செல்லாக்காசு மோடியின் பழைய நோட்டு ஒழிப்பு அறிவிப்பால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியும், நடுத்தர வர்க்கம் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளதாலும், அன்றாட வாழ்க்கைக்கு அத்தியவசியமான வணிகமும், வாங்கும் நிலையும் ஸ்தம்பித்துள்ளதாலும் இந்தியப் பொருளாதாரமே சவக்குழியை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதை நிதர்சன நிஜங்கள் உணர்த்துகின்றன.
இந்திய மக்களுக்கு அன்னிய செலாவணி என்னும் அமுதசுரபி முதன்முதலாக வற்றிப்போயுள்ள செய்தி நிச்சயம் நல்ல செய்தியல்ல. ஆம், நம்முடைய இந்தியாவிற்கு வருமானத்தை அள்ளித்தந்து கொண்டிருந்த வெளிநாடுவாழ் அடித்தட்டு தொழிலாளர்கள், நடுத்தரவர்க்க ஊழியர்கள், சுய தொழில் புரிவோர் என அனைவரும் பணம் அனுப்ப முடியாமலும், அனுப்பினாலும் தேவைக்கு ஏற்ப எடுக்க முடியாது என்ற நிலையினாலும் எக்ஸ்சேஞ்ச் வழியாக வங்கிக் கணக்குகளுக்கும், பண சுழற்சிக்கு தேவையான பண இருப்பு இல்லாததால் வெஸ்டர்ன் யூனியன் போன்ற உடனடி சேவை மையங்கள் வழியாக அனுப்புவதையும் தவிர்த்தே விட்டனர் என்பதை இந்திய வாடிக்கையாளர்கள் இன்றி அமீரகத்தில் ஈயாடும் எக்ஸ்சேஞ்சுகள் கவலையோடு தெரிவிக்கின்றன. இவை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மில்லியன் ரூபாய்களை அனுப்பிக் கொண்டிருந்தவை.
இன்று அடிமாட்டு விலைக்கு சரிந்துள்ள நமது இந்திய பணத்தின் மதிப்பு இன்னும் சரிந்து டாலருக்கு எதிராக விரைவில் 72.50 என மதிப்பிழக்கும் என டச் பேங்க் ஆய்வு கூறுகிறது (Deutsche Bank research report).
முன்பெல்லாம் இந்திய பணம் சர்வதேச சந்தையில் சரிவை காணும் போதெல்லாம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்ப எக்ஸ்சேஞ்சுகளை ஈக்களாய் மொய்த்தவர்கள் என்பதும் இன்று அதைவிட பல மடங்கு சரிந்தும் சீந்தக்கூட ஆளில்லை என்ற பரிதாபகர நிலை.
மேலும், அமீரகத்தின் தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகள் வேறு இந்திய வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் குறுஞ்செய்தி மூலம் இந்தியாவுக்கு பணம் அனுப்ப வருமாறு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கின்றன.
இந்தியாவிலுள்ள நமது உறவினர்களின் அன்றாட தேவைக்கும், குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் பணம் தேவைப்படுமே, பிறகென்ன தான் வழி? ஆக, குஜராத்தி மார்வாடிகளின் காட்டில் வட்டியும் முதலுமாக கருப்புப்பண மழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்யும் அவ்வளவே. என்னதான் மேடைநாடக நடிகராக இருந்தாலும் சொந்த மாநில பாசத்தையும், மார்வாடிகளின் மீதுள்ள அக்கறையையும் விட்டுக் கொடுக்க முடியுமா, என்ன!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
இது ஆரம்பம்தான் !
ReplyDeleteஅப்போ இது டிரைலரா.. ?
ReplyDelete