தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ராமமூர்த்தி ( வயது 25 ). டெம்போ வாகன ஓட்டுனர். இவர் நேற்று வியாழக்கிழமை இரவு அதிராம்பட்டினம் ஈசிஆர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். வாகனம் தவ்ஹீத் பள்ளி அருகே சென்ற போது குறுக்கே சைக்கிளில் முதியவர் ஒருவர் திடிரென புகுந்தார். இதனால் நிலைதடுமாறி ராமமூர்த்தி சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.
பிரத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலை உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete