DTC) டேக்ஸி ஒட்டி வருகிறார்.

அது மட்டுமல்ல கடந்த 9 வருடங்களாக எவ்வித விபத்துக்கள் ஏற்படுத்தாமலும், சாலை விதிமீறல் அபராதங்கள் ஏதுமின்றியும், இதுவரை எந்த வாடிக்கையாளரும் இவர் மீது சிறு புகார் கூட தெரிவிக்காத நிலையில் டேக்ஸி ஒட்டியதற்காகவும் துபை சாலை போக்குவரத்து துறையால் கொளரவிக்கப்பட்ட 50 சிறந்த டேக்ஸி ஓட்டுனர்களில் இவர் முதன்மையானவர்.

துபையில் சட்டத்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வேலை தேடியவருக்கு கடைசியாக கிடைத்ததோ டேக்ஸி ஓட்டுனருக்கான பணி தான், கிடைத்த வேலையை பொருந்திக் கொண்டு செய்வதால் வாழ்க்கையும் திருப்தியாக செல்கிறதாம்.

அதேபோல், கடந்த 3 வருடத்தில் விபத்திலாமல் டேக்ஸி ஓட்டியதற்காக கோஹர் அலி என்ற பாகிஸ்தானி ஓட்டுனரும், பிங்க் டேக்ஸி (Pink Taxi) எனப்படும் பெண்களுக்காக பெண் ஒட்டுனர்களால் இயக்கப்படும் டேக்ஸி பிரிவிலிருந்து 3 வருடங்களாக விபத்து ஏற்படுத்தாத ஓரே பெண் ஓட்டுனராக பிலிப்பைன்ஸை சேர்ந்த மெலானி மன்குலப்னான் என்பவரும் 50 பேரில் ஒருவராக கௌரவிக்கப்பட்டனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
கோஹர் அலி

மெலானி மன்குலப்னான்

ஐகோர்ட் தடை உத்தரவால் அதிரையில் பத்திரப்பதிவு மந்தம் !

அதிராம்பட்டினம், நவ-02
அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பதிவு செய்யக்கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, அதிராம்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவோ, அங்கீகாரம் இல்லாத நிலம், கட்டிடங்களைப் பத்திரப்பதிவு செய்யவோ அனுமதிக்கக் கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள், கட்டிடங்களைப் பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகமெங்கும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாதந்தோறும் சராசரியாக நடந்து வந்த 300 க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு தற்போது குறைந்துள்ளது. மேலும் பத்திரப்பதிவு அலுவலகம், பொதுமக்களின் வருகை குறைந்து வெறிச்சோடியாக காணப்படுகிறது.

இதுகுறித்து, ரியல் எஸ்டேட் புரோக்கர் அதிரை மைதீன் கூறுகையில், 'அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஐகோர்ட் தடை உத்தரவால் இப்பகுதியில் மனைகள் வாங்குவது, விற்பது கடும் பாதிப்படைந்துள்ளது. அதிராம்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் சராசரியாக 300க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடைபெறும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, ரியல் எஸ்டேட் மந்தநிலை காரணமாக ஏற்கனவே பத்திரப்பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. தற்போது ஐகோர்ட் தடை உத்தரவால் பத்திரப்பதிவு செய்வது அறவே குறைந்துள்ளது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது' என்றார்.

'சட்டத்தை மீறிய' சவூதி இளவரசருக்கு சவுக்கடி தண்டனை நிறைவேற்றம் !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, நவ-02
கடந்த மாதம் தான் ஒரு சவுதி இளவரசர் ஒருவருக்கு 'கொலைக்கு கொலை' என்ற இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது முழு உலகின் பார்வையையும் ஆச்சரியத்துடன் சவுதியை நோக்கி திருப்பியது.

இந்நிலையில், மேலும் ஒரு இளவரசருக்கு கடந்த திங்கட்கிழமையன்று மாலை சவுக்கடியுடன் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ள செய்தியை சவுதியிலிருந்து வெளிவரும் OKAZ எனும் அரபு தினசரியில் இன்று செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜெத்தா நகர சிறையில் நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனை, 'சட்டத்தை மீறிய குற்றத்திற்காக' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர என்ன குற்றமென விளக்கமாக சொல்லப்படவில்லை. சவுக்கடியை தொடர்ந்து இளவரசர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
* File Image

இல்லந்தோறும் இணையம் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு !

"இல்லந்தோறும் இணையம்' திட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் விவரம்:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள இணைய சேவை உரிமத்தை பயன்படுத்தி, "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில், அதிவேக அகண்ட இண்டர்நெட் சேவைகளை மாவட்ட தலைநகரங்களில் வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் -சிறப்பான சேவையின் காரணமாக இந்தத் திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து இரண்டாம் கட்டமாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இண்டர்நெட் சேவைகளை வருவாய் பங்கீட்டு முறையில் வழங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விருப்பம் கோரும் விண்ணப்பத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tactv.in)   இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 15, மாலை 3 மணி.

விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் தொழில் தொடங்க ஏதுவாக, தேசிய வங்கியிலிருந்து கடன் பெறவும் உதவி செய்யப்படும் அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tuesday, November 1, 2016

100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் ! ( படங்கள் )

தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி பொது தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் நேர்மையாக வாக்களிப்பது தொடர்பாக வல்லம் பேரூராட்சி பகுதி பேருந்து நிலையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மாதிரி வாக்குச்சாவடியும், 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும், வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்பு பிரச்சாரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள்  தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், அவர்கள் முன்னிலையில் இன்று (1.11.2016) நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் வலிகாட்டுதலின்படி வாக்காளர்களிடையே வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் குறைந்த அளவு வாக்குப்பதிவு நடைபெற்ற கிராமங்களை தேர்ந்தெடுத்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்காளர்கள் வாக்களிப்பது நமது உரிமை.  நமது உரிமையை விட்டு கொடுக்காமல் நேர்மையாகவும், நியாயமாகவும், அச்சமின்றியும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்.   வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வாக்காளர்களிடையே தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் ஒவ்வொரு கிராமாக தேர்வு செய்து தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று வல்லம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது குறித்து மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், வருகின்ற தேர்தலில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.  இதை தொடர்ந்து வல்லம் பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீடுவீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

வல்லம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் வல்லம் பேரூராட்சியின் உதவி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தனி வட்டாட்சியர் வெ.பூங்கொடி  தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் திருமதி.பூங்கோதை, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

குவைத்தில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் 'நம்பர் பிளேட்' அகற்றப்படும் !

அதிரை நியூஸ்: குவைத், நவ-01
குவைத்தில் சாலை விதிகளை மீறுவோர் மற்றும் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை பார்க்கிங் செய்வோரை திருத்த குவைத் போலீஸார் வித்தியாசமான மன உளச்சல் தரும் தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சாலை விதிமீறல் குற்றங்கள் அதிகமதிகம் இளைஞர்களாலேயே செய்யப்படுவதாக கூறும் குவைத் காவல்துறை இனிமேல் முறையாக பார்க்கிங் செய்யவிட்டாலோ அல்லது போக்குவரத்திற்கு தடங்கள் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டாலோ அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை கழட்டி எடுத்து சென்றுவிடுவர் மேலும் என்ன காரணத்திற்காக நம்பர் பிளேட் அகற்றப்பட்டது அந்த நம்பர் பிளேட்டை மீண்டும் எந்த அலுவலகத்தில், எந்த அதிகாரியை சந்திக்க வேண்டும் என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி விட்டு செல்வார்கள்.

நம்பர் பிளேட் இல்லாத நிலையில் வாகனங்களை இயக்குவது குவைத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை பகுதிகளும் இந்த புதிய நடவடிக்கைக்கு உட்பட்டதே.

20 குவைத் தினாரை அபராதமாக செலுத்தி ஒரு நாள் கழித்து அதிகபட்சம் 4 மாதங்களுக்குள் நம்பர் பிளேட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நம்பர் பிளேட் இல்லாத நிலையில் வாகனத்தை எடுத்துச் செல்ல விரும்புவோர் போலீஸ் அதிகாரிகளின் அனுமதியுடன் ரெக்கவரி வாகனத்தில் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும், ஒட்டிச் செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

துபாயில் அதிவேகமாக செல்லும் வாகனத்தை துல்லியமாகக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் !

அதிரை நியூஸ்: துபாய், நவ்-01
துபாய் சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பலவிதமான சாலைவிதிகளுடன் அதிவேகமாக செல்லுவோரை படம் பிடிக்கும் ரோடார் கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக வாகனத்தை செலுத்துவோர் கேமராக்கள் அருகே வரும் போது வேகத்தை குறைத்து நல்ல பிள்ளையாக வாகனத்தை ஓட்டிச்செல்வர் பின்னர் மீண்டும் தலைதெறிக்க வேகமெடுக்கும் வாகனம் அடுத்த கேமராவை பார்க்கும் போது தான் 'பம்மும்'. இப்படியாக, ரேடார் கேமராவுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையில் நடைபெறும் 'டாம் அன்ட் ஜெர்ரி' விளையாட்டுக்களை கட்டுப்படுத்த இதோ வந்துவிட்டது புதிய தொழிற்நுட்பம்.

அதாவது, ஒரு ரேடார் கேமராவிலிருந்து அடுத்த கேமிரா இருக்குமிடத்திற்கு எவ்வளவு வேகத்தில் வந்திருப்பார் என்ற தூரத்தையும் நேரத்தையும் வேகத்தையும் 'கூட்டி கழித்து கணக்கு போட்டு' பிடிக்கும் வைட்ரோனிக் அல்லது புருஜ் ரேடார் (Vitronic or Burj Radar) என அழைக்கப்படும் புதிய தொழிற்நுட்பத்தை விரைவில் துபையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர் ஆனால் எப்போது முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறதென சொல்லப்படவில்லை எனவே, அதுவரை டேஞ்சரஸ் என்ஜாய்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அபுதாபியில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி !

அதிரை நியூஸ்: நவ்-01
அபுதாபியில் மூன்று ஒருநாள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இ .டி .ஏ மெல்கோ அணியும் மற்றும் எம்.எம்.சி சி அணியும் பங்கு பெற்றது. இதில் இரண்டு அணிகளிலும் தலா ஒரு புள்ளி எடுத்து இறுதி மூன்றாவது இருபது ஓவர் மேட்ச் அபுதாபி சகாமா மைதானத்தில் கடந்த அக்-25 ந்தேதி நடைபெற்றது.

முதலில் எம்.எம்.சி சி அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தன மேலும் எம்.எம்.சி சி அணியின் சார்பாக கார்த்திக் அதிகபட்சமாக 27 ரன்களும் மற்றும் சாந்து செய்யது 24 ரன்களும் எடுத்தார்கள்.

மேலும் இ .டி .ஏ மெல்கோ அணியின் சார்பாக பௌலர் ராஜ்கபூர் மற்றும் உதுமான் தலா இரண்டு விக்கெட் எடுத்தார்கள் மேலும் பின்பு ஆடிய இ .டி .ஏ மெல்கோ அணி 15 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து கோப்பையினை தட்டிச்சென்றது மேலும் இ .டி .ஏ மெல்கோ அணியின் சார்பாக அதிகபட்சமாக கான் 52 ரன்களும் ரிபாய்தீன் 14 ரன்களும் எடுத்தார்கள் எம்.எம்.சி சி அணியின் சார்பாக தப்ரே ஆழம் , இபுறாஹிம் , சாம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

மேலும் இந்த டௌர்ன்மெண்ட்க்கு கோப்பை ஸ்பான்சார் செய்யத முஹம்மது ஹசன் மற்றும் யாஷ்யா மக்தூம் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக லாபிர் , மற்றும் கார்த்திக் பங்கு கொண்டார்கள் மேலும் இந்த போட்டியை சிறப்பாக நடத்தி தந்த பி.எஸ்.காஜா முஹைதீன் , தப்ரே ஆலம் மற்றும் சாந்து செய்யதுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.