.

Pages

Monday, September 28, 2020

அதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் ~ உறுப்பினர்கள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் 27.09.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்து, வரவேற்றுப் பேசினார். முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், நிர்வாக அலுவலர் எம்.நெய்னா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எம்.நிஜாமுதீன் மாதாந்திர அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் சங்க நிதி நிலை அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில், அரிமா சங்க மாவட்ட ஆளுநரின் சிறப்புத் திட்டமான நடைபாதை எளிய வியாபாரிக்கு தள்ளுவண்டி ஒன்றை இலவசமாக வழங்குவது, எதிர்வரும் அக்.2 காந்தி ஜெயந்தி அன்று பசித்தோருக்கு அன்னதானம் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானிக்கப்பட்டன. அரிமா சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் பி கணபதி வாழ்த்துரை வழங்கினார். 

நிகழ்வில், சங்க புதிய உறுப்பினர் அப்துல் ரெஜாக்குக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன. முன்னதாக, கரோனா பாதிப்பில் உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்வினை, மாவட்டத் தலைவர் எம். கஜாலி முகமது தொகுத்தளித்தார்.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய உறுப்பினராக இணைந்த ஹாஜா நசுருதீன், அயூப்கான் ஆகியோருக்கு, அரிமா சங்க மாவட்ட ஒரியண்டேஷன் பிரிவுத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும், அரிமா சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில், அரிமா சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் அரிமா சங்க இயக்குநர்கள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் கே.முருகானந்தம், ஆர். செல்வராஜ், அரிமா சங்க நிர்வாகிகள் பி.பிச்சமுத்து, என்.யூ ராமமூர்த்தி, எம்.முகமது அபூபக்கர், எம். அப்துல் ரஹ்மான், எம்.நெய்னா முகமது, சி.சார்லஸ், என்.உதயகுமார், முல்லை ஆர்.மதி, எம்.அபுல் ஹசன் சாதலி, குப்பாஷா எம்.அகமது கபீர், எம்.கே.எம் முகமது அபூபக்கர், பி.உமா சங்கர், கலையரசன், எம்.ஏ முகமது அபூபக்கர், ஏ.வி.எம் வரிசை முகமது, ஏ.முகமது ஆரிப், ஒய்.முகமது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதிராம்பட்டினத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் (வீடியோ, படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.28
வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் ஓப்பந்தப் பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்த சட்டம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பட்டுக்கோட்டை (தெற்கு) ஒன்றிய செயலாளர் சத்திய விஜயன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 

திமுக சார்பில்,... 
பழஞ்சூர் கே.செல்வம், எஸ்.எச் அஸ்லம், எம்.எம்.எஸ் அப்துல் கரீம், என்.கே.எஸ் சபீர், கோடி முதலி, ஏ.எம்.ஒய் அன்சர்கான், சி.தில்லைநாதன், இன்பநாதன், எம்.பகுருதீன், முல்லை ஆர்.மதி, ஏ.எம் அப்துல் ஹலீம், வீரப்பன், கே. இத்ரீஸ் அகமது, முன்னாள் கவுன்சிலர்கள் எச்.முகமது இப்ராஹீம், என்.எம் செய்யது முகமது, என்.கே.எஸ் முகமது சரீப், எஸ்.எம்.ஜி பசூல்கான், அய்யாவு, கோடி நாகராஜ், சைபுதீன், நிஜாமுதீன், இ.வாப்பு மரைக்காயர், நூர் முகமது (நூவண்ணா), பிரின்ஸ் முகமது ராவுத்தர், எம்.எம்.எஸ் அன்வர், எம்.எம்.எஸ் புஹாரி, எம்.எம்எஸ் சம்சுதீன், எம்.எம்.எஸ் பனாசர்கான், வீரசேகரன், டி.முத்துராமன், இராமநாதன், ஏ.வி.எம் வரிசை முகமது, இராஜமடம் இளங்கோ, பள்ளிகொண்டான் மகாலிங்கம், மாளியாக்காடு ரமேஷ், ஏரிப்புறக்கரை நாகூரான், ரமேஷ்

திமுக இளைஞர் அணி சார்பில்...
அதிரை ஒய்.மைதீன், கு.கதிர், ஏ.அகிலன், டேவிட் கிருபாகர பாண்டியன், ஏ.அப்துல் நாசர்

காங்கிரஸ் சார்பில்... 
காசிம் தமீம் அன்சாரி, எஸ்.எம் முகமது முகைதீன், நாராயண சாமி, அதிரை பாருக், பி.திலகராஜ் கட்டபொம்மன், ராஜேந்திரன், சாகுல் ஹமீது, மவ்லவி முகமது காசிம்

மதிமுக சார்பில்...
வடுகநாதன், 

விடுதலை சிறுத்தைகள் கட்சி....
புருசோத்தமன், பன்னீர்செல்வம், சுசைந்திரன், பார்த்திபன், ரஜினி வளவன், கார்த்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...
என்.காளிதாஸ், கே.ஹாஜா முகைதீன், ஏ.எச் பசீர் அகமது, கே.பிச்சமுத்து, இ.முகமது பாருக், எஸ். மீரா சாகிப், எம்.சுப்பிரமணியம், அப்துல் முனாப்

சிபிஐ ( எம்) சார்பில்...
எஸ்.கந்தசாமி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்...
கே.கே ஹாஜா நஜ்முதீன், அ.ஷேக் அப்துல்லாஹ், மணிச்சுடர் ஏ.சாகுல் ஹமீது, மு.காதர் முகைதீன், எம்.ஆர் ஜமால் முகமது, எம்.கே.எம் முகமது அபூபக்கர், 

தமுமுக / மமக சார்பில்...
எம். நஸ்ருத்தீன் ஸாலிகு, எச்.செய்யது புஹாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, எம்.நெய்னா முகமது, எஸ்.அஸ்லம், எம்.அஸ்லம், சிராஜுதீன்

அதிரை அகமது ஹாஜா தலைமையில், சேக்காதியார், சேக்தாவூது, அப்துல் ஹலீம், சேக் நசுருதீன், சாதிக் பாட்சா

   


10 வயது மாணவா் 50 காா்களின் டயா்களை கை விரல்களின் மேல் ஏற்றி சாகசம்!

பட்டுக்கோட்டை, செப்.28 
பட்டுக்கோட்டை அருகே 10 வயது மாணவா், தொடா்ச்சியாக 50 காா்களின் டயா்களை தனது கை விரல்கள் மேல் ஏற்றச் செய்து சாதனை முயற்சியை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தினாா்.

பட்டுக்கோட்டை வட்டம்,. தாமரங்கோட்டை உம்பளாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த என்.ரவிச்சந்திரன் ~ வேம்பு தம்பதியின் 10 வயது மகன் நாராயணமூா்த்தி. அதே ஊரில் அரசுப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வரும் இவா், இ கிங்கோ ஜூ ரியோ என்ற கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா் ஆவாா்.கரோனா விழிப்புணா்வுக்காகவும், உலக சாதனை முயற்சியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை பட்டுக்கோட்டை~ முத்துப்பேட்டை பிரதான சாலையில், துவரங்குறிச்சி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் தனது இரு கை விரல்களையும் சாலையில் வைத்து, தொடா்ச்சியாக 50 காா்களின் டயா்களை விரல்களின் மேல் ஏற்றச் செய்து சாதனை முயற்சியை நிகழ்த்தினாா்.

நிகழ்வை, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.புகழேந்தி கணேஷ் தொடக்கி வைத்தாா். பல்வேறு அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், கராத்தே மாணவ, மாணவிகள் என பலா் சாலையின் இருபுறமும் நின்று மாணவரின் முயற்சியை கைத்தட்டி உற்சாகப்படுத்தினா். நிறைவில், இ கிங் கோ ஜூ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளியின் தலைமைப் பயிற்சியாளா் ஏ.இளையராஜா நன்றி கூறினாா்.


மதுக்கூரில் முதலுதவி பயிற்சி (படங்கள்)

மதுக்கூர், செப்.28
கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD ), தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் மதுக்கூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

நிகழ்வுக்கு, மதுக்கூர் பேரூர் தலைவர் எஸ். நூர் முகமது தலைமை வகித்தார்.துணை தலைவர் எச். இம்தியாஸ் அகமது, செயலாளர் பி. முகமது இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவரும், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி கலைப்புல முதன்மையர் பேராசிரியர் கே செய்யது அகமது கபீர் அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்து விளக்கிப்பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக, மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் எஸ்.கார்த்திகேயன், பட்டுகோட்டை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் ஆர். செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். என்.கலையரசன், கே.ஹரிஹரசுதன் ஆகியோர் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அளிக்கும் முதலுதவி குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர்.

முன்னதாக. துணைச் செயலாளர் ஏ. முகமது பாசித் வரவேற்றார். துணைச்செயலாளர் ஏ. அப்துல் மாலிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவில், பொருளாளர் ஜெ. முகமது சஹிம் நன்றி கூறினார்.