அதிரை நியூஸ்: ஜூன் 02
தமிழகத்தின் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தி பாதிக்காத வண்ணமும் விளை பொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் ஒளி மின்வேலியினை தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2020-2021-ம் நிதியாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட 24.03.2020 அன்று நடைபெற்ற சட்டசபை அறிவிப்பில் வேளாண்மைத் துறை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
சூரிய ஓளி மின்வேலி அமைப்பானது ஒளி மின் தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தினால் இயங்கக் கூடியது. மின் வேலியைக் கடந்து செல்ல முயலும் விலங்குகள், அந்நியர்கள் மின் அழுத்தம் காரணமாக ஏற்படும் அதிர்ச்சியால் வேலியை கடந்து சென்று விளைப்பயிர்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்களை நாசம் செய்திட இயலாது.
விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின் வேலியினை 5 வரிசை, 7 வரிசை மற்றும் 10 வரிசை அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம். சூரிய ஓளி மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு தோராயமாக 5 வரிசைக்கு ரூ.250/-ம், 7 வரிசைக்கு ரூ.350/-ம், 10 வரிசைக்கு ரூ.450/-ம் செலவாகும்.
தனிநபர் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் அல்லது 1245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் அமைப்பதற்கான செலவுத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.18 இலட்சம் மானியம் வழங்கிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசு மானியத்துடன் சூரிய ஓளி மின்வேலி அமைத்திட தஞ்சாவூர் கோட்டத்தை சார்ந்த விவசாயிகள் க.குமணன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அவர்களை 9443489403 என்ற எண்ணிலும், கும்பகோணம் கோட்டத்தை சர்ந்த விவசாயிகள் லெ.அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), கும்பகோணம் அவர்களை 94425 71176 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை கோட்டத்தை சர்ந்த விவசாயிகள் சி.எழிலன், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), பட்டுக்கோட்டை அவர்களை 94436 78621 என்ற எண்ணிலும், மேலும் கூடுதல் விவரங்களுக்கு எச்.என் கான், செயற்பொறியாளர் (வே.பொ) அவர்களை 94433 98633 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.