.

Pages

Sunday, May 26, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 26
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ.ஜெ முகம்மது நெய்னா கலந்துகொண்டு ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் சிறப்பு துஆ ஓதினார்.

இந்நிகழ்ச்சியில், எம்.கே.என் மதரஸா டிரஸ்ட் நிர்வாகிகள், கல்லூரி  முன்னாள் - இந்நாள் பேராசிரியர்கள், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், கல்லூரி அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிரையில் ஆதரவற்ற 240 பயனாளிகளுக்கு சேலை, சட்டைத்துணி வழங்கல்!

அதிராம்பட்டினம், மே.26
அதிரை பைத்துல்மால் அமைப்பின் சேவை திட்டத்தின் கீழ், ஆதரவற்ற பெண்களுக்கு காட்டன் சேலை, சட்டைத்துணி வழங்கும் நிகழ்ச்சி அவ்வமைப்பின் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில், அதிராம்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த ஆதரவற்ற 240 பெண் பயனாளிகளுக்கு, 'தொழில் அதிபர்' அதிரை ஹாஜி எம்.ஏ முகமது முகைதீன் வழங்கிய காட்டன் சேலை, சட்டைத்துணி வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், 'சமூக ஆர்வலர்' ஹாஜி அப்துல் ரெஜாக், அவ்வமைப்பின் நிர்வாகிகள் இசட். அப்துல் மாலிக், ஏ. முகமது முகைதீன், எம்.நிஜாமுதீன், முகமது புஹாரி, எம்.ஏ அப்துல் ஜலீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

துபையில் TIYA அமைப்பின் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ்: மே 26
துபையில் அமீரக TIYA அமைப்பின் 7-ஆம் ஆண்டு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துபையில் கடந்த 6 ஆண்டுகளாக அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் (TIYA)  சார்பாக நடைபெற்று வந்த இஃப்தார் எனும் நோன்பு திறப்பு மற்றும் மஹல்லாவாசிகளின் ஒன்று கூடல் நிகழ்ச்சி 7-வது வருடமாக  அபூ ஹாயில் பகுதியில் அமைந்துள்ள ஹம்ரியா பூங்காவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில், மேலத்தெரு முஹல்லாவாசிகள், குடும்பத்தினர்கள், அமீரக வாழ் அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பிற ஊர் சகோதரர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் துணைத்தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் என்.அப்துல் மாலிக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், TIYA அமைப்பு ஆற்றி வரும் பல்வேறு சமூக நலப் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

இஃப்தார் நிகழ்வுகளை அமீரக TIYA நிர்வாகிகள் ஒழுங்கு செய்திருந்தனர். மேலும் மேலத்தெரு மஹல்லாவாசிகள் பலர் ஸ்பான்சர் செய்திருந்தனர்.  நிர்வாகிகள், உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள் என அனைவரும் உற்சாகத்துடன் களப்பணிகளிலும், உணவு தயாரிப்பிலும், உபசரிப்பிலும் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

இறுதியாக, கலந்து கொண்ட மஹல்லாவாசிகளுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும், ஸ்பான்சர்களுக்கும், உடல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நல்கியவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Saturday, May 25, 2019

அதிரையில் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங்க வளாகத்தில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சிக்கு நலச்சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய் ஹாஜா சரீப் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஏ.சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஆர்.மன்சூர், முன்னாள் நிர்வாகி ஜெஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து சமயத்தை சேர்ந்த நலச் சங்க உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.