.

Pages

Monday, June 4, 2018

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை ~ அதிகபட்சமாக திருவிடைமருதூர் 66 மி.மீ பதிவு!

அதிரை நியூஸ்: ஜூன் 04
தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): 
கும்பகோணம் 12,
மஞ்சலாறு 27.2,
திருவிடைமருதூர் 66 ,
வெட்டிக்காடு 5.6,
பாபநாசம் 21,
பட்டுக்கோட்டை 2.2,
திருவையாறு 6
ஒரத்தநாடு 1.2,
ஈச்சன்விடுதி 2,
லோவர் அணைக்கட் 4,
திருக்காட்டுப்பள்ளி 1,

பதிவாகியது.

அதிரையில் களைகட்டும் சஹர் நேர விருந்து உபசரிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி மற்றும் நாம் மனிதர் அமைப்பின் சார்பில், இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலான் முழுவதும் 'சஹர்' நேர விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி களை கட்டி வருகிறது. அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் வளாகம் மற்றும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள நாம் மனிதர் கட்சி அலுவலகம் ஆகிய இருவேறு இடங்களில், கடந்த மே 17 ந் தேதி (ரமலான் பிறை 1) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தக்வா பள்ளிவாசலில்...
அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி சார்பில், சஹர் நேர விருந்து உபசரிப்பு பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், தொலை தூரப் பயணிகள், சஹர் நேர உணவு தயார் செய்ய இயலாதவர்கள், விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், வெளியூர் பணியாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அமரவைக்கப்பட்டு விருந்து பரிமாறப்படுகிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 3.40 மணி வரை நடைபெறுகிறது. அதிரையின் பிரபல மேஸ்திரி சாலிகு தயாரிப்பில், அதிரையில் பிரசித்தம் பெற்ற பிரியாணி, அஞ்சு கறி, தால்ச்சா, மீன் குழம்பு, சாம்பார், மீன் வறுவல், கோழி வறுவல், காய்கறி கூட்டு, பொறியல், புளியாணம் (ரசம்), தொக்கு, சுவிட் உள்ளிட்டவை தினமும் வழங்குகின்ற அறுசுவை உணவு வகைகளில் இடம் பிடித்துள்ளன.

முன்னதாக, சஹர் உணவை உண்டு நோன்பு வைக்கும் நோன்பாளிகள் ஒவ்வொருவருக்கும் தக்வா பள்ளிவாசல் ரமலான் கமிட்டி சார்பில் டோக்கன் வழங்கப்படுகிறது.

நாம் மனிதர் கட்சி சார்பில்.... 
தினந்தோறும் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள அக்கட்சி அலுவலக விருந்தினர் பகுதி வளாகத்தில் நடைபெறும் சஹர் நேர 'சஹன்' விருந்து உபசரிப்பில், தொலை தூரப் பயணிகள், சஹர் நேர உணவு தயார் செய்ய இயலாதவர்கள், விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள், வெளியூர் பணியாளர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நோன்பாளிகள் கலந்துகொண்டு பயனடைகின்றனர். இதுதவிர, இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறிமுறையாக ஏற்றவர்களுக்கு சஹர் உணவை தேடிச்சென்று வழங்கி வருகின்றனர்.

உபசரிப்பின் ஒவ்வொரு சஹனிலும் தலா 4 பேர் வீதம், ஒன்றாக அமர்ந்து சஹர் உணவை உண்டு நோன்பு வைக்கின்றனர். பின்னர், அனைவருக்கும் சுடச் சுட தேநீர் வழங்கப்படுகிறது. தினமும் அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 3.30 மணி வரை நடைபெறுகிறது. இதில், அதிராம்பட்டினம் ஹயாத் ரெஸ்டாரண்ட் பிரபல மேஸ்திரி ஜாஹிர் தயாரிப்பில், அதிரையில் பிரசித்தம் பெற்ற பிரியாணி, அஞ்சு கறி, தால்ச்சா, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு, மீன் வறுவல், சாம்பார், காய்கறி கூட்டு, வறுவல், புளியாணம் (ரசம்), தொக்கு, சுவிட் உள்ளிட்டவை தினமும் வழங்குகின்ற அறுசுவை உணவு வகைகளில் இடம் பிடித்துள்ளன.

களத்திலிருந்து...
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
முகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
  
 
  
  
 
 

மரண அறிவிப்பு ~ ஹாஜி வி.எம் அப்துல் மஜீது (வயது 85)

அதிரை நியூஸ்: ஜூன் 04
அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், வி.எம் சேக் நசுருதீன் அவர்களின் சகோதரரும், எஸ். அப்துல் காதர், எஸ். முகமது புஹாரி ஆகியோரின் மச்சானும், சிராஜுதீன், அப்துல் சாதிக், சாகுல் ஹமீது, மர்ஹூம் முகமது இக்ராம், கைசர் ஆகியோரின் தகப்பனாரும், மாஜுதீன் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி வி.எம் அப்துல் மஜீது (வயது 85 ) அவர்கள் இன்று காலை மேலத்தெரு சவுக்குகொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (05-06-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Sunday, June 3, 2018

சவுதியின் பாலைவனப் பெருவெளியின் மண்ணுக்குள் புதைந்திருக்கும் வியப்புக்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 03
சவுதி அரேபியா, ஓமன், ஏமன் மற்றும் அமீரகத்தை ஒட்டியும் பரந்து விரிந்துள்ள மிகப்பெரும் பாலைவன பரப்பே ருப் அல் காலி (Rub Al Khali / Empty Quarter)  என அழைக்கப்படுகின்றது. இங்கு கடந்த வாரம் ஏமனின் சொகோற்றா தீவையும், ஓமனின் சலாலா நகரையும் புரட்டிப் போட்ட 'மெனுக்கு' எனும் சூறவளிப்புயல் இறுதியாக சவுதி அரேபியா எல்லைக்குள் வரும் ருப் அல் காலி எனும் பாலைவனப் பெருவெளியில் பெருமழையுடன் நீர்த்துப் போனது.

இந்த புயல் மழையால் ருப் அல் காலி எனும் பாலைவனப் பெருவெளியில் மிகப்பெரும் பாலைவன ஏரிகள் பல உருவாகியுள்ளன. ஏற்கனவே இந்த பாலைவனத்தில் அல் யாப்ரீன் ஓயஸீஸ் (Al Yabrin Oasis) உட்பட ஆங்காங்கே காணப்படும் பல பாலைவனச் சோலைகளும் அவற்றிலுள்ள பல நீர்ச்சுனைகளும் மணற்பள்ளத்தாக்குகளும் (Sand Dunes) உள்ள நிலையில் இந்த திடீர் நீர்த்தேக்கங்கள் பல்வேறு ஆய்வுகள் குறித்து ஆய்வாளர்களை சிந்திக்கத் தூண்டியுள்ளது. அல் யாப்ரீன் எனும் பாலைவனச் சோலை குறித்த பல குறிப்புக்களை 13 நூற்றாண்டைச் சேர்ந்த புவியியல் மற்றும் வரலாற்று அறிஞருமான யாகூத் அல் ஹமாவி அவர்கள் பல குறிப்புக்களை விட்டுச்சென்றுள்ளார்கள்.

பல வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி அல் குர்ஆனின் 89வது அத்தியாயம் சூரத்துல் பஜ்ரில் கூறப்பட்டுள்ள 'ஆது' கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட 'இரம்' தேசம் இம்மண்ணுக்கு அடியில் தான் புதைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது என்றாலும் இன்னும் யாராலும் இக்கருதுகோளை மெய்ப்பித்திடும் கண்டுபிடிப்புகளை யாரும் மேற்கொள்ளவில்லை.

இதனடியில் வரலாற்று எச்சங்களை விட பெட்ரோல், கேஸ் மற்றும் நிலத்தடி நீர் போன்ற வளங்களும் குவிந்துள்ளன. தண்ணீரை சுமார் 4 கி.மீ ஆழத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ் ஏஜ் (Ice Age) எனப்படும் பனி காலத்தில் பனிக்கட்டிகள் நிறைந்த பிரதேசமாக இது இருந்திருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. சுமார் 5,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நீர்ச்சுனைகள் மற்றும் பாலைவனச் சோலைகளின் இருப்பால் இங்கு ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என பலமாக நம்பப்படுகிறது. நீர்ச்சுனைகளை சுற்றி கண்டெடுக்கப்பட்டுள்ள பழங்காலத்து அம்பு முனைகள் இங்கு மீன் வேட்டை நடைபெற்றுள்ளதை தெரிவிக்கின்றது. இங்கு மாதிரி ஆய்வுகளில் தோண்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்கல் அல் ஹசாவில் காணப்படும் சுண்ணாம்புக் கற்களை ஒத்ததாக இருக்கின்றது என்றாலும் இதன் அடியில் புதைந்துள்ள வியப்புகள் ஒருநாள் வெளிப்படலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனடியில் வரலாற்று எச்சங்களை விட பெட்ரோல், கேஸ் மற்றும் நிலத்தடி நீர் போன்ற வளங்களும் குவிந்துள்ளன. தண்ணீரை சுமார் 4 கி.மீ ஆழத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி அல் குர்ஆனின் 89வது அத்தியாயம் சூரத்துல் பஜ்ரில் கூறப்பட்டுள்ள 'ஆது' கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட 'இரம்' தேசம் இம்மண்ணுக்கு அடியில் தான் புதைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது என்றாலும் இன்னும் யாராலும் இக்கருதுகோளை மெய்ப்பித்திடும் கண்டுபிடிப்புகளை யாரும் மேற்கொள்ளவில்லை.
‏ 
89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:7
89:7 اِرَمَ ذَاتِ الْعِمَادِۙ‏ 
89:7. (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:8
89:8 الَّتِىْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۙ‏ 
89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:9
89:9 وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۙ‏ 

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 
 
 
 
 

ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலி வழங்கல்!

பட்டுக்கோட்டை ஜூன்.03
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மருத்துவமனைக்கு ரூ 6 ஆயிரத்து 500 மதிப்பிலான சக்கர நாற்காலி (வீல் சேர்) வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் ஷேக் நியாசுதீன்
தலைமை வகித்து, சக்கர நாற்காலியை வழங்கி பேசினார்.
ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் எம்.பாண்டியன் முன்னிலை வகித்தார். 

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராணி அசோகன் வரவேற்றார். ரோட்டரி சங்க செயலாளர் எஸ்.பைசல் அகமது, பொருளாளர் ஏ.சக்திவேல், டாக்டர்கள் எஸ்.முருகானந்தன், சரவணன், சிவா, பாலகுமார், கே.சுப்பிரமணியன், ஐ கேர் சுல்தான் இப்றாகீம் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.

அமீரகத்திற்கு தனியாக வரும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடு (முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஜூன் 03
அமீரகத்திற்கு தனியாக வரும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெற்றோர்களின் அங்கீகாரக் கடிதம் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல் சம்பவங்களை தடுக்குமுகமாக அமீரக குடியேற்றத் துறை, துபை போலீஸ் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனம் ஆகியவை நடப்பு ஜூன் 1 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்கள் விமானங்களில் பெற்றோர்கள் இன்றி தனியாக பயணிக்க வேண்டுமாயின் கட்டாயம் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதங்களை (Authorisation letter) இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளன.

இந்த ஒப்புதல் அங்கீகாரக்கடிதம் ஒரு விண்ணப்பம் பாரம் வடிவில் வழங்கப்படும். இவற்றில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்வதுடன் அமீரகத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள் குறித்த விபரங்களையும் குறிப்பிட வேண்டும். பெற்றோர்கள் இன்றி குடும்ப உறவுகள் மற்றும் காப்பாளர்களுடன் வருகை தரும் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

தனியாக பயணிக்கும் சிறார்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்களே பெற்றோர்களின் அங்கீகாரக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் துபை இமிக்கிரேசன் அதிகாரிகளின் சரிபார்ப்பிற்குப் பின் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபரிடம் சிறார்களை ஒப்படைப்பர்.

இந்த நடைமுறையில் தவறுகள் ஏதும் நிகழ்ந்தாலோ அல்லது விண்ணப்பக் கடிதத்தில் முறையாக விபரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தாலோ சிறார்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதுடன் அமீரகத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வருபவருக்கு விசாரணைக்குப் பின் அபராதம் மற்றும் சிறை தண்டனைகள் வரை கிடைக்கலாம் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / PTI / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

மரண அறிவிப்பு ~ ரகுமான் பீவி (வயது 72)

அதிரை நியூஸ்: ஜூன் 03
அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் வி.கே.எம் செய்கு நசுருதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் கே.எம் தாஜுதீன்  அவர்களின் மனைவியும், மர்ஹூம் கமால் பாட்சா, மர்ஹூம் அப்துல் ரெஜாக், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரியும், வி.கே.எம் சகாபுதீன், வி.கே.எம் நஜ்முதீன், என். மொய்தீன் ஆகியோரின் மாமியாரும், 'நிஜாம் மட்டன் ஸ்டால்' ராஜிக் முகமது அவர்களின் மாமியும், சேக்தாவூது அவர்களின் தாயாருமாகிய ரகுமான் பீவி (வயது 72) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (03-06-2018) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

எதிர்வரும் ஜூன் 15 ம் தேதி நோன்பு பெருநாள் வாய்ப்பு ~ சவுதி, குவைத் நாடுகளின் வானியல் வல்லுனர்கள் கருத்து!

அதிரை நியூஸ்: ஜூன் 03
எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி வெள்ளியன்று நோன்பு பெருநாளாக இருக்க வாய்ப்பு என சவுதி, குவைத் நாடுகளின் வானியல் வல்லுனர்கள் கருத்து.

புனித ரமலான் மாதத்தின் நோன்பு தற்போது உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நோன்பு பிறை பார்த்தலின் அடிப்படையில் 29 அல்லது 30 நாட்களாக பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்நிலையில் சவுதி மற்றும் குவைத் வானியல் வல்லுனர்கள் எதிர்வரும் ஜூன் 14 ஆம் தேதியுடன் இவ்வருட ரமலான் 29 நாட்களுடன் பூர்த்தியாக 99.99 சதவிகிதம் வாய்ப்புள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

சவுதி வானியல் வல்லுனர்களான அப்துல்லா அல் மஸ்னாத் (பேராசிரியர், அல் கசீம் பல்கலைக்கழகம்), வானியல் அறிஞர் காலித் அல் ஸாக், ஜியாத் அல் ஜஹ்னானி மற்றும் குவைத்தை சேர்ந்த வானியல் அறிஞர் ஆதில் அல் சஆதூன் ஆகியோர் ஒத்த கருத்தையே தெரிவித்துள்ளனர். எனினும், பிறையை கண்ணால் பார்த்த பின்பே சவுதி, குவைத் உள்ளிட்ட அரபு நாட்டு அரசுகள் முறைப்படி பெருநாட்களை அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்