.

Pages

Thursday, November 1, 2018

அமீரகத்தில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு!

அதிரை நியூஸ்: நவ.01
உலகின் 3-வது பிரம்மாண்ட புத்தக விற்பனைத் திருவிழாவான 'ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி' நேற்று அக்.31 ந் தேதி தொடங்கி, வரும் நவ.10 ந் தேதி வரை நடைபெறுகிறது. சிறப்பு அழைப்பின் பேரில், கண்காட்சியில் பங்கேற்பதற்காக அமீரகம் வந்துள்ள கனிமொழியை விமான நிலையத்தில் அமீரக பன்னாட்டு திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும், துபாய் எவர்கோல்ட் நிறுவனருமாகிய பழஞ்சூர் K. செல்வம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
 

அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல்பசு (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ.01-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் புதன்கிழமை அன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் வலையில் விசித்திரமான எடை அதிகமான ஏதோ ஒன்று சிக்கியது. ராட்சத மீன் கிடைத்திருக்கலாம் என மகிழ்ச்சியோடு, வியாழக்கிழமை அதிகாலை கரை திரும்பிய மீனவர்களுக்கு, தங்கள் வலையில் சிக்கியது கடல் பசு என தெரியவந்தது.

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி வன உயிர்க்கோளப்பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த அபூர்வ வகை கடல்பசுக்களை பிடிப்பது, அரசால் தடைசெய்யப்பட்டதாகும். அவ்வாறு பிடிபடும் கடல்பசுக்களை மீண்டும் உயிரோடு மீனவர்கள் கடலில் விட்டு விடுவது வழக்கமாகும். இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கடல்பசு வலையில் சிக்கியதையடுத்து ராஜாமடம் கீழத்தோட்டம் மீனவர்கள் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம்.பி.மோகன், இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மதுமகேஷ், ருக்மிணி சேகர் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் நிர்வாகிகள் டாக்டர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் அன்பு, கடல் பசு நண்பர்கள், மீனவர்கள் ஒருங்கிணைந்து கடல்பசுவை ஆழமான பகுதிக்கு சென்று விடுவித்தனர்.

மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்பசு சுமார் 10 அடி நீளமும், 500 கிலோ எடை கொண்டதாகவும் உள்ள பெண் கடல் பசுவாகும். இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு கடல்பசு மீனவர்கள் வலையில் சிக்கி, பின்னர் உயிரோடு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 

பண்டிகை காலங்களில் தரமற்ற உணவுப்பொருள் கடைகளில் விற்பனையா?

தஞ்சாவூர் மாவட்டம், பண்டிகை காலங்களில் தரமற்ற இனிப்பு மற்றும் பலகார பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
எதிர்வரும் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள், பலகாரங்கள், கேக் வகைகள், பேக்கரி பண்டங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவு  நிறுவனங்கள் கட்டாயம் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். பண்டிகை கால உணவுப்பண்டங்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் மீது தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப்பொருளின் பெயர், சைவ அல்லது அசைவ குறியீடு, தயாரிக்கப்பட்ட தேதி, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், காலவதியாகும் தேதி ஆகியவை குறித்த விபரச்சீட்டினை கட்டாயம் பொருத்த வேண்டும்.

உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பண்டங்களில் கலப்பட பொருட்களை உபயோகிப்பது, அளவுக்கு அதிகமான நிறமிகள் மற்றும் உணவு கலவைகளை பயன்படுத்துவது, தரமற்ற முறையில் தயார் செய்வது ஆகியவை கண்டறியப்பட்டால்,  சம்பந்தப்பட்ட உணவுக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.

பொது மக்கள் பண்டிகை காலங்களில் உணவு பாதுகாப்புத்துறை பதிவு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் நிறுவனங்களில்  மட்டுமே உணவுப்பண்டங்கள் மற்றம் பலகாரங்கள் வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உணவு பொருட்கள், பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் தொடர்பான புகார்கள் குறித்து 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ அல்லது மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலகத்தில் நேரிலோ புகார் செய்யலாம். 

அதிராம்பட்டினத்தில் 3.90 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில்
இன்று வியாழக்கிழமை மழை பெய்தது.

இன்று (நவ.01) வியாழக்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி  அதிராம்பட்டினத்தில் 3.90 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில், அதிகப்பட்சமாக மஞ்சலாறு 18.60 மி.மீ, பட்டுக்கோட்டையில் 12.60 மி.மீ, மதுக்கூரில் 2.60 மி,மீ மழை பதிவாகியது.

கத்தார் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியது!

அதிரை நியூஸ்: நவ. 01
கொல்கத்தாவிலிருந்து 100க்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட கத்தார் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியது

கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று சுமார் 100க்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட போது தண்ணீர் டேங்கர் வாகனம் மீது மோதியது எனினும் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு நலமாக உள்ளனர்.

இன்று நள்ளிரவு சுமார் 1.52 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் விமானத்தின் வயிற்றுப் பகுதி சேதமடைந்ததால் விமானம் தொடர்ந்து பறக்க அனுமதிக்கப்படாமல் பழுதுபார்ப்புக்காக கொண்டு செல்லப்பட்டது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

சவுதியில் 21 நாட்களுக்குள் தொழிலாளர் ~ ஸ்பான்சர் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண புதிய சட்டம்!

அதிரை நியூஸ்: நவ.01
சவுதியில் 21 நாட்களுக்குள் தொழிலாளர் ~ ஸ்பான்சர் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண புதிய சட்டம்

சவுதி அரேபியாவின் நீதி அமைச்சகத்தின் (Ministry of Justice) புதிய உத்தரவின்படி, ஸ்பான்ஸர் தொழிலாளர் இடையே எழும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொழிலாளர் அலுவலகங்களால் (Labor Office) அதிகபட்சம் 21 நாட்களுக்குள் சுமூகமான முறையில் (Amicably settle) பேசித் தீர்க்கப்பட வேண்டும். 21 நாட்கள் என்ற தவணைக்குள் தீர்க்கப்படாவிட்டால் அந்த வழக்குகளை தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு ஆன்லைன் (electronically submit the case to labor courts) வழியாக மாற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் 3 வகையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளன, 
1. ஸ்பான்சர் - தொழிலாளர் இடையேயான பிரச்சனைகள்,
2. முதலாளி – வீட்டுப் பணியாளர் இடையேயான பிரச்சனை,
3. முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இருவருக்கும் பொதுவாக சமூக இன்ஷூரன்ஸ் தொடர்பில் ( General Organization for Social Insurance (GOSI) pertaining to subscription, registration and compensation) போன்றவை இடையே எழும் பிரச்சனைகள் என பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் வகை: 
ஸ்பான்சார் அல்லது தொழிலாளர் எவராவது ஒருவர் தங்களுடைய வழக்கை முதலில் தொழிலாளர் அலுவலகங்களில் வழக்கை பதிவை செய்ய வேண்டும். அங்கு 21 நாட்களுக்குள் சுமூக உடன்பாடு எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சுமூக உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை எனில் அந்த வழக்குகளை ஆன்லைன் வழியாக தொழிலாளர் நீதி மன்றங்களுக்கு சட்டப்படி தீர்வு காண மாற்றப்பட வேண்டும்.

இரண்டாம் வகை: 
ஸ்பானசர் அல்லது வீட்டுப் பணியாளரிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமரச கமிட்டி 5 நாட்களுக்குள் விசாரித்து சுமூக தீர்வு ஏற்பட உதவும். இதில் தீர்வு ஏதும் எட்டப்படாவிட்டால் அடுத்த 10 நாட்களுக்குள் சமரசக் கமிட்டியே ஒரு தீர்வை வழங்கும். எனினும், இத்தீர்வில் உடன்பாடு இல்லாத ஸ்பான்சர் அல்லது வீட்டுப் பணியாளர்கள் அப்பீல் வழக்காக தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு சமரசக் கமிட்டியின் உதவியுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் வகை: 
ஸ்பான்சர் அல்லது தொழிலாளர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் முறையான குறைதீர்ப்பு ஏஜென்ஸிகளிடம் தங்களின் முறைப்பாடுகளை வழக்காக பதிய வேண்டும். தீர்வில் திருப்தியில்லாவிட்டால் மீண்டும் அங்கேயே அப்பீல் செய்யலாம். அப்பீலிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தொழிலாளர் நல நீதிமன்றங்களுக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.General Organization for Social Insurance (GOSI) pertaining to subscription, registration and compensation

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் அமீரகம் பற்றிய பழமையான கையெழுத்து ஆவணங்கள்!

அதிரை நியூஸ்: நவ.01
ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் அமீரகத்தை பற்றி பழமையான கையெழுத்து ஆவணங்கள்

ஷார்ஜாவில் 37வது ஆண்டாக சர்வதேச புத்தக கண்காட்சி நேற்று (31.10.2018) துவங்கியது வரும் நவம்பர் 10 வரை நடைபெறவுள்ளது. இந்த பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சியை ஷார்ஜாவின் ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மேற்கத்தியர்களால் எழுதப்பட்ட அமீரகம் பற்றிய குறிப்புகள் அடங்கிய கையெழுத்து பிரதிகள், அச்சுப் புத்தகங்கள் உள்ளிட்ட இந்த அரிய, விலைமதிப்புமிக்க ஆவணங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் அன்றைய காலத்தில் வணிகக் கப்பல்களில் வந்த மாலுமிகள் மற்றும் வியாபாரிகளால் எழுதப்பட்டுள்ளது.

அரங்கம் எண் 5 (Hall No.5) இல் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகள் வைத்திருக்கும் புத்தக ஸ்டால்களில் இந்த ஆவணங்கள் உள்ளன. 1841 ஆம் ஆண்டு அரேபிய வளைகுடாவிற்கு முதன்முதலாக வந்த பிரேஞ்சு மாலுமியால் எழுதப்பட்டுள்ளது.

The original 192-page manuscript account of Theogene Francois Page, captain of the French ship La Favorit, mentions the trucial shaikhdoms, although it is mainly focused on “Bahrain islands” and Muscat. The journal also contains the captain’s drawings of various aspects of life and architecture from the region.

Laurens Hesselink, owner of Antiquariaat FORUM, told Gulf News: “The work is unpublished, so it is the only one there is. We bought it from a private collector in Europe. The captain had a legible hand and it’s all very well preserved. It’s all in French, of course.”

இதன் விலை 350,000 யூரோக்கள் (சுமார் 1.45 மில்லியன் திர்ஹம்) மட்டுமே. 192 பக்க இந்த ஆவணத்தில் பஹ்ரைன் மற்றும் மஸ்கட் பற்றி அதிகம் எழுதப்பட்டிருந்தாலும் அமீரக மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் அன்றைய கட்டிடக் கலைப்பற்றியும் படங்கள் வரைந்து விளக்கியுள்ளார்.

‘Viaggio dell’Indie Orientali’ எனும் இன்னொரு நூல் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனீஸ் நகர நகை வியாபாரி காஸ்பரோ பால்பி என்பவரால் பிரேஞ்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவர் 1580 ஆம் ஆண்டுகளில் அரேபிய வளைகுடாவில் 9 ஆண்டுகள் பயணம் செய்துள்ளார். இந்த புத்தகத்தின் விலை 150,000 யூரோக்கள் (சுமார் 624,000 திர்ஹம்) மட்டுமே.

இந்த புத்தகத்தில் காணப்படும் அமீரக எமிரேட்டுகளின் அன்றைய பெயர்கள் வருமாறு:

Balbi mentions the emirates of Cherizan (Sharjah), Dibei (Dubai), Agiman (Ajman), Rafaelchime (Ras Al Khaimah), Sir Bani Yas in Abu Dhabi and other places in and around what is today the UAE. 

1950 ஆம் ஆண்டுகளில் பிரிட்டீஷ் ஆட்சியின் ராணுவ பாதுகாப்பில் இருந்த அன்றைய அமீரகத்தின் (Trucial States) கூட்டு ராணுவப் படையின் முதலாவது மேஜராக இருந்த கிரஹாம் ஏ. ஹில் என்பவரின் சேகரிப்பில் இருந்த அமீரக அரபு பாரா மிலிட்டரி படையின் ஒரிஜினல் போட்டோக்கள், ஒரிஜினல் ராணுவ ஆவணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் விலை 25,000 யூரோக்கள் (சுமார் 104,000 திர்ஹம்).

இத்துடன் அமீரக மக்களின் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் பழமையான போட்டோக்கள், தெரு மற்றும் கடைத்தெரு காட்சிகள், போலீஸாரால் தேடப்படும் நபர் பற்றிய Wanted போஸ்டர்கள், பழைய அடையாள அட்டைகள், வால் போஸ்டர்கள், பத்திரிக்கைகள் என பலப்பல பழையன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

கத்தாரில் எக்ஸிட் விசா நடைமுறை முடிவுக்கு வந்தது!

அதிரை நியூஸ்: நவ.01
கத்தார் நாட்டில் ரெஸிடென்ஸி விசாவின் கீழ் இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் ஸ்பான்சரின் அனுமதி பெற்று எக்ஸிட் விசா (Exit Visa Stamp) எனும் வெளியேறுவதற்கான விசாவையை அடித்தபின் தான் வெளியேற வேண்டும் என்றிருந்த நடைமுறை முடிவுக்கு வந்தது எனினும் உயர்மட்ட பொறுப்புக்களில் உள்ள சுமார் 5 சதவிகித ஊழியர்களுக்கு மட்டும் பழைய நடைமுறையே தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் சுமார் 2 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கத்தாரின் பல தொழிலாளர் சட்டங்கள் நவீன கால அடிமைத்தனத்தை பிரதிபலிக்கின்றன என்ற குற்றச்சாட்டு நிலவிவந்த நிலையில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளதை வைத்து The International Trade Union Confederation போன்ற அமைப்புக்கள் கத்தாருக்கு அழுத்தம் கொடுத்து வந்ததை தொடர்ந்து தொழிலாளர் விஷயத்தில் 3 ஆண்டுகளுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்திட ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா.சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (UN's International Labour Organization) 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் செய்திருந்தது.

மேலும் குறைந்தபட்சம் 750 கத்தார் ரியால்கள் மற்றும் வாழ்விட வசதிகளை செய்துதர வேண்டும் என்ற ஒப்பந்தம் ஒன்றும் எட்டப்பட்டுள்ளது என்றாலும் இந்த சம்பள விகிதத்தை மேலும் உயர்த்த பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும்  The International Trade Union Confederation வைத்துள்ளது.

Source: economictimes.indiatimes.com
தமிழில்: நம்ம ஊரான்