இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி. சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் கடந்த செப்டம்பர் மாதம், 174, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி நீங்கலாக மற்ற 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்றது. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு. தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, எதிர்வரும் 05-01-2017 அன்று வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் சேர்க்கை சுருக்கத் திருத்தப் பணியை ஆய்வு செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தால் பார்வையாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று 02-12-2016 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் மாற்றம் தொடர்பாக வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் கும்பகோணம் சார்ஆட்சியர், தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர்கள். தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர்கள் மற்றும் தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் திருவையாறு வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்,
மேற்படி பார்வையாளர் முனியநாதன், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை முன்னிலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.