அதிரை நியூஸ்: ஜூலை 02
ஹஜ் செய்திகள்: ஹஜ் மற்றும் மக்காவிற்கான ஆன்லைன் பெர்மிட்டுகள் வழங்கும் பணி துவங்கியது
புனித மக்காவிற்குள் நுழைவதற்கான ஹஜ் ஆன்லைன் அனுமதிகள் muqeem portal எனப்படும் சேவை இணையத்தின் ஊடாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என சவுதி பாஸ்போர்ட் துறை (ஜவாஜத்) அறிவித்துள்ளது.
புனித மக்கா நகருக்குள் நுழைய விரும்பும் சவுதியர்கள் மற்றும் சவுதிவாழ் வெளிநாட்டினர் http://portal.elm.sa என்ற தளத்திற்குள் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் அனுமதியை (e-permit) பிரிண்ட் செய்து கொள்ளலாம், இதற்காக ஜவாஜத் அலுவலகம் செல்லத் தேவையில்லை.
மக்காவில் வழங்கப்பட்ட இகாமா, ஹஜ் பெர்மிட், வேலை அனுமதி இல்லாத எவரும் உள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மக்காவிற்குள் வெளியிலிருந்து வீட்டு வேலைகளுக்காக வரும் தொழிலாளர்கள் மற்றும் மக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் பணியாற்றுவோர் absher electronic site உள்ளே சென்று தங்களுக்கான ஆன்லைன் அனுமதியை (இ - பெர்மிட்) பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்