தஞ்சாவூர் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இ.அ பää அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றுதுää.தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004ஆம் வருடம் முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்தக் குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லை. இந்த ஆண்டு (31.01.2021) ஞாயிற்றுக்கிழமை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இ.அ.பää அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துää ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயைப் பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சு10ழலில் இருந்து அறவே ஒழிக்கலாம். இந்த முகாம் மூலம் சுமார் 2ää29ää141ää தஞ்சாவூர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மேலும் நகரப்பகுதியில் 128 மையங்களும் ஊரகப் பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.இப்பணியில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள்ää துணை சுகாதார நிலையங்கள்ää பள்ளிக்கூடங்களää; அரசு மருத்துவமனைகள்ää தனியார் மருத்துவமனைகள்ää பேருந்து நிலையங்கள்ää புகைவண்டி நிலையங்கள்ää கோயில்கள்ää சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கும் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகளுக்கு 51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பொது சுகாதாரத்துறைää ஊட்டச்சத்து துறைää சமூகநலத்துறைää வருவாய்துறைää கல்வித் துறைää ஊரக வளர்ச்சித்துறைää நகராட்சிகள்ää உள்ளாட்சித்துறை மற்றும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்ää மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் பங்கேற்று இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. உபயோகப்படுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்துää தயாரிக்கப்படும் இடத்தில் இருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்தின் வீரியம் குறையாமல் குளிர்பதன தொடர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.
தொடர்ந்து 31.01.2021 இன்று பிறந்த குழந்தைகளுக்கும் மேலும் இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்து இருந்தாலும் இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பு மருந்து அரசின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலை நிமித்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தற்காலிகமாக இம்மாவட்டத்தில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
எனவே போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 2 சொட்டு போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மருததுரைää துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு. ரவீந்திரன்ää மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்