.

Pages

Sunday, November 27, 2016

பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கும்பகோணம் ஷரியத் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல் !

பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஷரியத் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத்துகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்திய இந்த பொதுக் கூட்டத்துக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை வகித்தார். கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளை கேள்விக்குறியாக்கி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிசெய்யும் மத்திய அரசை கண்டிப்பதோடு, வழிகாட்டும் நெறிமுறையில் உள்ள சட்டப்பிரிவு 44-யை நீக்க வேண்டும்.

தமிழக பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்களில் பொருத்தப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்ற முயற்சி செய்து பதற்றத்தை ஏற்படுத்தும் காவல் துறையின் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ரூ. 500 மற்றும் ரூ. 1000 செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

குலக்கல்வி கொள்கையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பது, தமிழக சிறைகளில் நீண்ட காலமாக குற்றம் நிரூபிக்கப்படாமல் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளையும், அனைத்து ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் தமிழக அரசு கருணையின் அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவரும், முன்னாள் எம்.பியுமான கே.எம். காதர்மொய்தீன், தமிழ் மாநில ஜமா அமாஅத்துல் உலமா சபை பொது செயலாளர் முஹம்மது ரிழா, முன்னாள் வக்பு வாரியத் தலைவரும், தமுமுக மூத்த தலைவருமான ஹைதர் அலி, எஸ்டிபிஐ கட்சி மாநிலத்தலைவர் தெஹ்லான் பாக்கவி உட்பட இஸ்லாமிய அமைப்பின் தலைவர்கள் பலர் கண்டன உரையாற்றினர்.

முன்னதாக, மாவட்ட தலைவர் ஜபர் சாதிக் நூரி தொடக்கவுரையாற்றினார். ஜமா அமாஅத்துல் உலமா மாவட்ட செயலாளர் அய்யூப்கான் வரவேற்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.