.

Pages

Wednesday, November 23, 2016

சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினரின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், நவ-23
அதிராம்பட்டினம், சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினரின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுனைத்தெரு சங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க இளைஞர் அமைப்பின் தலைவர் எஸ். அகமது அனஸ் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர் கே. இத்ரீஸ் அகமது, செயலாளர் எம்.எஃப்.முகமது சலீம், இணைச்செயலாளர் வழக்கறிஞர் இசட். முஹம்மது தம்பி, பொருளாளர் ஏ.சேக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

கூட்டத்தில் வரும் 26-11-2016 அன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கும்பகோணத்தில் நடைபெறும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும், இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் வரும் டிசம்பர் மாதம் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நடத்துவது குறித்தும் விவாதிக்கபட்டன.

கூட்ட முடிவில் தலைவர் அகமது அனஸ் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் சங்க இளைஞர் அமைப்பினர் பலர் கலந்துகொண்டார்கள்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.