.

Pages

Saturday, November 5, 2016

திருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)

அதிரை நியூஸ்: துபாய், நவ-05
திருச்சி மற்றும் அபுதாபிக்கு இடையே நேரடி விமான சேவை 2017 பிப்ரவரி 1 முதல் துவங்கவுள்ளது அனைவரும் அறிந்ததே மேலும் இச்சேவையின் மூலம் அனைத்து வளைகுடா நாடுகளையும் இணைக்கும் போக்குவரத்தையும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான நிறுவனங்கள் இணைந்து வழங்கவுள்ளன.

ஏற்கனவே எதிர்வரும் ஜனவரி 6 முதல் ஏப்ரல் 6 வரை திருச்சிக்கு வளைகுடா நாடுகளுக்கான சேவைகளை வழங்கி வரும் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு விமான நிலைய ரன்வே சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி உட்பட தென்னிந்தியாவுக்கான பகல் நேர சேவைகளை குறைக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு திருச்சி மார்க்க விமான பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பஹ்ரைன் - திருச்சி:
எதிஹாத் 376 விமானம் மாலை 5 மணிக்கு பஹ்ரைனிலிருந்து புறப்பட்டு 7.15 மணிக்கு அபுதாபியை சென்றடையும்.

*ஜெட் ஏர்வேஸ் 215 விமானம் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.10 மணியளவில் திருச்சியை சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 2.25 மணிகள்

திருச்சி – பஹ்ரைன்:
# ஜெட் ஏர்வேஸ் 216 விமானம் அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு காலை 7.10 மணிக்கு அபுதாபியை சென்றடையும்.

எதிஹாத் 371 விமானம் அபுதாபியிலிருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு பஹ்ரைனை சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 1.40 மணிகள்

தம்மாம் - திருச்சி:
எதிஹாத் 328 விமானம் மாலை 4.45 மணிக்கு தம்மாமிலிருந்து புறப்பட்டு மாலை 7.05 மணிக்கு அபுதாபி வந்தடையும்.

*பின்பு மேற்கூறியவாறு திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 2.35 மணிகள்

திருச்சி – தம்மாம்:
# மேற்கூறியவாறு திருச்சியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் புறப்பட்டு அபுதாபி வந்தடையும்.

எதிஹாத் 327 மாலை 2.45 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு தம்மாம் வந்தடையும்.

காத்திருப்பு நேரம்: 7.35 மணிகள்

தோஹா – திருச்சி:
எதிஹாத் 396 விமானம் மாலை 4.50 மணிக்கு தோஹாவிலிருந்து புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு அபுதாபி வந்தடையும்.

*பின்பு மேற்கூறியவாறு திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 2.15 மணிகள்

திருச்சி – தோஹா:
# மேற்கூறியவாறு திருச்சியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் புறப்பட்டு அபுதாபி வந்தடையும்.

எதிஹாத் 393 விமானம் காலை 8.55 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு காலை 9.05 மணிக்கு தோஹாவை வந்தடையும்.

காத்திருப்பு நேரம்: 1.45 மணிகள்

ஜெத்தா – திருச்சி:
எதிஹாத் 334 விமானம் காலை 11.10 மணிக்கு ஜெத்தாவிலிருந்து புறப்பட்டு பகல் 2.45 மணிக்கு அபுதாபி வந்தடையும்.

*பின்பு மேற்கூறியவாறு திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 6.55 மணிகள்

திருச்சி – ஜெத்தா:
# மேற்கூறியவாறு திருச்சியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் புறப்பட்டு அபுதாபி வந்தடையும்.

எதிஹாத் 333 விமானம் காலை 8.15 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு காலை 10.20 மணிக்கு ஜெத்தாவை சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 2.15 மணிகள்

குவைத் - திருச்சி:
எதிஹாத் 304 விமானம் மாலை 4.20 மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு மாலை 7.05 மணிக்கு அபுதாபியை வந்தடையும்.

*பின்பு மேற்கூறியவாறு திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 2.35 மணிகள்

திருச்சி – குவைத்:
# மேற்கூறியவாறு திருச்சியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் புறப்பட்டு அபுதாபி வந்தடையும்.

எதிஹாத் 301 விமானம் காலை 8.15 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு காலை 9.10 மணிக்கு குவைத் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 1.05 மணிகள்

மதீனா – திருச்சி:
எதிஹாத் 346 விமானம் அதிகாலை 5.30 மணிக்கு மதினாவிலிருந்து புறப்பட்டு காலை 8.05 மணிக்கு அபுதாபியை வந்தடையும்.

*பின்பு மேற்கூறியவாறு திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 13.35 மணிகள்

திருச்சி – மதீனா:
# மேற்கூறியவாறு திருச்சியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் புறப்பட்டு அபுதாபி வந்தடையும்.

எதிஹாத் 345 விமானம் (அடுத்த நாள்) அதிகாலை 2 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு மதீனா சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 16.50 மணிகள்

ரியாத் - திருச்சி:
எதிஹாத் 318 விமானம் மாலை 4.25 மணிக்கு ரியாத்திலிருந்து புறப்பட்டு மாலை 7.10 மணிக்கு அபுதாபியை வந்தடையும்.

*பின்பு மேற்கூறியவாறு திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 2.30 மணிகள்

திருச்சி – ரியாத்:
# மேற்கூறியவாறு திருச்சியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் புறப்பட்டு அபுதாபி வந்தடையும்.

எதிஹாத் 317 விமானம் காலை 10.15 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு காலை 11.15 மணிக்கு ரியாத் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 3.05 மணிகள்

மஸ்கட் - திருச்சி:
எதிஹாத் 387 விமானம் மாலை 6.05 மணிக்கு மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு மாலை 7.15 மணிக்கு அபுதாபியை வந்தடையும்.

*பின்பு மேற்கூறியவாறு திருச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 2.25 மணிகள்

திருச்சி – மஸ்கட்:
# மேற்கூறியவாறு திருச்சியிலிருந்து ஜெட் ஏர்வேஸ் புறப்பட்டு அபுதாபி வந்தடையும்.

எதிஹாத் 382 விமானம் காலை 8.50 மணிக்கு அபுதாபியிலிருந்து புறப்பட்டு காலை 10.05 மணிக்கு மஸ்கட் சென்றடையும்.

காத்திருப்பு நேரம்: 1.40 மணிகள்

முக்கிய குறிப்பு:
இந்த இரு விமான இணைப்பு பயண டிக்கெட்டுகளை நேரடியாக எதிஹாத் மற்றும் ஜெட் ஏர்வேஸ் இணைய தளங்களில் பெற முடியாது.

பயணச் சீட்டுக்களை பெற விரும்புவோர் அங்கீகாரம் பெற்ற டிராவல் ஏஜென்ட்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தளங்களான Cleartrip, Yatra, Makemytrip போன்றவைகள் மூலம் மட்டுமே பெற முடியும்.

ஆங்கில வடிவம்: அபிஜித் SSC
பகிர்வு: நண்பர் நவ்ஷாத் (திருப்பனந்தாள்)
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. Nice article, thanks for taking your time to elaborate it. The information provided can be very useful. I have a blog too, you can visit it at:

    > 2017 DOWNLOAD <

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.