Wednesday, July 30, 2014
Tuesday, July 29, 2014
சைவ உணவுக்காக பட்டுக்கோட்டைக்கு படையெடுக்கும் அதிரையர்கள் !
இன்று காலை அதிரையின் பல்வேறு பகுதிகளில் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெருநாள் அன்று விசேஷமாக தயாரிக்கப்படும் காலை மற்றும் பகல் உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ஒரு மாற்றத்திற்காக இரவில் இலகுவான எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை உட்கொள்வதை வாடிக்கையாக பின்பற்றுவார்கள். குறிப்பாக சைவ உணவு வகைகளை விரும்பி சாப்பிட எண்ணுவார்கள்.
இன்று இரவு அதிரையில் உள்ள பெரும்பாலான உணவகங்களுக்கு விடுமுறை அள்ளிக்கபட்டிருப்பதால், அதிரையர்கள் அருகில் உள்ள பட்டுக்கோட்டை நகருக்கு வாகனங்களில் ஒன்றாக சென்று அங்குள்ள சைவ உணவகங்களில் இட்லி சாம்பார் ரோஸ்ட் வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இன்று இரவு மட்டும் அதிகமான அதிரையர்கள் சைவ உணவகங்களில் தென்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது.

அதிரை சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண்டாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]
குழந்தைகள் நமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள். இவர்களின் மழலைப் பேச்சு முதல் அவர்கள் செய்யும் குசும்பு வரை அருகில் இருந்து மனமகிழலாம். அதுவும் பண்டிகை காலமென்றால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பெருநாள் மற்றும் விஷேச தினங்களில் குழந்தைகள் புதுப்புது டிசைன்களில் புத்தாடை உடுத்தி நகர்ப்புறங்களில் கலர்கலராக வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அதிலும் சில துடிப்பான குழந்தைகளின் மழழைப்பேச்சும் அவரவர்களின் உடையைப்பற்றியும், பெற்றோர்களிடத்திலிருந்தும் உறவினர்களிடத்திலிருந்தும் பெறப்பட்ட காசுபணத்தைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது ரசிக்கும்படி இருக்கும்.
எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் பதியப்படும்.
பெருநாளன்று நம் அதிரை நியூஸ் குழுமத்தினரின் பார்வையில் பட்ட ஸ்வீட் பேபிகளின் கலர் ஃபுல் புகைப்படங்கள் இதோ...
அதிரையில் அதிமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு !
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிரை ஏரிபுறக்கரை நிர்வாக எல்லைக்குட்பட்ட பிலால நகர் நுழைவாயில் எதிரே அமைந்துள்ள இடத்தில அதிமுக கட்சியின் சார்பில் தேர்தல் அலுவலகம் துவக்கப்பட்டது. இதன் பொறுப்பாளாராக சாகுல் ஹமீது இருந்து வந்தார். தற்போது இந்த அலுவலகத்தில் கட்சி தொடர்பான பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சாகுல் ஹமீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருநாள் சந்திப்பு [ படங்கள் இணைப்பு ]
அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க அலுவலகத்தில் பெருநாள் கொண்டாட்டமாக இன்று மாலை சந்தித்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.
வந்திருந்த அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷரீப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். இதில் நல சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிரை பேரூராட்சி தலைவரின் பெருநாள் வாழ்த்து செய்தி ! [ காணொளி ]
சவூதி ஜித்தாவில் அய்டா நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி !
ஜித்தா ஷரபியா மற்றும் அய்டா நண்பர்களின் சார்பில் பெருநாள் சந்திப்பு ( ஈத் மிலன் ) ஜித்தா லக்கி தர்பாரில் சிறப்பாக நடைபெற்றது.
அய்டா தலைவர் ராஃபியா அவர்கள் தலைமை வகித்து நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். அய்டா முன்னாள் நிர்வாகி அஜ்வா நெய்னா மற்றும் பசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை தலைவர் சர்புதீன் மற்றும் மெப்கோ நிர்வாகி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக துணை தலைவர் ஜபருல்லா வரவேற்புரையாற்றி நோன்பு பெருநாள் சிறப்பு குறித்து விளக்கி கூறினார்.
தமாம், அப்ஹா, மதீனா ஆகிய பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கிராத் ஓதிய சிறுவர் சிறுமிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இறுதியில் அய்டா நிர்வாகி அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.
செய்தி தொகுப்பு :
அஜ்வா நெய்னா ( அய்டா முன்னாள் நிர்வாகி )

செக்கடி மேடு நண்பர்களின் உற்சாக பெருநாள் கொண்டாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]
அதிரையில் இன்று பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் வசிக்கும் உறவினர் நண்பர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் செக்கடி மேடு பகுதியில் புழங்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டது பார்த்தோர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
குறிப்பாக இரு வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் அதிமுக கட்சியின் சிறுபான்மை நலபிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் ஊர் ஒற்றுமை நலன் கருதி அங்கு கூடியிருந்த நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இருவரும் பரஸ்பரம் நலன் விசாரிப்புடன் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.
.

Subscribe to:
Posts (Atom)

.jpg)