.

Pages

Sunday, November 27, 2016

துபாயில் பார்வையாளர்களை கவரும் பிரமாண்ட எமிரேட்ஸ் ஏர்பஸ் மாதிரி விமானம் ( படங்கள் )

அதிரை நியூஸ்: துபாய், நவ-27
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை 'ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டார்ம்' (Operation Desert Storm) என்ற பெயரில் அமெரிக்கா ராணுவம் சதாம் ஹூசைன் ஆட்சியின் கீழிலிருந்த ஈராக் நாட்டின் மீது மிகப்பெரும் படையெடுப்பை நடத்தியது. இந்த முதலாம் வளைகுடா போரின் (First Gulf War) போது ராணுவ விமான தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக்கின் ராணுவ விமானங்களை குறிவைத்து சரமாரி குண்டுவீசி அழித்தன ஆனால் அமெரிக்கா மாங்கு, மாங்குகென்று பறந்து அழித்த அத்தனையும் அட்டையில் செய்யப்பட்ட கட்-அவுட் (Cut-Out) விமானங்கள் என்று தெரிய வந்தவுடன் உலகம் சிரித்தது.

ஆனால் துபை மிராக்கிள் கார்டனில் நிறுத்தப்பட்டிருக்கும் பிரமாண்ட எமிரேட்ஸ் A380 விமான மாடல் உங்களை சிலிர்க்கச் செய்யும். இன்று (27.11.2016) முதல் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

சில விசேஷங்களின் போது பொதுவாக சிறிய ரக வாகனங்களை செயற்கை மற்றும் இயற்கை பூக்களை ஒட்டி அலங்கரிப்பர், அந்த அலங்கரிப்புக்கூட சில மணிநேரங்களில் முடிவுக்கு வந்துவிடும் ஆனால் இந்த விமான பூந்தோட்டம் சுமார் 5 லட்சம் உயிர் பூச்செடிகளால் தினமும் சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்க்கப்படுகிறது. இந்த பூந்தோட்டம் பூத்துக் குலுங்கும் போது சுமார் 50 லட்சம் மலர்கள் விமானத்தை இயற்கையாக அலங்கரித்திருக்கும்.

சுமார் 7,460 சதுர மீட்டரில் நிறுவப்பட்டுள்ள இந்த மாதிரி எமிரேட்ஸ் A380 விமானத்தை சுமார் 200 ஊழியர்கள் தினமும் 10 மணிநேரம் என 6 மாதங்களில் 30 டன் இரும்பை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

நிஜமான எமிரேட்ஸ் A380 விமானத்தை போன்றே 72.93 மீட்டர் நீளமுள்ள இந்த விமான பூந்தோட்டம் முழுமையாக மலரும் போது சுமார் 100 டன் எடையுள்ளதாக மாறியிருக்கும். ஒரிஜினல் எமிரேட்ஸ் விமானத்தின் எடை 575 டன் என்பது கவனிக்கத்தக்கது.

Source: Emitares 247
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.