.

Pages

Wednesday, November 30, 2016

வங்கியில் பணம் வழங்காததால் அதிரையில் 2 வது முறையாக சாலை மறியல் !

அதிராம்பட்டினம், நவ-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணம் வழங்காததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் 2 வது முறையாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு,
நாளுக்கு நாள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகளிலும் பணம் தட்டுப்பாடு நீடிப்பதால், பெரும்பாலான வங்கிகள் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை காலை அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளை வாசலில் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களிடம் பணப்பட்டுவாடா செய்ய வங்கியில் போதிய அளவு பணம் இல்லை என அந்த வங்கி அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை வங்கி முன் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் சிலருக்கு பணப்பட்டுவாடா செய்ய போதிய அளவு பணம் இல்லை என கூறியதால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் 100 பேர் வங்கி முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடங்கள் ஈசிஆர் சாலையில் வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டது.

தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடமும், வங்கி அதிகாரிகளிடமும் பேச்சு நடத்தினார். இதையடுத்து, தஞ்சாவூரிலிருந்து பணம் வந்தபின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என வங்கி தரப்பில் கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.