.

Pages

Saturday, June 2, 2018

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மவ்லவி. ஏ.எஸ் அகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். மவ்லவி முகமது யூசுப், மவ்லவி அப்துல் ஹாதி முப்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அண்மை காலமாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பண்டிகை காலங்கள் மற்றும் இன்ன பிற விசேஷ தினங்களின் போது, இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்செல்லும் இளைஞர்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு, படுகாயங்கள், அதன் மூலம் குடும்பத்தாருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பீடு, மன உளைச்சல், போலீஸ் சட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.

இதில், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் தலைவர் மு. முகமது அபூபக்கர், துணைத் தலைவர் அ. முகைதீன் மன்சூர், பொருளாளர் பேராசிரியர் ஜெ. செய்யது அகமது கபீர், தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், செயலாளர் ம.செ ஜபருல்லா, பொருளாளர் பகுருதீன், கடற்கரைத்தெரு ஜமாத் சார்பில், அதன் துணைத் தலைவர் அகமது ஹாஜா, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஆஃப்ரின் நெய்னா முகமது, கீழத்தெரு ஜமாத் சார்பில், அதன் தலைவர் தாஜுதீன், செயலாளர் சேக்தாவூது, பொருளாளர் என்.எம்.எஸ் மன்சூர், லயன் எம்.ஏ அப்துல் ஜலீல், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளி நிர்வாகக்கமிட்டி சார்பில் அகமது அனஸ், மர்ஜூக் நெசவுத்தெரு மாஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத் தலைவர் முகமது முகைதீன், துணைத் தலைவர் ஜபருல்லா, மஸ்ஜித் பிலால் நகர் பள்ளி முத்தவல்லி எஸ்.எம்.ஏ அகமது கபீர் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் ~ இந்நாள் நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

கூட்ட முடிவில், இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்செல்வதால் இளைஞர்களுக்கு ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெற்றோர்கள் மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது ~ அறிவுரை வழங்குவது எனவும், இவற்றை மீறும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்கிற எச்சரிக்கையை துண்டு பிரசுர அறிவிப்பாக வெளியீடுவதென முடிவு செய்யப்பட்டது.

மேலும், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகளின் அடுத்தக்கூட்டத்தை பெருநாள் சந்திப்பாக நடத்துவதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன.
 

சவூதி தமாமில் அதிரை பைத்துல்மால் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 02
அதிரை பைத்துல்மால் தமாம் கிளை மாதாந்திரக் கூட்டம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமாம் கார்னிஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
 
 
 

துபையில் TIYA அமைப்பு நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 01
துபையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அமீரக  TIYAவின் இப்தார் நிகழ்ச்சி

கடந்த 5 ஆண்டுகளாக அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் (TIYA)  சார்பாக துபையில் நடைபெற்று வந்த இப்தார் எனும் நோன்பு திறப்பு மற்றும் முஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி இன்று 6 வது வருடமாக மிகச்சிறப்புடன் நடைப்பெற்றது.

அபூ ஹாயில் பகுதியில் அமைந்துள்ள ஹம்ரியா பூங்காவில் வழமைபோல் இவ்வருடமும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மேலத்தெரு முஹல்லாவாசிகள், குடும்பத்தினர்கள், அதிரையின் தெரு ஜமாத் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பிற ஊர் சகோதரர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்தார் நிகழ்வுகளை அமீரக  TIYA நிர்வாகிகள் ஒழுங்கு செய்திருந்தனர். மேலும் மேலத்தெரு முஹல்லாவாசிகள் பலர் ஸ்பான்சர் செய்திருந்தனர்.  நிர்வாகிகள், உறுப்பினர்கள், முஹல்லாவாசிகள் என அனைவரும் உற்சாகத்துடன் களப்பணிகளிலும், உணவு தயாரிப்பிலும், உபசரிப்பிலும் ஆர்வமுடன் ஈடுபட்டனர். இறுதியாக, கலந்து கொண்ட முஹல்லாவாசிகளுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும், உடல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நல்கியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

களத்திலிருந்து
அதிரை அமீன்
 
 
 
 
 
 
 

Friday, June 1, 2018

கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு!

பேராவூரணி ஜூன்.01-
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியின் (இருப்பு - முடச்சிக்காடு) புதிய முதல்வராக முனைவர் வெ.செந்தமிழ் செல்வி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். புதிதாக பொறுப்பேற்ற கல்லூரி முதல்வரை, பேராசிரியர்கள் ராணி, பழனிவேலு, மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர் சாமிநாதன் மற்றும் மாணவ, மாணவிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முனைவர் வெ.செந்தமிழ் செல்வி கூறுகையில், " வரும் ஜூன் 4  ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு  முதல்கட்டமாக அனைத்து பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை  கலந்தாய்வு நடைபெறும். அன்றைய தினமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் மதிப்பெண் பட்டியல், சாதி சான்று, மாற்றுச் சான்றிதழுடன் வரவேண்டும். தேர்வு செய்யப்படுவோர் கல்லூரி கல்விக்கட்டணத்தை செலுத்த தயாராக வரவேண்டும். அரசு விதிமுறைப்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும்" என்றார்.

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ~ வீடு வீடாகச் சென்று கள ஆய்வு!

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுவது குறித்து பொது மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின்  அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் காணப்படும் குறைகளைக் களையவும் தகுதியுடைய விடுபட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை ஒவ்வொரு வீடாக சென்று கள ஆய்வுபணி மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டு கள ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2175 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வாக்காளர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடு அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது,  வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர் பட்டியலில் அனைவரது பெயர்களும் விடுபடாமல் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் வெவ்வேறு இடங்களில் இல்லாமல்  ஒரே பாகத்தில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் சரிபார்க்கும் பணி மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும். இக்கள ஆய்வுப் பணியின்போது வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் த’;கள் வீட்டிற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் வருகைதரும்போது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயர் வாpசையாக ஒன்றன் பின் ஒன்றhக இல்லாமல் வேறு பாகத்தில் இடம் பெற்றிருந்தாலோ அல்லது பெயர். முகவரி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளவேண்டியிருந்தாலோ அக்குறைபாடுகளை அவர்களிடம் தெரிவித்து சரி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்,  அதனடிப்படையில் தற்போது 01-01-2018ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தொடர் திருத்தப்பணியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் அதாவது 02-01-2000க்கு முன்னர் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பிக்கலாம், அத்துடன் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் வசித்தவர்கள் யாரேனும் குடிபெயர்ந்து சென்றிருந்தாலோ அல்லது இறந்திருந்தாலோ அவ்விபரத்தினைத் தங்கள் வீட்டிற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A, பெயர் நீக்கம் செய்திட படிவம் 7, பெயர். முகவரி ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொண்டிட மற்றும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வண்ண புகைப்படமாக மாற்றம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ப் பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளிக்கலாம். இக்கள ஆய்வு பணியானது வருகிற 20-06-2018 வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்காணும் விபரப்படி வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் ( நுடநஉவடிசயட சுநபளைவசயவiடிn டீககiஉநச ) உரிய ஒப்பளிப்பு ஆணை பிறப்பித்த பின்னர் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இடம் பெறும்;,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர் அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம்  மூலம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி வாக்காளர் பட்டியலில் சாpயாக இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடவும், தவறு ஏதுமிருப்பின் அவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க,  நேரடியாக படிவம் 6 பூர்த்தி செய்து அளிக்க இயலாவிட்டால். டீடேiநேடூ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.   டீடேiநேடூமு்லம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி றாற.நடநஉவiடிளே.வn.படிஎ.in

தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (01.06.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட செய்து முடிக்க வேண்டும். தென்மேற்கு பருவ மழையின் போது, பொது மக்கள் வெள்ள சேதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  மாநகராட்சி பகுதியில் பாலங்கள் மற்றும் சாலைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது அதனை வெளியேற்ற மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் ஆகியவை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.  பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட ஏரி, குளங்களில் தாழ்வான கரைகளை  கண்டறிந்து உடைப்பு ஏற்படா வண்ணம் பலப்படுத்த வேண்டும். 

மேலும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். நீர்வரத்து வாய்க்காலை சரி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கொசு முட்டைகள் உற்பத்தியாகாத வண்ணம் உரிய காலக்கெடுவிற்குள் தூய்மை செய்தல் வேண்டும். நீரினால் பரவும் நோய்களை தடுக்க தேவையான அளவு குளோரின் கலந்த நீரினை மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்தல் வேண்டும். 

தீயணைப்புத் துறையினர் வெள்ளக் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  வருவாய்த்துறையினர் வெள்ள காலங்களில் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை உயிரிழப்புää குடிசை பாதிப்பு தொடர்பான தினசரி அறிக்கை அளிக்க வேண்டும்.  கிராமங்களில் பயிர் சேதம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமக் கணக்குகளில் பதிவு செய்ய வேண்டும்.  நிவாரண மையங்களான மாநகராட்சிää நகராட்சிää அரசு பள்ளிகள்ää சமுதாய கூடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொது மக்களுக்கு உடனுக்குடன் மருத்துவ வசதி செய்வதற்கு சுகாதாரத்துறையினர் மருத்துவக்குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  ஆம்புலன்ஸ் கூடிய மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்திட ஜேசிபி இயந்திரங்கள்ää மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொதுப்பணித்துறையினர் ஏரிää குளம்ää வாய்க்கால் ஆகியவற்றில் ஆக்ரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுப் பணித்துறையினர் ஆற்று கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆறுகள் மற்றும் ஏரிகளில் புற்கள்ää காட்டாமணக்கு செடிகள் இருந்தால்  அகற்றிட வேண்டும்.

உணவு பொருள் வழங்கல் துறை மழைக் காலங்களில் போதிய அத்தியாவசியப் பொருட்களான அரிசிää பருப்புää உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

மீன்வளத்துறையினர் பேரிடர் காலங்களில் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் கைபேசி எண் குறித்த விவரங்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கால்நடை துறையினர் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிக் கல்வி துறையினர் மழை காலங்களில் பொது மக்களை பள்ளிகளில் தங்க வைக்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்

தென்மேற்கு  பருவ மழையின் போது அனைத்துத்துறை அலுவலர்களும் அந்தந்த துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை முன்னெச்சரிக்கையாக செய்து முடித்து தென் மேற்கு பருவ மழை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் மற்றும் அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அல் அமீன் ஜாமிஆ பள்ளி இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 01
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மே 17 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டேக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 600 க்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 

அல் அமீன் ஜாமிஆ பள்ளியில் டேக்ஸி ஓட்டுனர்கள்-உரிமையாளர்கள் சார்பில் இஃப்தார் சிறப்பு ஏற்பாடு ~ பங்கேற்க அழைப்பு!

அதிராம்பட்டினம், ஜூன் 01
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலில் வழமைபோல் இவ்வருடமும் இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு கஞ்சி விநியோகம் மற்றும் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மே 17 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டேக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நோன்பாளிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அதிராம்பட்டினம் பேருந்து நிலைய டேக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.