தஞ்சாவூர் ஜூன்.27-
சேதுபாவாசத்திரம் வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், வட்டார சுகாதார ஆய்வாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம், ராஜகோபால், செல்வராஜ், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பூக்கொல்லை, குருவிக்கரம்பை, ரெட்டவயல், கொளக்குடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா. பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா. எச்சரிக்கை விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதா. பள்ளிகள், கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறிய கடைக்காரர்களிடம் அபராதமாக ரூ 2 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.